Walking after eating: சாப்பிட்ட பிறகு வாக்கிங் செய்வது நல்லதா..?

Walking after eating: சாப்பிட்ட பிறகு வாக்கிங் செய்வது நல்லதா..?

நீங்கள் உங்கள் தினசரி உணவின் அளவில் கலோரிகளை மனதில் வைத்துக் கொண்டு சாப்பிட வேண்டும்.

Walking after eating - newstamilonline

Walking after eating:

பின்பு, சாப்பிட்ட பின் சாப்பிட கலோரிகள் குறையும் அளவுக்கு உடற்பயிற்சியோ அல்லது மற்ற வேலைகளில் ஈடுபட வேண்டும்.

உணவு உட்கொண்ட பிறகு சற்று களைப்பார படுத்துக்கொள்ளும் பழக்கம் பலருக்கு உண்டு. ஆனால் இந்த ஒரு பழக்கம் உடலில் பல நோய்களை ஏற்படுத்தக்கூடும் என்பது பலருக்குத் தெரியாது.

குறிப்பாக சாப்பிட்டு முடித்த பின், நடைப்பயிற்சி மேற்கொள்வது என்பது உடல் எடையை சீராக குறைக்க உதவும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உடலை ஃபிட்டாக வைத்திருக்க ஆரோக்கியமான உணவு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு, உடல் முழுவதும் அந்த உணவு சென்று சேர்வதும் முக்கியமாகும்.

நாம் உண்ணும் உணவின் செரிமானம் நன்றாக இருக்க வேண்டும் என்றால், உணவுக்குப் பிறகு சிறிது நேரம் நடப்பது நல்லது.

உணவுக்குப் பிறகு சிறிது நேரம் நடப்பதால் (Walking), உடலின் செரிமான அமைப்பு நன்றாக வேலை செய்யத் தொடங்குகிறது.

உணவு சாப்பிட்ட பிறகு உங்களால் 15 முதல் 20 நிமிடங்கள் நடக்க முடிந்தால், அது இன்னும் பல நன்மைகளை அளிக்கும்.

எப்பொழுதும் சாப்பிட்டவுடன் உடலுக்கு இயக்கத்தை கொடுக்க வெண்டும் என்பதை மறக்கக்கூடாது.

இந்த ஒரு ஆரோக்கியமான பழக்கத்தால், உங்கள் எடை மற்றும் சர்க்கரை இரண்டும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

மூன்று வேளை நாம் சாப்பிடும் உணவானது நமக்கு பெருமளவு தேவைப்படுவதில்லை.

இருந்தாலும் மூன்று வேளையும் சாப்பிட்டு பழக்கப்பட்டு விட்டோம் என்பதால் அவை குறைத்தாலும் சில பிரச்சனைகள் நமக்கு ஆகிறது.

எனவே சாப்பிட்ட உணவை, அதன் கலோரியை கரைப்பதை தவிர நமக்கு வேறு வழி தற்போதைக்கு கிடையாது.

சாப்பிட்டு முடித்த உடன் சிறிது நேரம், 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரையாவது நடைப்பயிற்சி மேற்கொள்வது உணவை எளிதில் ஜீரணமாக்கும்.

அதுமட்டுமில்லாமல் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்து உடல் எடை குறையும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

உணவுக்குப் பிறகு நடப்பதன் நன்மைகள்


1- உணவை உட்கொண்டவுடன் நடப்பது செரிமான செயல்முறையை துரிதப்படுத்துகிறது, உணவு விரைவாக ஜீரணமாக உதவுகிறது.
2- உணவுக்குப் பிறகு தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் நடப்பதால் உடல் எடை குறைகிறது. உங்களை ஃபிட்டாக வைத்திருக்க இதை விட ஒரு எளிதான வழி கிடைக்காது.
3- உணவு சாப்பிட்ட பிறகு நடப்பதால், வாயுத்தொல்லை, மலச்சிக்கல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாது. மேலும் வளர்சிதை மாற்றமும் பலப்படுத்தப்படுகிறது.
4- உணவைச் சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்வது மன அழுத்தத்தைக் குறைக்கிறது. இது நல்ல இரவு உறக்கத்துக்கு வழிவகுக்கிறது.
5- உணவு உட்கொண்ட பிறகு தினமும் நடப்பதால், தசைகள் சரியாக வேலை செய்யும். இதன் காரணமாக உடலில் இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்.
6- உணவு சாப்பிட்ட பிறகு நடப்பது இரத்த சர்க்கரை அளவை (Blood Sugar Level) குறைக்கிறது. டைப் 2 நீரிழிவு நோயாளிகள் உணவுக்குப் பிறகு சிறிது நேரம் கண்டிப்பாக நடக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நீங்கள் உணவு உண்டு ஒரு மணி நேரத்திற்கு பிறகு இந்த நடைபயிற்சியை ஆரம்பம் செய்ய வேண்டும்.

அப்படி செய்தால் மட்டுமே இது நல்ல பிரயோஜனமாக அமையும் என்று கூறுகின்றார்கள். ஒருவேளை நீங்கள் உணவு சாப்பிட்டு உடனேயே உங்கள் நடைபயிற்சி ஆரம்பம் செய்தால், சிறிது பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

Also Read: Jackfruit seed benefits: பலாப்பழ விதைகளில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!

எனவே தான் உணவு சாப்பிட்ட பின் ஒரு மணி நேரம் கழித்து உங்கள் நடை பயிற்சி ஆரம்பம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள்.

முடிந்தவரை சரியான அளவில் நடக்க வேண்டும். மிக வேகமாக நடப்பது ஜீரணக்கோளாறு ஏற்படும் என்று கூறுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *