News Tamil OnlineTamil Newsஇயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Vitamin B12 Rich Foods: மூளை வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின் B12 நிறைந்த உணவுகள்..!

Vitamin B12 Rich Foods: மூளை வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின் B12 நிறைந்த உணவுகள்..!

பொதுவாக நம் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்திலிருந்து டி.என்.ஏ சேர்க்கை மற்றும் சிவப்பு இரத்த அணுக்கள் வரை பல முக்கிய செயல்பாடுகளுக்கு வைட்டமின் B12 தேவைப்படுகிறது.

Vitamin B12 Rich Foods

What Causes B12 Deficiency?

நம் மூளையின் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வைட்டமின் B12 மிகவும் முக்கியம். இதன் முக்கியத்துவம் பலருக்கு தெரிவதில்லை.

வைட்டமின் B12 குறைபாடு நம் உடலில்,  வெளிர் தோல் நிறம், நாவின் மஞ்சள் அல்லது சிவப்பு நிறம், வாய் புண்கள், தோலில் ஏதோ குத்துவது போன்ற உணர்வு, பலவீனமான கண்பார்வை, எரிச்சல், மனச்சோர்வு போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

முக்கியமாக வைட்டமின் B12 குறைபாடு மன வலிமை, செயல் திறனை குறைக்கிறது.

வைட்டமின் B12 நிறைந்த உணவுகள்:

வைட்டமின் B12  குறைபாடு இருந்தால், அது நம் உடல் நலனை மிகவும் பாதிக்கும்.

இக்குறைபாடு ஏற்படுவதை தவிர்க்க, தினசரி உணவில் இறைச்சி, மீன், கோழி, முட்டை மற்றும் பால் போன்ற  பொருட்களை சேர்த்துக் கொள்வது நல்லது.

சைவ உணவு உண்பவர்களுக்கு இந்த வைட்டமின் குறைபாடு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். சைவ உணவு பிரியர்கள் பால், தயிர், பன்னீர் அல்லது சீஸ் போன்ற உணவினை சாப்பிடலாம்.

இதன் மூலம் இயற்கையாகவே நம் உடலுக்கு வைட்டமின் B12 சத்துக்கள் கிடைத்துவிடும்.

சாக்லேட்:

சாக்லேட் உட்கொள்வதன் மூலம் மூளையின் ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும் என கூறுகின்றனர்.

ஏனெனில், இந்த கோகோ(COCOA) பீன்ஸில் ஃபிளாவோனால் எனப்படும் சில சிறிய மூலக்கூறுகள் உள்ளன. இந்த மூலக்கூறுகள் மூளையில் சுறுசுறுப்பை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர்.

அதிக Flavonoid உள்ளடக்கம் இருப்பதால் வழக்கமான வெள்ளை சாக்லேட்டை விட டார்க் சாக்லேட்டை அதிகமாக உட்கொள்வது நல்லது.

Vitamin B12 Rich Foods:

இலைக் காய்கறிகள்:

நம் உணவில் பழங்களிலிருந்து, பச்சைக் காய்கறிகள் வரை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இதில், ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், கீரை போன்ற காய்கறிகள் அறிவாற்றல் பாதிப்பை எதிர்த்துப் போராட உதவுகின்றன.

பச்சைக் காய்கறிகளில் உள்ள வைட்டமின் K , பீட்டா கரோட்டின், ஃபோலேட் மற்றும் லுடீன் ஆகியவை நமது மூளையை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

ரத்த சோகை ஏற்படாது:

வைட்டமின் B12 நிறைந்த உணவுகளை சரியான அளவில் உட்கொண்டால், நம் உடலில் இரத்த சோகை நோய் இருக்காது.

இதன் குறைபாட்டினால் இரத்த சிவப்பணுக்கள் குறையத் தொடங்குவதுடன், நம் உடலின் ஊட்டச்சத்துக்களும் குறைவாக காணப்படும்.

மூளை வளர்ச்சிக்கு அவசியம்:

வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் B12 உள்ள உணவை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கண்டிப்பாக உண்ண வேண்டும்.

Also Read: Foods Good for Liver: கல்லீரலை பாதிப்படையாமல் காக்கும் உணவுகள் என்னென்ன 

கர்ப்ப காலத்தில் இந்த முக்கிய ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால், குழந்தை பிறக்கும் போது மூளை மற்றும் முதுகுத்தண்டில் பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே வைட்டமின் B 12 குழந்தைகளுக்கு மிகவும் அவசியமானது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *