Tooth Decay: பல் துலக்காமல் இருந்தால் என்ன ஆகும் என யோசிச்சதுண்டா..!
Tooth Decay: பல் துலக்காமல் இருந்தால் என்ன ஆகும் என யோசிச்சதுண்டா..!
உங்களுக்கு என்ன வயதானாலும், உங்கள் பற்களை ஆரோக்கியமாக வைத்து கொள்ளவேண்டும், சரியாக பற்களை நீங்கள் கவனித்து கொண்டால், ஆயுள் காலம் முழுவதும் உங்கள் பற்களை நீங்கள் ஆரோக்கியமாக வைத்து கொள்ள முடியும்.

தினந்தோறும் பல் துலக்காமல் இருந்தால் வாயில் பல்வேறு வகையான பாக்டீரியாக்கள் வளர்ந்து நிறைய பிரச்சினைகள் வரும்.
இவை பற்களின் இடுக்குகளில் சிக்கியுள்ள உணவுத் துணுக்குகளை உண்ண முயற்சிக்கும்.
அப்போது அந்தப் பாக்டீரியாக்கள் சுரக்கும் அமிலம் காரணமாகப் பல் வெளிப்பகுதி (Enamel) அரித்து ஈறுகளில் பாதிப்பு ஏற்படும்.
பல் துலக்குவதன் மூலம், பற்களின் மீது பாக்டீரியாக்கள் வளர்வதைத் தடுக்கிறோம்.
உணவு உண்ட பின் சுமார் 48 மணி நேரங்கள் பல் துலக்காமல் இருந்தால் மட்டுமே, பற்களைப் பாதிக்கும் அளவுக்கு பாக்டீரியாக்கள் வளரும்.
தினசரி ஒருமுறை பல் துலக்கினாலே போதும்தான். ஆனால் பிஸ்கட்ஸ், சாக்லேட் போன்ற பற்களில் ஒட்டிக்கொள்ளும்.
எனவே, காலையிலும் இரவிலும் பல் துலக்குவது நல்லது. ஒவ்வொரு முறை உணவு உண்டபின் வாயைக் கொப்பளிப்பது, தினசரி இருமுறை பல் துலக்குவது என்பது ஆரோக்கியமான பழக்கம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அதுமட்டும் அல்ல தவறாக பல் துலக்குவதால் நம்முடைய நோயெதிர்ப்பு சக்தி குறையும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
Tooth Decay:
நாம் அனைவரும் ஒரு நாளைக்கு 2 முறை பல் துலக்குவோம். வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை தவிர்க்க மற்றும் பல்வேறு நோய்களின் அபாயத்தைக் குறைக்க பல் துலக்குவோம்.
ஏனெனில் மோசமான பல் சுகாதாரம் நம் நீண்ட ஆயுளை பாதிக்க வல்லது.
பற்களின் அமைப்பில் ஒவ்வொரு பல்லின் அடிப்பகுதியும் உயிரியல் அகலம் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு பாதுகாப்பு அமைப்பு மாதிரி செயல்படுகிறது. இது கெட்ட பாக்டீரியாக்கள் உடலினுள் நுழையாமல் நோயெதிரிப்பு சக்தியை பராமரிக்க உதவுகிறது.
எனவே உங்க நோயெதிரிப்பு சக்தியை நீங்கள் அதிகரிக்க விரும்பினால் உங்க பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுவது அவசியம்.
Also Read: பெண்களுக்கு தேவையான மிகவும் முக்கியமான 5 வைட்டமின்கள்..!
நோய்களை விரட்ட நாம் ஆரோக்கியமாக சாப்பிடவும் வேண்டும்.
உங்க உணவில் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், சர்க்கரை குறைவாகவும் இருந்தால் பற்சிதைவை ஏற்படுத்தும் பிளேக்குகளை தடுக்க முடியும்.
அமெரிக்க பல் சங்கத்தின் படி எல்லோரும் இரண்டு முறை பல் துலக்கி, பிளாஷ் செய்து வந்தால் நல்லது.
அதுவும் உங்களுக்கு நீரிழிவு நோய் மற்றும் ஆட்டோ Immune Disorder இருந்தால் அடிக்கடி பல் துலக்க முயலுங்கள். அதே மாதிரி பல் மருத்துவரை வருடத்திற்கு 2 முறையாவது பார்க்க வேண்டும்.