Tamil Nadu CM order: மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு-முதலமைச்சர் உத்தரவு..!

Tamil Nadu CM order: மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு-முதலமைச்சர் உத்தரவு..!

ஏப்ரல் 30-ம் தேதியுடன் ஓய்வுபெறவுள்ள மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 2 மாத காலம் பணி நீட்டிப்பு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Tamil Nadu CM order-newstamilonline

Tamil Nadu CM order:

கொரோனாவுக்கு எதிராக மருத்துவர்களும், செவிலியர்களும் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த மாதத்துடன் பணி ஓய்வுபெறும் மருத்துவர்களின் பணியை நீட்டிப்பு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஏப்ரல் 30-ம் தேதியுடன் ஓய்வுபெற உள்ள மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஒப்பந்த முறையில் 2 மாத காலத்திற்கு பணி நியமண ஆணைகள் வழங்கப்படும்.

தற்போது 1,323 செவிலியர்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது.

Also Read: விண்வெளி நிலையம் சென்று மீண்டும் பூமிக்குத் திரும்பும் சீன Long March 5B ராக்கெட்..!

தேர்வு செய்யப்பட்டுள்ள செவிலியர்களுக்கு பணி ஆணை கிடைத்தவுடன் பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *