How to Control Snoring: குறட்டை வராமல் தடுக்கும் நவீன சா தனம் அறிமுகம்..! விலை எவ்வளவு தெரியுமா..?
How to Control Snoring: குறட்டை வராமல் தடுக்கும் நவீன சாதனம் அறிமுகம்..! விலை எவ்வளவு தெரியுமா..?
இரவு நேரங்களில் படுக்கையறையில் கேட்கும் கொர் கொர் ஓசை பெரும்பாலான மக்களை அச்சுறுத்தி வருகின்றது.
குறட்டை ஒலி இரவு நேரத்தில் படுக்கையறையின் நான்கு சுவருக்குள்ளே அடங்கிப்போவதால், விடிந்ததும் பலரும் அதைப்பற்றி நினைத்துப் பார்ப்பதில்லை.

How to Control Snoring
களைப்பு உட்பட பல்வேறு காரணங்களால் இவ்வாறு குறட்டை ஏற்படுகின்றது.
எனினும் மருத்துவ முறையில் இதனை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை.

இப்படியான நிலையில் DreamIT எனப்படும் இலத்திரனியல் சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
கையில் அணியக்கூடிய இச்சாதனமானது குறட்டையை தடுக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அதாவது சுவாசத்தின் தன்மையை அடையாளம் கண்டு அதிர்வினை ஏற்படுத்துவதன் ஊடாக இச் சாதனம் குறட்டையினை தடுக்க உதவுகின்றது.
இதன் விலையானது தற்போது 99 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.
குறட்டையைக் குறைக்க சில எளிய வழிகள் இதோ:
உங்களின் உடல் எடையைப் பரிசோதிக்க வேண்டும். உயரத்துக்கு ஏற்ப, உடல் எடையுடன் இருப்பதன் மூலம் குறட்டைவிடுவது குறையும்.
குப்புறப் படுத்து உறங்குவதாலும் குறட்டை வரலாம். தூங்கப் போவதற்கு முன் சட்டை பையில் ஒரு டென்னிஸ் பந்தை வைத்து கொண்டு படுக்கலாம். குறட்டை வராமல் தப்பிக்கலாம்.
முதுகு தரையில் படும்படி படுங்கள். குப்புறப் படுப்பதோ, ஒரு களித்து படுப்பதோ மூச்சு திணறலை ஏற்படுத்தலாம்.
தலையணையின் உயரத்தை கொஞ்சம் அதிகரியுங்கள்.
அறை மிகவும் சூடாக இருந்தால் தொண்டையில் காற்று புகும்போது நெரிசல் ஏற்பட்டு சுவாசிக்க முடியாமல் குறட்டைவிட வாய்ப்பிருக்கிறது. இதனால் அறையை முடிந்த வரை குளுமையாக வைத்திருங்கள்.
குறட்டைக்கு தூசும் ஒரு காரணமாக இருக்கலாம். வீட்டை சுத்தமாக வைத்துகொள்ளுங்கள்.
மூச்சுப் பயிற்சி, யோகா பயிற்சி நல்ல பலனைத் தரும்.
உங்கள் அருகில் தூங்குபவரிடம் நீங்கள் எவ்வளவு சப்தமாக குறட்டைவிடுகிறீர்கள் என்பதை கவனிக்கச் சொல்லுங்கள்.
ஒருவேளை நீங்கள் மிக அதிகமாக பயங்கர சத்தத்துடன் குறட்டைவிடுகிறீர்கள் என தெரிய வந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள். அலட்சியம் வேண்டாம்.