Union Budget 2022: இன்று(பிப்ரவரி 1) முதல் மாறும் வங்கி மற்றும் நிதி சார்ந்த விதிகள்..!

Union Budget 2022: இன்று(பிப்ரவரி 1) முதல் மாறும் வங்கி மற்றும் நிதி சார்ந்த விதிகள்..!

இன்று முதல் (பிப்ரவரி 1) செவ்வாய்க்கிழமை முதல் சில வங்கி மற்றும் நிதி சார்ந்த விதிகள் மாறுகின்றன.

Union Budget 2022

Union Budget 2022:

இவை ஒரு சாதாரண மனிதனின் அன்றாட வாழ்வில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை.Union Budget 2022:

எனவே, நாம் இதைப் பற்றி முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும்.

சிலிண்டர் விலை உயர்வு முதல் ஐஎம்பிஎஸ் Immediate Payment Service (IMPS) பணபரிவர்த்தனைகளுக்கான கட்டண உயர்வு வரை சாதாரண மனிதர்களின் சட்டை பாக்கெட்டில் கை வைக்கும் எண்ணற்ற மாற்றங்கள் இந்த பிப்ரவரி மதம் முதல் நடைபெற உள்ளன.

நாம் வங்கி சேவைகளை எப்போதாவது பயன்படுத்தினாலும் சரி, இல்லை தினசரி பயன்படுத்திக் கொண்டிருந்தாலும் சரி, இந்த மாற்றங்களை குறித்து தெரிந்து கொள்வது மிக அவசியம்.

வாடிக்கையாளர்கள் சிலருக்கு இதுகுறித்து மெசேஜ் வந்திருக்கலாம். இருப்பினும், இந்த பகுதியிலும் நாம் அதுகுறித்த விவரங்கள் பற்றி தெரிந்துக் கொள்ளப்போகிறோம்.

SBI IMPS Transaction:

எஸ்பிஐ ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனை கட்டணம்

ஐஎம்பிஎஸ் முறையில் பரிவர்த்தனை செய்யக்கூடிய பணத்தின் அளவை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா(SBI) உயர்த்தியுள்ளது.

இருப்பினும், ரூ.2 லட்சத்துக்கு மேல் ரூ.5 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு ரூ.20 + ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று அந்த வங்கியின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், முன்னர் போல ரூ.2 லட்சத்திற்கும் குறைவான ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில்(Punjab National Bank) பிப்ரவரி 1-ம் தேதி முதல் இஎம்ஐ அல்லது இதர இன்ஸ்டால்மென்ட் கட்டணங்களை செலுத்துவதற்கு அக்கவுண்டில் பணம் இல்லை என்றால் ரூ.250 அபராதம் விதிக்கப்படும்.

இதற்கு முன்னர் இந்த அபராதம் ரூ.100 ஆக இருந்தது. எனவே வாடிக்கையாளர்களே அக்கவுண்டில் பணம் வைத்துக்கொள்ளுங்கள்.

பேங்க் ஆப் பரோடா வங்கியில் செக் மூலமான பரிவர்த்தனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்தது குறித்த செய்தியை உறுதி செய்வது கட்டாயமாகும்.

ரூ.10 லட்சத்துக்கும் மிகையான செக் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலிண்டர் விலையில் மாற்றம்:

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் சிலிண்டர் விலையை மாற்றி கொண்டே வருகின்றன.

ஆகவே, புதிய மாதத்தில் சிலிண்டர் ஆர்டர் செய்வதற்கு முன்பாக கட்டணங்களை நீங்கள் சரி பார்த்துக் கொள்ளவும்.

இதற்கிடையே நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி (இன்று) மத்தியில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

கொரோனா பெருந்தொற்று சூழலை கருத்தில் கொண்டு, இந்த பட்ஜெட் பேப்பர்லெஸ் டிஜிட்டலான முறையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

Also Read: JIO 5G plans in India: இந்தியா முழுக்க 1000 நகரங்களில் JIO 5G சேவை – விரைவில் அறிமுகம்!

யூனியன் பட்ஜெட்(Budget) மொபைல் ஆப் மூலமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

பட்ஜெட்டில் ஏதேனும் சலுகை அறிவிக்கப்படும் பட்சத்தில், அதைப் பொறுத்து வங்கி அல்லது நிதி சேவைகளின் இந்த விதிகள் மாறுபடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *