News Tamil OnlineTamil Newsஇயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Venthayam Benefits In Tamil: தலை முடி ஆரோக்கியத்திற்கு உதவுமா வெந்தயக்கீரை..?

Venthayam Benefits In Tamil: தலை முடி ஆரோக்கியத்திற்கு உதவுமா வெந்தயக்கீரை..?

வெந்தயக்கீரை வெந்தயத்தின் மூலம் பயிரிடப்படக்கூடியது ஆகும்.
இது மூன்று மாதங்களில் பூத்துக், காய்த்துப் பலன் தரக்கூடியது.

Venthayam Benefits In Tamil

Venthayam Benefits In Tamil:

கீரையாகப் பயன்படுத்த வேண்டும் என்றால் பூ பூக்கும் முன்னரே வெந்தயச் செடியை பறித்து விட வேண்டும்.

இது சிறிய இலைகளையும்,மெல்லிய தண்டுகளையும் கொண்டுள்ளது, கூடவே லேசான கசப்புச் சுவையும் கொண்டிருக்கும்.

வெந்தயக்கீரை ஒருமுறை மட்டுமே அறுவடை செய்யக்கூடியது. உலகத்திலேயே இந்தியாவில் தான் வெந்தயம் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.

வெந்தயக் கீரைகளில் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகிறது.

இரும்புச்சத்துப் பொருட்கள் உடலில் ரத்தசோகை வராமல் தடுப்பதோடு, உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கிறது.

வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, ஒரு டம்ளர் அளவிற்குச் காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் குடித்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

வெந்தயக் கீரைகளை தினசரி உணவில் சேர்த்து உண்பது நல்லது, இது உடலில் ஏற்படும் புரதக்குறைபாட்டு நோய்களை தீர்க்க வல்லது.

வெந்தயக்கீரையில் வைட்டமின் A சத்தும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதை சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறைபாடு, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை போன்ற நோய்கள் சரியாகும்.

What foods help with stomach problems?

கீரையில் உள்ள புரதப்பொருட்களான (Saponins, mucolases) சாப்போனின், மியூக்கலேஜ் போன்றவை பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோயினை வராமல் தடுக்கிறது.

மேலும் இதிலுள்ள வைட்டமின் மற்றும் தாது உப்புகள் நம் உடலில் ஏற்படும் சொறி, சிரங்கை நீக்க உதவுகிறது.

வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் பார்வைக்கோளாறுகள் சரியாகிவிடும்.

மேலும், காசநோய் உள்ளவர்கள் தொடர்ந்து வெந்தயக் கீரையினை சாப்பிட்டால் எளிதில் நோய் சரியாகும், கூடவே வயிற்று நோய்களை சரி செய்வதற்கும் இது பயன்படுகிறது.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தாலே போதும், நீரிழிவு நோய் கட்டுப்படும். எனவே, நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது.

வெந்தயக் கீரை ஜீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டும் படி செய்கிறது. மேலும் சிறுநீர் உறுப்புகளை சுத்தம் செய்கிறது.

மூளை நரம்புகளைப் பலப்படுத்த உதவுகிறது. வயிற்றுக் கட்டி, உடல் வீக்கம், சீதபேதி, குத்திருமல், வயிற்று வலி போன்ற நோய்களையும் இணைந்து சரி செய்கிறது.

உடல் பருமனாக இருப்பதாக எண்ணுபவர்கள், வெள்ளைப் பூசணிக்காய் சாம்பாரில் வெந்தயக் கீரையைச் சேர்த்துச் சாப்பிட்டால் போதும், பெருத்த உங்கள் உடல் இளைக்கும்.

Benefits Of Fenugreek Leaves

எலும்பு ஆரோக்கியம் :

வெந்தயக்கீரையில் வைட்டமின் K இருப்பதால் இது எலும்பு வளர்சிதை மாற்றத்திற்கு மிகவும் பயன்படுகிறது.

எலும்பு முறிவுகள் அல்லது எலும்பு சிராய்ப்பு போன்ற காயங்கள் ஏற்படும் போது வைட்டமின் K காயத்தை குணப்படுத்துதலை எளிதாக்குகிறது.

மேலும் வைட்டமின் K யில் உள்ள சத்துக்கள் எலும்பு அடர்த்தி இழப்பு மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் (osteoporosis) நோய் வருவதையும் தடுக்கிறது.

தலைமுடி ஆரோக்கியம் :

நீளமான மற்றும் பளபளப்பான தலை முடியைப் பெற இந்த வெந்தய கீரை உதவுகிறது. வெந்தய கீரையை தேங்காய்ப் பாலுடன் கலந்து உச்சந்தலையில் தடவினால் முடி உதிர்வு கட்டுப்படுகிறது.

வெந்தயக்கீரையுடன் சிறிதளவு வினிகரும் கலந்து தலையில் நேரடியாகப் பூசினால் பொடுகுத் தொல்லை இருக்காது.

Also Read:Manathakkali Keerai Benefits: உடலுக்கு நன்மை அளிக்கும் அற்புத மணத்தக்காளிக் கீரை..!

வெந்தயக் கீரை தீமைகள் :

வெந்தயக் கீரையில் ஏராளமான ஆரோக்கியப் பயன்கள் உள்ளன. ஆனால் அளவோடு உட்கொண்டால் மட்டுமே நல்லதாக இருக்கும்.

வெந்தயக்கீரை கசப்புச் சுவையில் இருப்பதால் அதிக அளவில் உட்கொள்வது முடியாத ஒன்று. ஆனால் அதிக அளவில் உட்கொண்டால் வாந்திக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

முக்கியமாக கர்பிணிப்பெண்களுக்கு வெந்தயக் கீரை கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *