Use hand sanitizer: தினந்தோறும் சானிடைசரை உபயோகிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்..!
Use hand sanitizer: தினந்தோறும் சானிடைசரை உபயோகிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்..!
நீங்கள் ஒவ்வொரு நாளும் சானிடைசரை பயன்படுத்தும்போது இதனால் உங்கள் உடலுக்கு நேரிடும் ஆபத்துகள் பற்றி தெரியுமா.?

கொரோனா வைரஸ் பரவல் மக்களுக்கு சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது என்றே சொல்லலாம்.
அந்த வகையில் சானிடைஸர் என்றால் தெரியாத குக்கிராமங்களில் கூட தற்போது சானிடைஸர் பயன்பாடு தினசரி பழக்கமாகிவிட்டது.
அதன் முக்கியத்துவம் மட்டுமல்லாது, அடிக்கடி பயன்படுத்தினால் என்ன ஆகும் என்பதையும் தெரிந்துகொள்ளுதல் அவசியம்.
Use hand sanitizer:
முதலில் சானிடைஸர் என்பது கைகழுவ தண்ணீர் மற்றும் சோப்பு இல்லாத இடங்களில், வெளியே செல்லும்போது தற்காப்பிற்காகப் பயன்படுத்துவது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அதேபோல் சானிடைஸரைக் காட்டிலும் சோப்புதான் கிருமிகளை அழிக்க சிறந்தது. ஏனெனில், சானிடைஸர் அடிக்கடி பயன்படுத்தினால் கைகளில் வாழும் நல்ல பாக்டீரியாக்களையும் அழித்துவிடும்.
இதை நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமும் உறுதி செய்கிறது.
அதேபோல் கைகளில் அதிக அழுக்கு, மண் என இருந்தாலும் அதற்கு சானிடைஸர் கொண்டு துடைப்பது சற்றும் உதவாது.
சானிடைஸர் கைகளில் தேய்த்தால் கைகளில் உள்ள ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு வறட்சியடையும். எனவே அரிப்பு உண்டாகும். இதற்கு பெஸ்ட் உடனே மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது. அதைவிட சிறந்தது சோப்பும் தண்ணீரும்..!

அதில் பயன்படுத்தப்படும் ஆல்கஹால் நமக்கு விஷமாகவும் மாறும் தன்மைக் கொண்டது என நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறுகிறது.
அதாவது அதை கைகளில் தேய்த்தபின் உதட்டில் படுவதோ வாயில் கை வைப்பதோ தீவிர ஆபத்தை உண்டாக்காது.
ஆனால், தெரியாமல் ஒரு மூடி குடித்துவிட்டாலும் ஆபத்து. குறிப்பாக குழந்தைகளின் கை எட்டும்படி வைக்க வேண்டாம்.
நீங்கள் கெமிக்கல் சம்மந்தமான வேலை செய்கிறீர்கள் எனில் அங்கு சானிடைஸர் பயன்படுத்தக் கூடாது.
Also read: Zinc rich foods: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஜிங்க் உணவுகள் அவசியம்..!
அந்த கெமிக்கலும் இதுவும் இணையும்போது அது தவறான கலவையாக மாறி ஆபத்தை உண்டாக்கலாம் என Journal of Occupational and Environmental Medicine நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
சானிடைஸர் பயன்படுத்திவிட்டு நெருப்பு அருகில் செல்வது, சமையலறையில் சமைப்பது போன்றவை தவறு.