Which Metal is Best for Cooking Utensils?எவர்சில்வர், செராமிக் மற்றும் டெஃப்ளான்… மூன்றில் ஆரோக்கியமான சமையலை அளிக்கும் பாத்திரம் எது?
Which Metal is Best for Cooking Utensils?எவர்சில்வர், செராமிக் மற்றும் டெஃப்ளான்… மூன்றில் ஆரோக்கியமான சமையலை அளிக்கும் பாத்திரம் எது?
ஆதி மனிதன் முதல் தற்போது ஆன்லைன் வாழும் மனிதர்கள் வரை நடை, உடை, வாகனம், வளர்ப்பு பிராணி என பல விஷயங்களில் மேம்பாட்டை (update) அடைந்ததைப் போலவே, சமையல் பாத்திரங்களிலும் வேற லெவலுக்கு அப்டேட் ஆகியுள்ளனர்.

Also Read: Body Cooling Drink: உடலுக்கு குளிர்ச்சியூட்டும் அரியவகை மங்குஸ்தான் கற்றாழை ஜூஸ்..!
மண்பாண்டத்தில் ஆரம்பித்து தற்போது பீங்கான்(ceramics) பாத்திரங்கள் வரை பல வகைகள் வந்துவிட்டன.
Which Metal is Good for Cooking Utensils?
நமது முன்னோர்கள் மண் (பானைகள்), பித்தளை, தாமிரம் மற்றும் வார்ப்பிரும்பு (cast iron) போன்ற உள்ளூரில் கிடைக்கக்கூடிய மலிவு மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களால் செய்யப்பட்ட பாத்திரங்களில் சமைத்தனர்.
ஆனால், இப்போது என்னென்ன பொருட்களை எல்லாம் வைத்து எதை சமைக்கப்போகிறேன் என்பதில் காட்டும் கவனத்தை எந்த பாத்திரத்தில் சமைக்கப்போகிறோம், அது ஆரோக்கியமானதா?என்பதில் காட்டுவதில்லை.
ஒவ்வொரு வகை சமையல் பாத்திரங்களுக்கும் நன்மை தீமைகள் உள்ளன. மேலும் சில சமையல் பாத்திரங்கள் சில சமையல் முறைகளுக்கு சிறப்பானதாக இருக்கும்.
சமைக்கும் உணவுக்கு மிகவும் பொருத்தமான பாத்திரங்களை தேர்வு செய்வது கட்டாயமான ஒன்றாகும்.
Teflon, துருப்பிடிக்காத எஃகு மற்றும் பீங்கான் ஆகிய மூன்றில் சரியான மற்றும் ஆரோக்கியமான சமையல் பாத்திரங்கள் எவை என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
டெஃப்ளான்(Teflon) பாத்திரங்கள்:
நன்மைகள்:
டெஃப்ளான் என்பது ஒரு செயற்கை ரசாயனமாகும்(chemical).
இது சமையல் பாத்திரத்தின் மேற்பரப்பை பூசுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
இதனால் குறைவான எண்ணெய்யை பயன்படுத்தினால் பாத்திரங்களில் உணவு ஒட்டிக்கொள்ளாது.மேலும், டெஃப்ளான் சமையல் பாத்திரத்தில் சமைப்பதால், உணவில் எண்ணெய் உபயோகத்தின் அளவைக் குறைக்கவும், அத்தகைய சமையல் பாத்திரங்களை கழுவும் நேரத்தை குறைக்கவும் உதவுகிறது.
சந்தையில் கிடைக்கும் மற்ற சமையல் பாத்திரங்களுடன் ஒப்பிடுகையில் டெஃப்ளான் மலிவானது.
தீமைகள்:
டெஃப்ளான் ஒரு செயற்கைப் பொருள் மற்றும் பிளாஸ்டிக் வகையைச் சேர்ந்தது மற்றும் நச்சுகளை வெளியிடுவதாக அறியப்படுகிறது.
அதிக வெப்பத்தில், சமையல் பாத்திரங்களின் ரசாயனம் உடைந்து நச்சு இரசாயனங்கள் காற்றில் வெளியாகிறது.
இந்த புகைகளை உள்ளிழுப்பது அல்லது உணவில் இரசாயனங்கள் கலந்திருப்பது கூட ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
டெல்ஃபான் சமையல் பாத்திரங்களின் ஆயுட்காலம் குறைவாக உள்ளது, ஏனெனில் பூச்சு(Coating) காலப்போக்கில் தேய்ந்துவிடும், மேலும் உணவுகள் கடாயில் ஒட்டிக்கொள்ளத் தொடங்கும்.
எவர்சில்வர்(Eversilver) பாத்திரங்கள் :
நன்மைகள்:
எவர் சில்வர்(Eversilver) பாத்திரங்கள் துருப்பிடிக்காத எஃகு பாத்திரங்கள் என்று கூறப்படும் இவை ஒவ்வொரு வீட்டிலும் அதிகம் காணப்படும் ஓன்று.
துருப்பிடிக்காத எஃகு(Steel) சமையல் பாத்திரங்கள் பன்முகத்தன்மை வாய்ந்தவை. கறி முதல் பாஸ்தா சாஸ் வரை எந்த வகையான உணவு வகைகளையும் சமைப்பதற்கு ஏற்றதாக உள்ளது.
மிகவும் நீடித்து உழைக்க கூடியது மற்றும் சுத்தம் செய்ய எளிதானது. எளிதில் ஸ்கிராச் விழாது. பாத்திரத்தில் எந்த பூச்சும்(coding) இல்லாததால் நச்சுத்தன்மையற்றது மற்றும் அதிக வெப்பத்தில் எளிதாக சமைக்கக்கூடியது.
தீமைகள்:
துருப்பிடிக்காத steel சமையல் பாத்திரங்கள் அதிக வெப்பத்தில் சமைக்க பாதுகாப்பானவை அல்ல.
steel பாத்திரத்தில் உணவு ஒட்டாமல் இருக்க எண்ணெய்கள் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றின் பயன்பாடுஅதிகம் தேவைப்படுகிறது.
மிதமான தீயில் சமைக்க கூடிய உணவு வகைகளை எவர்சில்வர் பாத்திரங்களில் சமைக்க முடியாது. சந்தையில் கிடைக்கும் மற்ற சமையல் பாத்திரங்களுடன் ஒப்பிடுகையில் இதன் விலை அதிகம்.

Which Metal is Best for Cooking Utensils?
பீங்கான்(Ceramic)பாத்திரங்கள்:
நன்மைகள்:
பீங்கான் பாத்திரங்கள் PTFE மற்றும் PFOA போன்ற ரசாயனங்கள் இல்லாதது. மேலும் கீறல் ஏற்படாது என்பதால் இது பயன்படுத்த எளிதானது.
இந்த பீங்கான் பாத்திரங்கள் உலோகங்கள் அல்லது நச்சு இரசாயனங்கள் ஆகியவை இன்றி, பாதுகாப்பான சுகாதாரமான கனிம பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்டது.
பீங்கான் சமையல் பாத்திரங்கள் மெதுவாக வெப்பமடைகின்றன. ஆனால் வெப்பத்தை நன்கு தக்கவைத்துக் கொள்ளும் தன்மை உள்ளது. இத்தகைய தன்மை பாத்திரத்தின் ஆயுளை நீட்டிக்க உதவுகின்றன.
தீமைகள்:
பீங்கான் coating நீடித்தது அல்ல, ஏனெனில் அது காலப்போக்கில் விரிசல்ஏற்பட்டு தேய்ந்துவிடும். மற்ற நான்-ஸ்டிக் பாத்திரங்களுடன் ஒப்பிடுகையில் இதன் விலை அதிகம்.
இந்த பீங்கான் சமையல் பாத்திரங்களில் பயன்படுத்தப்படும் துகள்கள் சிறிய கனிமத் துகள்களால் ஆனவை, இதனால் உணவு சமைக்கும் மேற்பரப்புடன் முழுமையாக தொடர்பு கொள்வதைத் தடுக்கிறது.
பீங்கான் சமையல் பாத்திரங்கள் மிகவும் மென்மையானவை மற்றும் கவனமாக கையாளப்பட வேண்டும், எனவே பாத்திரங்களை கழுவி வைப்பது மிகவும் நுட்பமான வேலையாக உள்ளது.
ஒவ்வொரு வீட்டிலும் பல்வேறு பொருட்களால் செய்யப்பட்ட சமையல் பாத்திரங்களின் வகை காணப்படும்.
Also Read : High Fiber Vegetables: நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்..!
எனவே, எந்த சமையல் பாத்திர வகையை ஒருவர் முடிவு செய்தாலும், அது ஆரோக்கியமான உணவை தருவதாக இருப்பதை கவனித்துக் கொள்வது அவசியமானது ஆகும்.