இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Apricot Benefits: கல்லீரலை பாதுகாக்கும் ஆப்ரிகாட் பழம் செய்யும் நன்மைகளை பாருங்க..!

Apricot Benefits: கல்லீரலை பாதுகாக்கும் ஆப்ரிகாட் பழம் செய்யும் நன்மைகளை பாருங்க..!

ஆப்ரிகாட் என்று சொல்லகூடிய இந்த பழம் பாதாமி அல்லது வாதுமை பழம் என்றழைக்கப்படுகிறது. இது இனிப்பு மற்றும் புளிப்பு சுவையை கொண்டிருக்க கூடியது.

Apricot Fruit Benefits

சீமை வாதுமை என்று நாம் சொல்லும் இந்த பழமானது மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறத்தில் சதை பற்று கொண்டது.

100 கிராம் ஆப்ரிகாட் பழத்தில் வைட்டமின் ஏ 12% வைட்டமின் சி 6% பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

இது குறைவான கலோரிகளை உள்ளடக்கியுள்ள பழமும் கூட. இது உடலுக்கு தினசரி தேவையான சத்துக்களில் முக்கியமானது.

இந்த ஆப்ரிகாட் பழத்தை அப்படியே சாப்பிடலாம். இதை உலர வைத்து சாப்பிடுவதை பெரிதும் விரும்புகிறார்கள்.

Apricot Benefits:

​செரிமானம் உடன் மலச்சிக்கல் பிரச்சனை

ஆப்ரிகாட் பழத்தில் இருக்கும் நார்ச்சத்து கரையக்கூடியது. இது குடல் இயக்கத்தை ஆரோக்கியமாக வைக்க செய்கிறது.

குடலில் மலத்தை தேக்காமல் வெளியேற்ற செய்கிறது. இதில் இருக்கும் நார்ச்சத்தானது கொழுப்பு அமிலங்களாக மாற்றப்பட்டு செரிமானத்தை சீராக்குகிறது.

​வைட்டமின் ஏ -கண்களுக்கு நன்மை

வைட்டமின் ஏ-வின் சிறந்த ஆதாரம் ஆப்ரிகாட் பழங்களில் உள்ளது. இது ரெட்டினோல் என்று சொல்லப்படுகிறது.

இந்த கொழுப்பு கரையக்கூடியது. இவை கண் பார்வையை மேம்படுத்த உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுக்குள் வைத்திருக்கவும் செய்கிறது.

இதயத்துக்கு நன்மை

இதயத்துக்கு நார்ச்சத்து மிக்க இந்த ஆப்ரிகாட் பழமானது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்க செய்கிறது.

இது இதயத்தை பாதுகாக்கும் மிக முக்கியமான பணி ஆகும்.

இது கெட்ட கொழுப்பை கரைப்பதோடு உடலில் நல்ல கொழுப்பின் அளவையும் அதிகரிக்க செய்கிறது.

இதய தசைகளை ஒழுங்காக வைத்திருக்க தினசரி ஒரு ஆப்ரிகாட் அல்லது உலர்ந்த சில துண்டுகளை சாப்பிட்டு வந்தால் போதுமானது.

இரத்தத்துக்கு நன்மை

தாவர உற்பத்தியில் ஹீம் இல்லாத இரும்பு உள்ளது. இது ஆப்ரிகாட். பழத்திலும் உள்ளது.

உடல் இரும்பை உறிஞ்சு எடுக்க சில நேரங்கள் ஆகும். இது உடலில் நீண்ட நேரம் தங்கியிருக்கும்.

அதனால் இரத்த சோகை போன்ற இரும்புச்சத்து குறைபாடு வராமல் தடுக்கப்படுகிறது.

நீரிழிவுக்கு நன்மை

உலர்ந்த பழங்களாக இருந்தாலும் அப்படியே சாப்பிட்டாலும் நீரிழிவுக்கு நன்மை செய்யும்.

இது குறைந்த கிளைசெமின் குறியீட்டைக் கொண்டுள்ளது. ஆய்வுகளின் படி இது இரத்த குளுக்கோஸ் அளவை அதிகமாக்க செய்யாது.

உலந்த ஆப்ரிகாட் பழங்களிலிருக்கும் மிதமான அளவு கொண்ட பிரக்டோஸ் ஆனது சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.

இது இன்சுலின் அளவுகளில் நன்மை பயக்ககூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது.

எலும்புகளை பலப்படுத்த செய்கிறது

எலும்புகளின் உருவாக்கம் மற்றூம் வளர்ச்சிக்கு தேவை கால்சியம் என்பதை அறிவோம்.

இந்த கால்சியமானது இந்த ஆப்ரிகாட் பழத்தில் அதிகமாக உள்ளது. உடலில் போதுமான அளவு பொட்டாசியம் இல்லாமல் கால்சியம் உறிஞ்சப்படுவது பயனளிக்காது.

ஆனால் அதிர்ஷ்டவசாமாக ஆப்ரிகாட் பழம் இரண்டையும் கொண்டுள்ளது.

நீரேற்றமாக வைத்திருக்க செய்கிறது

பழங்கள் நீர்ச்சத்து கொண்டிருப்பவை போன்றே ஆப்ரிகாட் பழங்கள் இயற்கையாகவே தண்ணீர் அதிகம் கொண்டிருக்க கூடியவை.

இது இரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை, மூட்டு ஆரோக்கியம் மற்றும் இதயத்துடிப்பு போன்றவற்றை கட்டுப்படுத்த உதவும்.

ஒரு கப் ஆப்ரிகாட் பழங்களில் மூன்றீல் இரண்டு பங்கு தண்ணீரை கொண்டிருக்கிறது.

Also Read: Radish Benefits for Health: இதயத்தின் நண்பன் – சிவப்பு முள்ளங்கி சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்..!

நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்காதவர்கள் எனில் புதிய பழங்களை எடுத்துகொள்வது அன்றாட நீர்ச்சத்தை பூர்த்தி செய்ய உதவுகிறது.