இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Winter Fruits: குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்..!

Winter Fruits: குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்..!

குளிர்காலத்தில் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க சூப்பர் ஃபுட்கள் என்று சொல்லக்கூடிய இந்த 10 உணவு வகைகள் உதவுகிறது.

Winter Fruits

Winter Fruits:

நீங்கள் நன்றாக சாப்பிட்டால் மட்டுமே உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடல் ஆரோக்கியம் சிறந்து விளங்கும்.

தற்போது, பருவத்தில் மாற்றம் தெரிய ஆரமித்துவிட்டது; எனவே, இந்த வானிலை கொண்டு வரும் மாற்றங்களுக்கு ஏற்றவாறு, உங்கள் உடலை நீங்கள் நன்கு மாற்றியமைக்க வேண்டும்.

அதற்கு நீங்கள் சத்தான உணவுகளை உங்கள் உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நாம் குளிர்காலத்திற்கு முன்னேறும் போது, பருவகால நோய்கள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்கு, நாம் மேற்கொள்ளும் அனைத்து விஷயங்களிலும் சிறிது கவனமாக இருப்பது நல்லது.

இதன் அடிப்படையில், நாம் அனைவரும் குளிர்காலத்தில் நம் உடலை சூடேற்றக் கூடிய உணவுகள் எவை என்பதை தெரிந்து கொண்டு, அதனை நம் அன்றாட உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

​குளிர்கால உணவுகள்:

குளிர்காலத்தில் எந்த மாதிரியான உணவுகளை உங்கள் உணவு முறையில் சேர்த்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் யோசிக்கின்றீர்களா? இனி கவலை வேண்டாம். சூப்பர் ஃபுட்கள் என்று சொல்லக்கூடிய இந்த 10 உணவு வகைகளை குளிர்காலத்தில் நீங்கள் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த உணவு வகைகள், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது; அது மட்டுமல்லாமல், உங்கள் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.

​பச்சை காய்கறிகள்:

நம் அன்றாட உணவில், பச்சை காய்கறிகளைச் சேர்ப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

  • கைகளிலும் கால்களிலும் ஏற்படும் எரிச்சலை குறைக்க உதவுகிறது.
  • புற்றுநோயைத் தடுக்கக் கூடிய சிறந்த உணவுகளில் ஒன்றாக இந்த பச்சை காய்கறிகள் உள்ளது.
  • பச்சை காய்கறிகளில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமாக காணப்படுகிறது.

நீங்கள் எடுத்து கொள்ள வேண்டிய பச்சை காய்கறிகளில் சில:

  • பாலாக் கீரை
  • வெந்தய கீரை (மேத்தி)
  • புதினா இலைகள்
  • பச்சை பூண்டு
  • மேலும், கீரை வகைகள் பொதுவாகவே நல்லது
winter food-newstamilonline

​வேர் உள்ள காய்கறிகள்

கருணை கிழங்கு (குறிப்பாக, ஊதா நிற கருணை கிழங்கு), நூக்கல், முள்ளங்கி, கேரட், பீட்ரூட், சக்கரவள்ளி கிழங்கு போன்ற வேர் உள்ள காய்கறிகளை நீங்கள் உணவில் அவசியம் சேர்த்து கொள்ள வேண்டும்.

  • இது ஒரு ப்ரோபையாட்டிக் உணவு ஆகும். (நுண்ணுயிர் கலந்த உணவாகும்)
  • வேர் உள்ள காய்கறிகள் எடை இழப்புக்கு உதவுகிறது
  • இது செரிமானத்தை மேம்படுத்துகிறது.
  • மேலும், ஊட்டச்சத்துக்களின் ஒருங்கிணைப்பை மேம்படுத்த உதவுகிறது.

இதனை எப்படி சாப்பிடுவது?

  • இதனை நீங்கள் டிக்கீஸ், சப்ஜி அல்லது கிரேவி போல் தயார் செய்து சாப்பிடலாம்
  • வேர் உள்ள கிழங்கு வகைகளை வேகவைத்து, அதில் சிறிது உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து எண்ணையில் வருத்து கூட சாப்பிடலாம்
  • சக்கரவல்லி கிழங்கை வேகவைத்து அப்படியே சாப்பிடலாம்.

​பருவகாலத்தில் கிடைக்கக்கூடிய பழங்கள்

அந்தந்த பருவக்காலங்களில் கிடைக்கக்கூடிய பழங்களை நாம் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • பருவகால பழங்களில் நுண்ணூட்டச்சத்துக்கள் (மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ்) மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது.
  • இவை தவிர, சருமத்தின் நீரேற்றத்திற்கும் இந்த பருவகால பழங்கள் உதவுகின்றன.

பருவகால பழங்கள்:

  • சீத்தாப்பழம், கொய்யாப்பழம், ஆப்பிள் போன்ற பழங்களை சாப்பிடலாம்
  • நன்கு பழுத்த பழத்தை சாப்பிடுங்கள்.
  • பழத்தை கழுவிய பின் முழுமையாக அப்படியே கூட சாப்பிடலாம்.
  • மதிய உணவிற்கு பதிலாக கூட, நீங்கள் இந்த பழங்களை சாப்பிடலாம்.

​எள்ளு

  • எள்ளில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ ஆல் நிறைந்துள்ளது.
  • மேலும் இது, எலும்புகள், தோல்கள், மற்றும் கூந்தலுக்கு மிகவும் நல்லது.
  • எள்ளை வைத்து, எள்ளு லட்டு அல்லது எள்ளு பர்ஃபி தயார் செய்யலாம்
  • மேலும் உங்கள் உணவில் கூட நீங்கள் இதை சேர்த்துக் கொள்ளலாம்.

Also Read: Best Food for Diabetes Control: சர்க்கரை நோயை வெண்டைக்காய் எவ்வாறு கட்டுப்படுத்தும்..?

​வேர்க்கடலை

வேர்க்கடலை ஆனது, உலகின் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக உள்ளது.

  • வேர்க்கடலையில் வைட்டமின் பி, பாலிபினால்கள், மற்றும் அமினோ அமிலங்கள், போன்றவை நிறைந்துள்ளது
  • இது இதயத்திற்கு மிகவும் நல்லது.
  • வேர்க்கடலையை நீங்கள் வேகவைத்தோ அல்லது வறுத்தெடுத்தோ சாப்பிடலாம்.
  • வேர்க்கடலை சட்னி சாப்பிடலாம்
  • சாலட் மற்றும் சப்ஜிகள் போன்றவற்றில் சேர்த்து கூட சாப்பிடலாம்.