Wisdom Tooth: பல் வலி தாங்க முடியலையா..? சில எளிய தீர்வுகள் இதோ..!
Wisdom Tooth :பல் வலி தாங்க முடியலையா..? சில எளிய தீர்வுகள் இதோ..!
Wisdom Tooth முளைக்கும் போது உண்டாகும் ஒரு சிறு வலி குறித்து நாம் அனைவரும் அறிவோம்.
ஆனால் இதற்கான காரணம் குறித்து நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அதனைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.

Wisdom Tooth:
ஞானப் பல் முளைக்கும் முன் மற்ற எல்லா பற்களும் ஏற்கனவே முளைத்திருக்கும்.
ஞானப் பல் முளைக்க போதிய இடம் இருக்காது என்பதால் மற்ற பற்களை அழுத்தி தனக்கான இடத்தை பெற முயற்சிக்கும்.
இதனால் ஈறுகளில் ஒருவித அழுத்தம் உண்டாகும். இதன் காரணமாக ஈறுகள் மற்றும் பற்கள் ஆகியவற்றில் வலி உண்டாகலாம்.
சில நேரங்களில் வலியுடன் கூட ஒருவித துர்நாற்றம் ஏற்படக்கூடும். சாப்பிடுவதில் சிரமம் மற்றும் தலைவலியும் தோன்றலாம்.
இந்த வலி குறைந்தது ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நீடிக்கலாம். இவ்வளவு நேரம் இந்த வலியைத் தாங்கிக் கொள்வது சற்று கடினமான காரியம்.
சிலருக்கு பல நாட்கள் அல்லது வாரங்கள் விட்டுவிட்டு இந்த வலி தொடரலாம்.
ஒரு வலி நிவாரணி மாத்திரை பயன்படுத்தி இந்த வலியைக் கட்டுப்படுத்துவதை விட சில எளிய தீர்வுகளை முயற்சித்து இந்த வலியை கட்டுப்படுத்த முடியும்.
இதனால் பற்களில் உண்டாகும் தொற்று பாதிப்புகளைக் கட்டுப்படுத்த முடியும்.
ஞானப் பல்லால் உண்டாகும் வலியைக் குறைக்க உதவும் எளிய வீட்டுத் தீர்வுகள்:
உப்பு நீர் கொண்டு வாய் கொப்பளிப்பது:
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்கவும். உப்பு மிக அதிகம் இல்லாமல் ஒரு சிட்டிகை மட்டுமே போடவும்.
அதுவே போதுமானது. உப்பு நீர் கொண்டு வாய் கொப்பளிப்பதால் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும் மற்றும் ஈறுகள் வீக்கமடைவது குறையும்.
Also Read: எப்படி பல் துலக்கினாலும் வாயில் துர்நாற்றம் வீசுகிறதா..?
வலி நிவாரணத்திற்கு உதவும் பூண்டு:
வலி இருக்கும் பல் அல்லது ஈறுகளில் பூண்டு எண்ணெய் தடவுவதால் தாங்க முடியாத வலியும் குறையும்.
கிராம்பு எண்ணெய் ஞானப் பல்லில் தீவிர வலி ஏற்பட்டால் பற்களில் மற்றும் ஈறுகளில் கிராம்பு எண்ணெய் தடவலாம்.
இதனை பின்பற்றுவதால் வலியில் இருந்து நிவாரணம் பெற முடியும். மேலும் இதனால் வாய் ஆரோக்கியம் மேம்படும். தொற்று பாதிப்பு இருந்தாலும் கிராம்பு பயன்படுத்துவதில் எந்த ஒரு தவறும் இல்லை.
சில நேரங்களில் ஞானப் பல்லை எடுத்து விட்டால் மட்டுமே தீரக்கூடிய சில சிக்கல்களும் ஏற்படக்கூடும். அதனால் பல் மருத்துவரை அணுகுவது நன்மை தரும்.