Benefits of Sunlight: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க sunlight-ல் எவ்வளவு நேரம் நிற்கலாம்..!
Benefits of Sunlight: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க sunlight-ல் எவ்வளவு நேரம் நிற்கலாம்..!
நம் வீட்டுப் பெரியவர்கள் சூரிய வெயிலில் நிற்க வேண்டாம் அதன் புற ஊதாக் கதிர்களால் பாதிப்பு உண்டாகும் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம்.

Benefits of Sunlight:
ஆனால் உண்மையில் சூரியக் குளியலால் நமக்குப் பல்வேறு நன்மைகள் உண்டாகின்றன.
சூரிய ஒளியிலிருந்து, வைட்டமின் டி கிடைக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
வைட்டமின் டி குறிப்பிட்ட அளவு நம் உடலுக்கு தேவைப்படுகிறது.
உலகம் முழுவதும் பெரும்பான்மையான மக்கள் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வைட்டமின் டி குறைபாடு இருந்தால், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கோடைக்காலத்தில் விடியற் காலையில் எழுந்து குறைந்தபட்சம் 5 நிமிடங்களாவது sunlight படுமாறு நிற்பது நல்லது.
வைட்டமின் டி ஊட்டச்சத்தை நாம் உணவில் இருந்து போதுமான அளவு பெற முடியாது.
வைட்டமின் டி குறைபாடுகள்:
உடல்வலி, மூட்டுவலி, உடற்சோர்வு, மிகவும் பலவீனமாக இருப்பது போன்றவை வைட்டமின்-டி குறைபாட்டின் முக்கிய அறிகுறிகள்.
இந்தியாவில் வைட்டமின் டி குறைப்பட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம்.
உடலில் வைட்டமின்-டி குறைவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு.
ஆனால், மிக முக்கியமான காரணம் உடலில் சூரிய ஒளிபடாமலே இருப்பதுதான்.
ஆராய்ச்சியின் படி, வசந்த காலத்திலும் கோடைகாலத்திலும் சூரியனில் 10 முதல் 20 நிமிடங்கள் போதுமானதாக இருக்கும் என்று தெரிவிக்கிறது.
ஆனால், குளிர்காலத்தில் ஒரு நபருக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவு வைட்டமின் டி பெற சூரியனில் குறைந்தது 2 மணிநேரம் செலவழிக்க வேண்டும்.
ஏனென்றால் குளிர்காலத்தில் 10 சதவீதம் மட்டுமே நம் உடலில் சூரிய கதிர்களுக்கு வெளிப்படும்.
எனவே போதுமான அளவு வைட்டமின் டி பெற அதிக நேரம் எடுக்கும்.
வைட்டமின் டி பிற ஆதாரங்கள்:
வைட்டமின் டி இன் பிற ஆதாரங்கள் ஒரு சில உணவுப் பொருட்களில் மட்டுமே உள்ளது.
அதுவும் ஒரு சிறிய அளவில் மட்டுமே.
ப்ரொக்கோலி, ஓக்ரா, பால் பொருட்கள் மற்றும் காளான் ஆகியவை வைட்டமின் டி யின் சில பொதுவான ஆகாரங்கள்.
சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, திராட்சை போன்ற பழங்களில் ஏதேனும் ஒன்றை தினமும் உட்கொள்ளலாம்.
எவ்வளவு நேரம் சூரிய ஒளியில் நிற்க வேண்டும்?
காலை நேர சூரிய ஒளியில் நீங்கள் குறைந்தபட்சம் ஒரு 15 நிமிடங்கள் இருக்க வேண்டும்.
இது உங்கள் தோல் வைட்டமின் டி-ஐ உற்பத்தி செய்ய உதவும். இது நமக்கு பல்வேறு வழிகளிலும் உதவும்.
நீண்ட நேரம் சூரிய ஒளி படுமாறு இல்லாததை உறுதி செய்துகொள்ளவும்.
இது பல தோல் தொடர்பான பிரச்சினைகளை உண்டாக்கும்.
சூரிய ஒளியைப் பெறுவதற்கான சிறந்த நேரம் சூரிய உதயத்தின்போதுதான்,
இது மேற்சொன்ன அத்தனை வகைகளிலும் பலன் பெற உதவும்.
Also Read: Health tips: தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்திருக்க சாப்பிட வேண்டிய எளிய உணவுகள்..!
ஆனால், நீங்கள் வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே இருப்பதை, அதற்கு மேல் ஆகாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
இது நம் தோல் வைட்டமின்-டி உற்பத்தை செய்வதற்கு உதவும், இது நம் எலும்புகளுக்கு வலுவூட்டி, நல்ல பார்வைத் திறன் பெற உதவும்.
சூரியக்குளியலின் மிகச் சிறந்த பலன்களைப் பெற மிகச் சிறந்த நேரம் காலைநேரம்தான்.