விரைவில் வரும் வாட்ஸ்அப் அப்டேட்..! நான்கு புத்தம் புதிய Whatsapp Features..!

விரைவில் வரும் வாட்ஸ்அப் அப்டேட்..! நான்கு புத்தம் புதிய Whatsapp Features..!

வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு அம்சங்களை சேர்த்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

 Whatsapp Features

அதன்படி இந்த வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அனிமேஷன் ஸ்டிக்கர்கள்,கியூஆர் குறியீடுகள், டெஸ்க்டாப் & வெப்பிற்கான டார்க் மோட் பயன்முறை.

Whatsapp Features Group வீடியோ காலிங் வசதியில் சில மேம்பாடுகள் போன்றஅப்டேட்களை பீட்டாவிலிருந்து அதன் நிலையான பதிப்பிற்கு கொண்டு வருகிறது.

அன்மையில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்த சில புதிய அம்சங்கள் அடுத்த சில வாரங்களில் standard வெர்ஷன்களுக்கு வெளியிடப்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

முதலில் பயனர்கள் வாட்ஸ்அப்-ன் சமீபத்திய பதிப்புகளில் அனிமேஷன் ஸ்டிக்கர்களை பார்க்கத் தொடங்குவார்கள், பின்பு இதன் பெயர் குறிப்பிடுவது போல, இந்த அனிமேஷன் ஸ்டிக்கர்கள் ஆனது நகரும் அல்லது ஜிஃப் வீடியோவாக இருக்கும்.

மேலும் வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் வெளிவந்த அறிவிப்பில், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் chat செய்ய எளிய, பாதுகாப்பான மற்றும் தனிப்பட்ட வழியை வழங்குவதில் எங்கள் கவனம் அதிகமாக உள்ளது.

பின்பு வாட்ஸ்அப் மிகவும் பயனுள்ள ஒரு வழியாக உறுதிபடுத்த எங்கள் தயாரிப்பு வடிவமைப்பை நாங்கள் தொடரந்து முன்னெடுத்து வருகிறோம்.

சில வாரங்களில் வெளிவரும் சில புதிய அம்சங்களை உறுதிப்படுத்த நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 Whatsapp Features

விரைவில் வரும் வாட்ஸ்அப் அப்டேட் ஆனது QR குறியீடுகளையும் பெறும், இந்த வசதி புதிய தொடர்புகளை எளிதாக சேர்க்க உதவும்.

சுருக்கமாக கூறவேண்டும் என்றால் மற்ற நபரின் குறியீட்டை ஸ்கேன் செய்வது மட்டுமே, பின்னர் அவர்களின் தொடர்பு தானாகவே வாட்ஸ்அப்பில் சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: இனி WhatsApp-இல் டியோக்களை ம்யூட் செய்தும் அனுப்பலாம்..!

அதேபோல மிகவும் பிரபலமான வாட்ஸ்அப் டார்க் மோட் அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பயன்பாட்டிற்கு ஏற்கனவே கிடைத்திருந்தாலும் அடுத்த சில வாரங்களில் இதே அம்சம் வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் பதிப்பிலும் வெளியிடப்படும்.

அடுத்து வாட்ஸ்அப் க்ருப் காலிங் வசதியில் சில மேம்பாடுகளை செய்துள்ளது.

அதாவது இப்போது ஒரு வீடியோ அழைப்பில் 8பேர் வரை இடம்பெறலாம் என்பதால்,குறிப்பிட்ட நபரை மட்டுமே அழுத்தி அவரின் வீடியோவை முழுத் திரையில் வைத்திருக்க அனுமதிக்கும் அம்சம் உட்பட சில அட்டகாசமான அப்டேட்களை நாம் எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *