Unhealthy Foods: நான்-வெஜ் சாப்பிடுவது கெட்ட பழக்கமா..!
Unhealthy Foods: நான்-வெஜ் சாப்பிடுவது கெட்ட பழக்கமா..!
அசைவ உணவு உண்பது தீய பழக்கமா என்பது குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா (Farooq Abdullah) விளக்கமளித்துள்ளார்.
வாரம் ஒரு நாள், அதுவும் ஞாயிற்றுக் கிழமை அசைவ உணவு இல்லை என்றால் அந்த வாரம் முழுமையடையாது.

Non Vegetarian Food:
அசைவ உணவு என்றாலே, எப்போதும் எடுத்து கொள்ளும் அளவை விட சற்று கூடுதலாகவே உணவு எடுத்துக் கொள்வோம்.
மத்திய தென் கிழக்கு ஆசிய நாடுகளில் நான் வெஜ் (non-veg) என்பதில் பாம்பு, பல்லி மற்றும் பல வகையான பூச்சிகளும் அடங்கும்.
உலகம் முழுவதும் அதிகமாக உண்ணப்படும் நான் வெஜ் பன்றியின் இறைச்சி, அதற்கடுத்தபடியாகதான் மாட்டிறைச்சி.
கோழி-மீன்:
அதற்கடுத்த படியாக கோழி மற்றும் மீன் போன்றவை.
மேற்கூறிய அனைத்து வகைகளில் எது கிடைத்தாலும் மனிதனால் சாப்பிட்டு உயிர் வாழ முடியும்.
இதில் பிறப்பிலிருந்தே பலர் காய்கறி மட்டும் உண்ணும் உணவு முறையில் இருக்கின்றனர்.
பலர் தாமாகவே முடிவு செய்து காய்கறி மட்டும் உண்ணும் உணவு முறையை தங்களுக்கு உகந்ததாக அமைத்துக் கொள்கின்றனர்.
மருத்துவ காரணங்கள்:
இன்னும் சிலருக்கு மருத்துவ காரணங்களுக்காக காய்கறி உணவு முறை பரிந்துரைக்கப்படுகிறது.
அவரவர் என்ன உணவு உண்ண வேண்டும் என்று இடம், பொருள், ஏவல் பொறுத்து முடிவு செய்து உண்ணும் உரிமை அவர்களுக்கு உண்டு.
மருத்துவ ரீதியான காரணங்கள் இருந்தால் அந்தக் காரணங்களை அறிவியல் ஆய்வுகளுடன் ஒப்பிட்டு ஒருவருக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
சுதந்திரம்:
பரிந்துரையை ஏற்பதும் ஏற்காமல் இருப்பதும் அவரவர் தனிமனித சுதந்திரம் சார்ந்தவை.
இதில் எதை சாப்பிட்டால் ஆரோக்கியம் என்பதில் தான் கருத்து வேறுபாடு இருக்கிறது. இறைச்சி ஜீரணமாகாது, இறைச்சி இதயத்திற்கு கேடு மற்றும் இறைச்சி புற்றுநோயை உண்டாக்கும் போன்ற விவாதங்கள், அறிவியல் ரீதியாக நடந்தால் நல்லதுதான்.

Unhealthy Foods:
அசைவ உணவு உண்பது கேடு என்பது போலவும் சைவ உணவு உண்பதால் தான் உலகம் விமோச்சனமடையும் என்பது போன்ற கருத்துகள் பரவி வருகின்றன.
இன்று வரை மனிதன் அனைத்துண்ணி தான்.
தனது உணவுத் தேவைக்காக மற்ற உயிரை சார்ந்து வாழும் ஒரு சமூகப் பிராணிதான் மனிதன்.
ஏனெனில் விலங்குகளுக்கும் உயிர் உண்டு அதேபோன்று செடி, கொடி மற்றும் மரத்திற்கும் உயிர் உண்டு.
நோய்கள் :
இங்கு அதிகரித்து வரும் நீரிழிவு, இதய நோய், சிறுநீரக நோய், ரத்தக்கொதிப்பு, PCOD மற்றும் உடல் பருமன் போன்ற பல பிரச்சனைகளுக்கு அறிவியல் ரீதியாக உணவைக் காரணமாகக் கூற வேண்டும் என்றால் மாமிசம் உண்பதை காரணமாகக் கூற முடியாது.
ஏனெனில் நாம் உண்ணும் தானியங்கள் சார்ந்த அதிக உயர் மாவுச்சத்து உணவுமுறையும் காரணம் எனலாம்.
பொருளாதாரம்:
பொருளாதாரம் சார்ந்த சவால்களும், சமூகத்தில் நிலவும் மாமிசம் மீது இருக்கும் பொய் பிரச்சாரங்களும் தான் ஒரு காரணமாக கருதப்படுகிறது.
இதனால் புரதம் நிறைந்த மாமிசத்தையும் முட்டையையும் மக்கள் குறைவாக உட்கொள்கின்றனர்.
நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு நோயாளிகளிடம் மாமிசத்தை முழுமையாக நிறுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது மற்றும் முட்டைகளின் மஞ்சள் கருவை ஒதுக்கிவிட அறிவுறுத்தப்படுகிறது.
Is Nonveg good for Health?
அறிவியல் ரீதியில்:
காய்கறி மட்டும் உண்போர், காய்கறியுடன் பால் உண்போர், மீன் மட்டும் உண்போர், மாமிசம் உண்போர் யாராகினும் அவரவர் உணவுமுறையில் வரம்பு மீறாமல் இருப்பது சிறந்தது.
“அறிவியல் அடிப்படையின்றி இது தவறு இது சரி என்று முடிவு செய்து, ஒன்றைப் போற்றுவதோ ஒன்றை தூற்றுவதோ தவறு” என்று அப்துல்லா விளக்கமளித்துள்ளார்.
உண்ணும் உணவு:
ஒருவர் உண்ணும் உணவின் தன்மையை அமைத்துக் கொள்வது அவரவர் தனிப்பட்ட விருப்பமாகும்.
Also Read: Benefits of Dragon Fruit: சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பழம்..!
மாமிசம் உண்ணுவது தீய பழக்கம் இல்லை.
அவரவர்க்கு உகந்த உணவுகளை அவரவர் உண்ணலாம்.
“அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” , எனவே எதிலும் வரம்பு மீறாமல் பார்த்து கொள்வோம்.
“இவ்வுலகம் நம் அனைவருக்கும் பொதுவானது, நாம் யாவரும் சாதாரண மனிதர்களே” என்று அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்.