Unemployment in India: இந்தியாவில், வரலாற்றில் இல்லாத அளவு 12.20 கோடி பேர் வேலை இழப்பு..!

Unemployment in India: இந்தியாவில், வரலாற்றில் இல்லாத அளவு 12.20 கோடி பேர் வேலை இழப்பு..!

இந்தியாவில், இதுவரை இல்லாத அளவுக்கு, கடந்த ஏப்ரலில், 12.20 கோடி பேர் வேலை இழந்துள்ளனர்.

Unemployment in India-newstamilonline

Unemployment in India:

இந்தியாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 74 ஆயிரத்து, 281 ஆக அதிகரித்து உள்ளது.

இதன் காரணமாக, வைரஸ் பாதித்த சர்வதேச நாடுகளின் பட்டியலில், கனடாவை பின்னுக்குத் தள்ளி, இந்தியா, 12வது இடத்தை பிடித்துள்ளது. வைரஸ் முதலில் பரவத் தொடங்கிய சீனா, 11வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்திய வரலாற்றில், இதுவரை இல்லாத வகையில்,கடந்த ஏப்ரலில், 12.20 கோடி பேர் வேலையிழந்துள்ளதாக, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையமான, சி.எம்.ஐ.இ., தெரிவித்து உள்ளது.

இது குறித்து, இந்த அமைப்பு வெளியிட்டு உள்ள அறிக்கை: கொரோனா பரவலைத் தடுக்க, மார்ச், 25ல் பிறப்பித்த ஊரடங்கு நடவடிக்கையால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கடைகள், பொழுதுபோக்கு மையங்கள் மூடப்பட்டு உள்ளன.

இதனால், 12.20 கோடி பேர் வேலையிழந்துள்ளனர். அவர்களில், கடைகள், உணவகங்களில் பணியாற்றுவோர், சிறு வணிகர்கள், கூலி வேலை செய்வோரின் எண்ணிக்கை, பெருமளவு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நடப்பு மே, 3 வரையிலான வாரத்தில், நாட்டின் வேலையில்லா திண்டாட்டம், வரலாறு காணாத வகையில், 27.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இது, 2017 ஜூலை – 2018 ஜூனில், 6.1 சதவீதமாக இருந்தது. இது, 45 ஆண்டுகளில் இல்லாத உயர்வாகும்.வேலையில் உள்ளோர் மற்றும் வேலையில்லாதோரை உள்ளடக்கிய, தொழிலாளர் பங்களிப்பு விகிதம், ஏப்., 21 நிலவரப்படி, 35.4 சதவீதமாக இருந்தது.

Also Read: New science inventions: உடல் வெப்பத்தை மின்சாரமாக மாற்றி LED-ஐ எரிய வைக்கும் கைக்கடிகாரம்…!

இது, வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்ததால், மே 3-ல், 36.2 சதவீதமாக உயர்ந்துஉள்ளது.

கடந்த மார்ச்சில், வேலைவாய்ப்பு, 39.60 கோடியாக குறைந்துள்ளது. இது, கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத சரிவாகும்.

இந்நிலையில், ஏப்ரலில் வேலைவாய்ப்பு, மேலும், 11.40 கோடி குறைந்து, 28.20 கோடியாக சரிவடைந்து உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *