Ukraine Russia War 2022: நீடிக்கும் போர் பதற்றம்..! உக்ரைனை ஆக்கிரமிக்கும் ரஸ்யா..!

Ukraine Russia War 2022: நீடிக்கும் போர் பதற்றம்..! உக்ரைனை ஆக்கிரமிக்கும் ரஸ்யா..!

உக்ரைன் கிழக்கு எல்லைப் பகுதியில், ரஷ்யா சுமார் 1,00,000 போர் படையினரை நிறுத்தியுள்ளது.

Ukraine Russia War 2022 newstmailonline

Ukraine Russia War 2022:

ரஷ்யா நவீன ரக பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் அங்கு நிலை நிறுத்தியுள்ளது.

இதுவரை படையினரை நிறுத்தியது தொடர்பாக ரஷ்யா போதிய விளக்கமளிக்கவில்லை என்றும்  அமெரிக்கா கூறுகிறது .

மேலும், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்கா கூறியுள்ளது.

சில மேற்குலக நாடுகளைச் சேர்ந்த உளவு அமைப்புகள், 2022-ம் ஆண்டில் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கலாம் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், நேட்டோ நாடுகளும், அமெரிக்காவும் உக்ரைனில் ஆயுதங்களைக் குவித்து  ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான பதற்றத்தை அதிகரிக்கின்றன என  ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

ரஷ்யாவோ, உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் எதுவும் தங்களுக்கு இல்லை என்று கூறிவருகிறது.

என்ன தான் பிரச்சனை?

உக்ரைன் 1990கள் வரை சோவியத் ஒன்றியத்தின் ஓர் உறுப்பு நாடாகத்தான் இருந்தது.

சோவியத் சிதைந்த பின்னர், சுதந்திரம் பெற்று, தங்களுக்கென புதிய அரசமைப்புச் சட்டத்தோடு செயல்பட்டு வருகிறது உக்ரைன்.

இப்போதும் உக்ரைன் தன் எல்லைகளை ரஷ்யாவோடும், ஐரோப்பிய ஒன்றியத்தோடும் பகிர்ந்து கொள்கிறது.

ஆனால் கலாச்சார ரீதியிலும், சமூக ரீதியிலும் ரஷ்யாவோடு பல தொடர்புகளைக் கொண்டுள்ள உக்ரைனில்,  ரஷ்ய மொழி பேசுவோர் இப்போதும் வாழ்ந்து வருகின்றனர்.

2014ஆம் ஆண்டு ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்த அதிபர் விக்டர் யனுகொவிச் (Viktor Yanukovych) பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ரஷ்யா, உக்ரைனின் தெற்குப் பகுதியில் உள்ள கிரீமிய தீபகற்பத்தைக் கைப்பற்றியது.

மேலும் கிழக்கு உக்ரைனில் கணிசமான பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிரிவினைவாதிகளுக்கு ரஷ்யா ஆதரவளித்தது.

இதன் விளைவாக தான்  ரசோ – யுக்ரேனியன் (Russo-Ukrainian) போர் உருவானது.

பிரிவினைவாதப் போராளிகளுக்கும் உக்ரைன் ராணுவத்துக்கும் இடையிலான போரில் இதுவரை 14,000த்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இப்போதும் போர் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

மின்ஸ்க் ஒப்பந்தம் மேற்கொள்ள காரணம்:

2015-ம் ஆண்டு உக்ரைனின் அப்போதைய அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ – ரஷ்யாவின் விளாதிமிர் புதின்  இருவருக்கும் இடையில் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.  அது தான் மின்ஸ்க் ஒப்பந்தம் என்றழைக்கப்படுகிறது.

உக்ரைன் மற்றும் ரஷ்ய ஆதரவோடு கிழக்கு உக்ரைனில் இருக்கும் பிரிவினைவாதப் படைகளுக்கு இடையிலான பிரச்சனையைத் தீர்ப்பவே  இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாக காணப்பட்டது.

பல முறை போர் நிறுத்தத்தைக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் அனைத்து முயற்சிகளும் பயனற்றுப் போயின. தொடர்ந்து எல்லையில் இரு தரப்பு படையினரும் கொல்லப்பட்டு வருகின்றனர்.

தேர்தல் நடத்த வலியுறுத்தல்:

ரஷ்யா மற்றும் உக்ரைன் கிழக்கு உக்ரைன் பிரதேசத்தைக் குறித்து தங்களுக்கென தனித்தனிப் பார்வையைக் கொண்டுள்ளன.

 அது ஒன்றோடொன்று ஒத்துப் போகாமல் இருக்கிறது என்கிறார் சதம் ஹவுஸ் அசோசியேட் ஃபெல்லோவான டன்கன் ஆலன்.

உக்ரைன் தன் நிலப்பரப்புகளை மீண்டும் தன் நாட்டோடு இணைக்கவும், தன் இறையாண்மையை நிலைநிறுத்தவும் விரும்புகிறது.

ஆனால் ரஷ்யாவோ, கிவ் (Kyiv) நகரத்தில் உள்ள அதிகாரிகளைக் கட்டாயப்படுத்தி கிழக்கு உக்ரைன் பகுதிக்கு சிறப்பு அந்தஸ்து அல்லது தன்னாட்சி அதிகாரத்தைப் பெற முயல்வதாக டன்கன் ஆலன் கருதுகிறார்.

உக்ரைன் உள்நாட்டுத் தேர்தலை நடத்தவில்லை என்றும், கிழக்கு உக்ரைனுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்காமல் அலைக்கழிப்பதாகவும் ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

ஆனால் உக்ரைன் அரசாங்கமோ, கிழக்கு உக்ரைனுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிவிட்டதாகக் கூறுகிறது.

மின்ஸ்க் ஒப்பந்தத்தின் படி, உக்ரைன் தன் நிலப்பரப்புகளை ரஷ்யாவிடமிருந்து முழுமையாக பெறுவதற்கு முன் கிழக்கு உக்ரைனில் தேர்தல்களை நடத்த வேண்டும் .

தேர்தல் நடைபெற வேண்டும் என்றால்  அப்பகுதி முதலில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும் என வலியுறுத்துகிறது உக்ரைன்.

அவ்வாறு இல்லையெனில் தேர்தல்  ரஷ்யாவிற்கு கீழ் நடைபெறும் என உக்ரைன் தரப்பு தெரிவிக்கிறது.

உக்ரைன் உள்ளூர் அளவிலான தேர்தல்களை நடத்தாமல்  கிழக்கு உக்ரைன் பகுதிகளைப் பெற அனுமதிக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரஷ்யா கடுமையாக எச்சரித்தது.

உக்ரைனின் இறையாண்மையைக் கட்டுப்படுத்த நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையக் கூடாது என புதிய வாதத்தையும் முன் வைத்துள்ளது ரஷ்யா.

மேலும் நேட்டோ அமைப்பு கிழக்கு நோக்கி முன்னேறுவதை நிறுத்துவது தொடர்பாக முறையாக உறுதியளிக்க வேண்டும் என்றும் தன் வாதங்களை முன் வைத்துள்ளது ரஷ்யா.

Also Read: White ufo in the sky:அமெரிக்கா ஏரி தீவில் வெள்ளை யுஎஃப்ஒ (UFO)..!

இங்கு நினைவுகூரத்தக்கது என்னவெனில் மேற்குலகத்தின் அதிரடி போக்குகள் தொடர்ந்தால் ராணுவ ரீதியில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்ய(Russia) அதிபர் விளாதிமிர் புதின் சமீபத்தில் எச்சரித்ததுவே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *