Weight Gain Foods: உடல் எடையை அதிகரிக்க நினைப்பவரா நீங்கள்..? இத ஃபாலோ பண்ணுங்க..!
Weight Gain Foods: உடல் எடையை அதிகரிக்க நினைப்பவரா நீங்கள்..? இத ஃபாலோ பண்ணுங்க..!
உடல் எடையை அதிகரிக்க நினைப்பவரா நீங்கள்? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது.
எப்படி ஒல்லியாவது கடினமான ஒரு விஷயமோ, அதேப் போல் தான் குண்டாவதும் அவ்வளவு எளிதானது அல்ல.

உலகில் பல மக்கள் மிகவும் ஒல்லியாக காணப்படுவதுண்டு. அவர்கள் பலரது கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாவதுண்டு.
இதனால் ஒல்லியாக இருக்கும் பலர் தங்களின் உடல் எடையை அதிகரிக்க எண்ணெயில் பொரித்த உணவுகள், ஜங்க் உணவுகள் என ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகம் சாப்பிடுவார்கள்.
இப்படி ஒருவரது உடல் எடை அதிகரித்தால், அது அவர்களின் ஆரோக்கியத்திற்கே ஆபத்தை உண்டாக்கும்.
எனவே உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், எப்போதும் ஆரோக்கியமான வழியைத் தேர்ந்தெடுப்பதே பாதுகாப்பானதும் நல்லதும் கூட.

உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
அதுவும் பளுத்தூக்கும் பயிற்சியை கட்டாயம் செய்ய வேண்டும்.
குறிப்பாக ஓவர்ஹெட் ப்ரஸ், செஸ்ட் ப்ரஸ், பெண்ட் ஓவர் ரோஸ், லஞ்சஸ், கர்ல்ஸ் மற்றும் ஸ்டிவ் டெட்லிப்ட் போன்ற பயிற்சிகளை ஒரு செட்டிற்கு 8-12 தடவை என தினமும் 4-5 செட் செய்ய வேண்டும்.
இந்த பளுத்தூக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளும் போது, முடிந்த அளவு அதிக அளவிலான எடையைத் தூக்குவதற்கு முயற்சிக்க வேண்டும்.
இப்படி வாரத்திற்கு ஆறு நாட்கள் செய்து, ஒரு நாள் ஓய்வெடுத்துக் கொள்ளலாம்.

Weight Gain Foods:
எப்போதும் கலோரி அதிகமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
நட்ஸ், உலர் பழங்கள், விதைகள், உலர்ந்த பெர்ரிப் பழங்கள் மற்றும் தேங்காய் போன்றவற்றை எப்போதும் கையில் வைத்துக் கொண்டு அவ்வப்போது சாப்பிட வேண்டும்.
தினமும் உட்கொள்ளும் கலோரியின் அளவை அதிகரிப்பதன் மூலம் உடல் எடை அதிகரிக்கும்.

சர்க்கரையில் வெற்றுக் கலோரிகள் உள்ளதால், அதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
மேலும் ஆரோக்கியமான உணவுகளான உருளைக்கிழங்கு, சீஸ் சூப், கொழுப்பு இல்லாத பால் சேர்க்கப்பட்ட சூப், பால், மசித்த உருளைக்கிழங்கு மற்றும் மில்க் ஷேக் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

ஜூஸ் வழியே கலோரிகளை அதிகரிக்க நினைத்தால், அவகேடோ, நட்ஸ் கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸ்களைக் குடியுங்கள்.
ஜூஸ்களை அடிக்கடி குடிப்பதன் மூலம், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் சப்ளிமெண்ட்டுகள் கிடைத்து, உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.

பானங்களின் மூலம் கலோரி அளவை அதிகரிக்க நினைப்பவர்கள், கவனமாக இருக்க வேண்டும்.
Also read: சர்க்கரை நோயாளிகள் கொய்யாப்பழம் சாப்பிடலாமா..?
சோடா, பீர், ஒயின் மற்றும் இதர சோம பானங்கள் உடல் எடையை அதிகரிக்க சிறப்பான பானங்கள் இல்லை.
இவற்றில் இருப்பது வெற்று கலோரிகள். அதாவது இவை ஆரோக்கியமற்ற உடல் பருமனுக்கு வழிவகுக்கும். நற்பதமான பழச்சாறுகள் மற்றும் பானங்களான மாம்பழம் மில்க் ஷேக் போன்றவை உடல் எடையை அதிகரிக்க சிறப்பான பானமாகும்.
எனவே முடிந்தால் தினமும் ஒரு மாம்பழ மில்க் ஷேக் குடியுங்கள்.