What is Diagnosis? செய்வதன் மூலம் நோயை கண்டறிய முடியும்..!

What is Diagnosis? செய்வதன் மூலம் நோயை கண்டறிய முடியும்..!

ஆன்லைனில் அறிகுறிகளைத் தேடிய பிறகு நீங்கள் ஒரு நோயைக் கண்டறியும் பட்சத்தில், உங்களது கருதுகோள் கிட்டத்தட்ட அந்த குறிப்பிட்ட நோய்க்கு மிக நெருக்கமாக இருக்கலாம் என்று ஒரு புதிய அறிக்கை ஒன்றில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What is Diagnosis

What is Diagnosis?

ப்ரிகாம் மற்றும் மகளிர் மருத்துவமனை மற்றும் ஹவர்ட் மருத்துவப் பள்ளி சுகாதாரக் கொள்கைத் துறையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஆன்லைனில் அறிகுறிகளைத் தேடுவதால், தங்களது அன்புக்குரியவரின் நோயை மக்கள் துல்லியமாகக் கண்டறிவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Google Search ஆய்வில் பங்கேற்றவர்கள் ஆன்லைனில் அறிகுறிகள் சம்பத்தப்பட்ட நோய்களை தேடுவதால், அவர்களுக்கு இருக்கும் அறிகுறிகளின் தீவிரத் தன்மையை தெரிந்து கொள்கின்றனர்.

இதனால் அவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டுமா? அல்லது சிறிது காலம் காத்திருக்கலாமா? என்று தீர்மானித்துக் கொள்கின்றனர்.

மேலும், தங்களுக்கு ஏற்பட்டுள்ள அறிகுறிகள் குறித்த அதிக கவலை பங்கேற்பாளர்களிடம் பெரிதாக இல்லை என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆய்வின் ஆசிரியர் ஒருவர் கூறியதாவது, “நோயாளிகளுக்கு Google Search செய்து பாருங்கள்’ என்று சொல்வது சரியா என்று எங்கள் ஆய்வு தெரிவிக்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்விற்காக, ஆராய்ச்சியாளர்கள் சுமார் 5,000 பேரிடம் பல்வேறு அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளின் ரெக்கார்டுகளை கொடுத்து படிக்கச் சொன்னார்கள்.

பின்னர் அதற்கான நோயறிதலைக் கண்டறியுமாறு அவர்களிடம் கேட்கப்பட்டது.

இதற்காக பங்கேற்பாளர்கள் ஆன்லைனில் அறிகுறிகளைத் தேடுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இதன் மூலம் பங்கேற்பாளர்கள் தாங்கள் கண்டறிந்த நோய்களின் விவரங்களை கொடுத்தனர்.

பங்கேற்பாளர்களுக்கு கொடுக்கப்பட்ட அறிகுறிகளின் படி ஆன்லைனில் கண்டறிந்த நோயறிதல் விவரங்களும் நோயாளிகளின் உண்மையான நோயறிதலும் மிகவும் துல்லியமாக இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் இந்த ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு சில வரம்புகளும் இருந்தன.

அதாவது, அறிகுறிகளை அனுபவிக்கும் நபரை தங்களுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கற்பனை செய்துக் கொள்ள வேண்டும் என பங்கேற்பாளர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும் ஒருவர் தனக்கு ஏற்பட்டுள்ள அறிகுறிகளை கொண்டு ஆன்லைனில் நோய்களைக் கண்டுபிடிக்கும் பட்சத்தில் அது அவருக்கு உண்மையில் பொருத்தமானதாக இருக்குமா என்பது இந்த ஆய்வில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

ஏனெனில், இந்த ஆய்வில் பங்கேற்பாளர்கள் வேறு நோயாளிகளின் அறிகுறிகளை மட்டுமே ஆன்லைனில் ஆராய்ந்தனர்.

அறிகுறிகளை Google Search செய்து பார்ப்பது சிறந்ததா?

ஒரு தீவிரமான அறிகுறிக்கான காரணத்தை கண்டுபிடிக்க ஆன்லைனை பயன்படுத்துவது தேவையற்ற பதட்டத்திற்கு வழிவகுக்கும்.

குறிப்பாக உங்களுக்கு ஒரு எளிய சொறி பிரச்சனை இருந்தாலும் ஆன்லைனில் தேடும் போது உங்களுக்கு தோல் புற்றுநோயாக இருக்கலாம் என்று கூறும்.

இதனால் உங்கள் அறிகுறிகளைத் தேடுவது தவறான நோயறிதலுக்கும் தவறான சிகிச்சைக்கும் வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நோயறிதல் மற்றும் சிகிச்சையைப் பற்றிய தகவல்களை வழங்கும் 23 வலைத்தளங்கள் உள்ளன.

Also Read: Beef -க்கு பதிலாக Chicken-ஐ மாற்றினால் அமெரிக்க நீர் பற்றாக்குறை குறையுமாம்..!

அவை 34 சதவீதம் நேரம் மட்டுமே சரியான நோயறிதல் தேடலில் முதலாவதாக வந்தது என்று ஆய்வு விளக்கியுள்ளது.

எனவே, அறிகுறிகள் குறித்து ஆன்லைனில் தேடுவதை விட ஒரு மருத்துவர் அல்லது மருத்துவ ஆலோசகரிடம் ஆலோனை பெறுவது மிக அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *