இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Uterine Cyst: கருப்பை நீர்கட்டி பிரச்சனையை சரிசெய்யும் இயற்கை வழிகள்..!

Uterine Cyst: கருப்பை நீர்கட்டி பிரச்சனையை சரிசெய்யும் இயற்கை வழிகள்..!

சினைப்பையில் உள்ள ஹார்மோன் குறைவின் காரணமாக பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி மாதமாதம் சீராக இல்லாமல் தாமதமாக வெளியாதல் போன்ற நிலை ஏற்படும்.

Neerkatti home remedies - newstamilonline

Uterine Cyst:

சினைப்பையில் இருந்து மாதம் ஒரு சினை முட்டை வெளியாகும் இது இயற்கையான நிகழ்வு. இந்நிகழ்வில் தடை ஏற்படும் போது சினைப்பையில் சிறு, சிறு, நீர் கட்டிகள் தோன்றி விடுகின்றன.

சினைப்பை நீர்கட்டி என்பது நோயல்ல, குறைபாடுதான் சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தால் உண்டாகும் இந்த பிரச்சனை பல்வேறு வயதிலுள்ள பெண்களை பாதிக்கின்றன. எனவே ஒவ்வொருவயதினருக்கும் ஏற்ற முறையில் சிகிச்சைஅளிக்கவேண்டும்.

இந்நோய் குறிப்பாக இவர்களுக்குத்தான் ஏற்படும் என கூற முடியாது. பருவமடைந்த பெண்கள் யாருக்கு வேண்டுமானாலும் இந்நோய் ஏற்படலாம்.

ஆனால் இந்நோயின் அறிகுறிகள் கருத்தரிக்கும் காலத்தில் தான் வெளியில் தெரிகிறது. மரபணு மூலமாக, இது பரம்பரை பரம்பரையாகக் கூட தோன்றலாம் .

பெண்களின் கருமுட்டை உற்பத்திக்கு தேவைப்படும் சக்திகளில் முதன்மையானது வைட்டமின் டி.

கருப்பை கோளாறுகள் வருவதற்கான காரணங்களில் 65 முதல் 85 சதவீதத்தினர் வைட்டமின் டி குறைப்பட்டினால் தான் பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே வைட்டமின் டி அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக காலை நேர வெயில் படுமாறு உங்களது தினசரிகளை மாற்றிக் கொள்ளலாம்.

இதனால் நம் உடலில் உள்ள மெட்டபாலிசம் தூண்டப்பெற்று மாதவிடாய் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவும் .

ஆப்பிள் சிடர் வினிகர்

ஒரு கிளாஸ் சூடான நீருடன் இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் இரண்டு டீஸ்பூன் சேர்த்து குடிக்க வேண்டும். இதனை ஒரு நாளில் இரண்டு முதல் மூன்று முறை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இப்படிக் குடிப்பதனால் உடலில் இன்சுலின் அளவு சீராக இருக்கும். இதனால் கருமுட்டை உற்பத்தியாவதும் மாதந்தோறும் அது உடைவதும் சீராக நடைபெறும்

சுத்தமான தேங்காய் எண்ணெயினை நம் அன்றாடவாழ்வில் பயன்படுத்துவதன் மூலம் கருப்பை நீர்க்கட்டிகளை நம்மால் வராமல் தடுக்க முடியும்.

தினமும் ஒரு ஸ்பூன் அளவாவது தேங்காய் எண்ணெயை உணவுகளில் சேர்த்துக் கொள்ளவது உடலுக்கு நல்லது. இதில் ஃபேட்டி ஆசிட், ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது,

இது நம் உடலில் இன்சுலின் சுரப்பதை சீராக வைத்திருக்கும். அதே போல கெட்ட கொழுப்புகள் ரத்தத்தில் கலப்பதையும் தடுக்கஉதவும் .

ஆமணக்கு எண்ணெய்:

ஆமணக்கு எண்ணெய் சருமத்தில் ஊடுருவும் ஆற்றல் கொண்டது. ஆமணக்கு எண்ணெயை லேசாக சூடு படுத்தி அதில் சுத்தமான பருத்தித் துணியைக் கொண்டு எண்ணெயில் முக்கி அடிவயிற்றில் ஒத்தடம் கொடுத்திடுங்கள்.

அப்படியில்லையென்றால், ஆமணக்கு எண்ணெயை வயிற்றில் தடவிக்கொண்டு ஹாட்பேக் ஒத்தடம் கொடுக்கலாம்.

பின்னர் வயிற்றை சுத்தமாக துடைத்துவிடுங்கள் வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை இப்படிச் செய்யலாம்.

இது உள்ளுறுப்புகளில் ரத்த ஓட்டத்தை சீராக்கி ஹார்மோன் மாற்றம் ஏற்படாமல் தடுக்கிறது , மேலும் கருப்பை கோளாறுகள் ஏற்படாது.

தினமும் காலையில் சூடான நீரில் க்ரீன் டீ மற்றும் தேன் கலந்து குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று கப் க்ரீன் டீ வரை குடிக்கலாம்.

இவ்வாறு குடிப்பதனால் , இதிலிருக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் கருப்பை சீராக வேளை செய்வதற்கான ஹார்மோன்களை தூண்டிடும். கருப்பை கோளாறுகள் வருவதற்கு நம் அதிக உடல் எடை கூட ஒரு வகை காரணமாக அமைகிறது .

க்ரீன் டீ குடிப்பதனால் கெட்ட கொழுப்புகள் உடலில் சேராது. இதனால் அதீத உடல் எடையும் தவிர்க்கப்படும்.

தினமும் காலை உணவுக்கு முன்பு கற்றாழை ஜூஸ் குடிப்பதன் மூலம் நம் ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலை நீக்கும்.

அதோடு கருப்பை இயங்குவதற்கான ஆற்றலையும் கொடுக்கிறது. மாதவிடாய் பிரச்சனையிருப்பவர்கள் இதனை தினமும் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தினமும் ஒரு டம்பளர் நீருடன் அரை கப் நெல்லிச் சாறு கலந்து குடிக்க வேண்டும். நெல்லிக்காய் உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களைக் குறைத்து, உடல் பருமனை தடுக்கும்.

நெல்லிக்காய் உடலில் உள்ள டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றி, உடலையும், இரத்தத்தையும் சுத்தம் செய்யும்.

மேலும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் இரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கும்.

Also Read: Cucumber benefits: வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன..?

நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான பயன்களும் வெந்தயத்தில் உள்ளது. வெந்தய விதைகளில் புரதம், சர்க்கரை, வைட்டமின், உலோகச்சத்து, அமினோ அமிலங்கள் ஆகியவை அடங்கியிருக்கின்றன.

வெந்தய இலைகளிலும், தண்டுகளிலும் கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன் உடலை சமநிலையில் வைக்கவும் வெந்தயம் பயன்படுகிறது.