இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Yawning: நமக்கு அடிக்கடி கொட்டாவி வர இதெல்லாம் கூட காரணமா..?

Yawning: நமக்கு அடிக்கடி கொட்டாவி வர இதெல்லாம் கூட காரணமா..?

நமக்கு தூக்கம் வந்தால் கொட்டாவி விடுகிறோம். அல்லது நாம் சோர்வாக அல்லது அலுப்பாக இருக்கும் பொழுது கொட்டாவி விடுகிறோம். நமது அருகில் இருக்கும் ஒருவர் கொட்டாவி விட்டால் நாமும் உடனே கொட்டாவி விடுகிறோம்.

Yawning

சிலரை அலுவலகம் அல்லது நண்பர்கள் மத்தியில் நீங்கள் கண்டிருக்கலாம், அடிக்கடி கொட்டாவி விட்டுக்கொண்டே இருப்பார்கள்.

ஆனால், கொட்டாவி வருவதற்கு தூக்கம் வருவதும், உடல் சோர்வும் மட்டும் காரணம் இல்லை என்கின்றனர் நிபுணர்கள். வாருங்கள், இதற்கான காரணங்களை அறிந்து கொள்ளலாம்.

Yawning:

சில உடல்நல குறைபாடுகளின் அறிகுறிகளாக கூட கொட்டாவி வருகிறது. உங்களுக்கு சோர்வின்றி அடிக்கடி கொட்டாவி வந்துக்கொண்டே இருந்தால் நீங்கள் கல்லீரல் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

கல்லீரலில் பலவீனம், அல்லது செயல்திறன் குறைபாடு ஏற்பட்டால் கூட கொட்டாவி அடிக்கடி வருமாம்.

மேலும் சமீபத்திய ஆய்வில், எம்.எஸ். (Multiple Sclerosis) தாக்கம் ஏற்பட்டவர்களுக்கு அவர்களது உடலின் வெப்ப நிலையை சமநிலையில் வைத்துக்கொள்ள முடிவதில்லை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலை அதிகம் கொட்டாவி வர செய்கிறதாம்.

Healthfirst

கை, கால்களில் ஏற்படும் வலி காரணமாக அசதியால் கூட கொட்டாவி வருமாம்.

கை, கால்களில் வலிகள் ஏற்படுவதால் அது மூளைக்கு ஒருவித எரிச்சலை ஏற்படுத்தி மூளை கொட்டாவியை வர செய்யுமாம்.

அதிகமாக கொட்டாவி வர மற்றுமொரு காரணமாக கருதப்படுவது மூளையின் ஆரோக்கியம். மூளை அலர்ஜி, ஸ்ட்ரோக், போன்றவையின் அறிகுறி தான் அதிகமாக வரும் கொட்டாவி என்கின்றனர்.

மூளையின் தண்டில் ஏற்படும் புண்களினால் கூட அதிகம் கொட்டாவி வருமாம்.

அதுபோல நீங்கள் அடிக்கடி எடுக்கும் மருந்துகளால் கூட கொட்டாவி வருமாம். ஏனென்றால் சில மருந்துகள் உங்களை தூக்கநிலைக்கு எடுத்துச்செல்ல கூடியவை.

Also Read: கல்லீரலை பாதுகாக்கும் ஆப்ரிகாட் பழம் செய்யும் நன்மைகளை பாருங்க..!

அதனால் அடிக்கடி கொட்டாவி வருமாம். இப்படிப்பட்டவர்கள் உடனடியாக படுக்கைக்கு செல்வது நல்லது.

தூக்கமின்மை போன்ற தூக்க குறைபாடுகளினால் கூட அதிகம் சோர்வின்றி கொட்டாவி வரலாம்.

பெரும்பாலும் அனைவருக்கும் அதிகம் கொட்டாவி வருவதற்கு காரணமாக இருப்பது உடல் சோர்வும் மன அழுத்தமும் தான்.

சோர்வின்றி அதிகம் கொட்டாவி வந்தால், எதற்கும் மருத்தவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.