Stomach Acid: புளிச்ச ஏப்பம் ஏன் ஏற்படுகிறது தெரியுமா?
Stomach Acid: புளிச்ச ஏப்பம் ஏன் ஏற்படுகிறது தெரியுமா?
அன்றாட வாழ்வில் நம்மில் பல பேர் இந்தப் பிரச்சனையை எதிர்கொண்டிருப்போம்.
சிலருக்கு இது தீவிரமான பாதிப்பாகவும் இருக்க வாய்ப்புள்ளது.

What is Acid Reflux?
அமிலப் பின்னோட்ட நோய் எனப்படும் புளிச்ச ஏப்பத்தை ஆசிட் ரிஃப்ளக்ஸ்(Acid reflux) என்று அழைப்பர்.
அதன் அறிகுறியை பற்றி இங்கு காண்போம்,
ஆசிட் ரிஃப்ளக்ஸ்(Acid reflux) என்பது இரைப்பை அமிலம் வயிற்றில் இருந்து வெளியேறி, உணவுக்குழாயில் கசியும் போது ஏற்படுகிறது.
இந்த வார்த்தை சமீப காலமாக அதிகமாக கேள்விப்படும் ஒன்றாக இருக்கிறது.
இதை நாம் வாயுத் தொல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் ஆசிட் ரிஃப்ளக்ஸ் என்பது இரைப்பை உணவுக்குழாயில் ஏற்படும் ஒருவிதமான பிரச்சனை.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினருக்கும் வரக்கூடிய இந்த பிரச்சனைக்கான காரணங்கள் மற்றும் அதன் அறிகுறிகள் எப்படி இருக்கும்.
அதற்கு என்ன மாதிரியான சிகிச்சை மேற்கொள்ளலாம் என்பது குறித்து இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.
வாழ்க்கை முறை மாற்றங்கள், சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளாமல் இருப்பது, நாள் கணக்கில் பசியோடு இருப்பது, சாப்பிட்டவுடனேயே தூங்குவது போன்ற காரணத்தினால் வயற்றில் அமிலத்தன்மை அதிகரித்து இந்த அமிலப் பின்னோட்ட நோய் உண்டாகிறது. இதனால் சிலருக்கு அடிக்கடி புளித்த ஏப்பம் போன்ற பிரச்சனை உண்டாகும்.
விளக்கம் :
வயிற்றுப் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் சில வகை அமிலங்கள் இரைப்பை மற்றும் குடலை நோக்கி இறங்கும்போது ஆசிட் ரிஃப்ளக்ஸ் உண்டாகிறது.
குறிப்பாக வயிற்றுப்பகுதியில் உள்ள ஹைட்ரோ குளோரிக் அமிலம் (Hydrochloric acid) உள்ளிட்ட அமிலங்கள் உணவு மூலக்கூறுகளை உடைத்து செரிமானத்துக்கு உதவி செய்கிறது.
அப்போது வயிற்றுப் பகுதியில் இருந்து இரைப்பை மற்றும் குடல் பகுதியை நோக்கி இந்த அமிலம் செல்லும்போது புளிப்பான ஏப்பம் வாய்வழியே வெளியேறும்.
இதை தான் அமிலப் பின்னோட்ட நோய் என்று கூறுவார்கள்.

Stomach Acid:
காரணங்கள்:
இந்த ஆசிட் ரிஃப்ளக்ஸ்(Acid reflux)பல காரணங்களால் நமக்கு உண்டாகின்றன. அவற்றில் சில முக்கிய காரணங்கள் இதோ,
- குடலிறக்கம்.
- உடல் பருமன்.
- புகைப்பிடித்தல்,
- போதிய உடற்பயிற்சியின்மை.
- அஜீரணக் கோளாறு.
- வலி நிவாரணிகள் மற்றும் ஆஸ்துமா பிரச்சனைகளுக்காக மருந்து எடுத்து கொள்பவர்கள்.
ஆகியோருக்கு இந்த ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சினை அதிக அளவில் உண்டாகும்.
அறிகுறிகள் என்னென்ன :
அடிப்படையில் நிறைய நபருக்கு இருக்கும் பிரச்சனை நெஞ்செரிச்சல் தான்.
நெஞ்செரிச்சல் மட்டுமல்லாமல் கீழ்வரும் அறிகுறிகளும் ஏற்படலாம்.
- உணவு ஜீரணமடைதலில் தாமதம் ஏற்படுதல்.
- அஜீரணக் கோளாறுகள்.
- தொண்டையில் எரிச்சல் உணர்வு.
- புளித்த ஏப்பம்.
- குமட்டல் மற்றும் வாந்தி.
- அடிவயிற்றில் எரிச்சல்.
- உணவு விழுங்கும்போது சிரமம் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் உண்டாகும்.
Sour Burp:
சிகிச்சைகள்:
இந்த பிரச்சனை ஏற்படுகிறவர்களுக்கு பெரிதாக மருந்துகள் எதுவும் தேவையில்லை.
அது தானாகவே விரைவில் சரியாகிவிடும்.
அடிக்கடி இந்த ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சனை ஏற்படுகிறவர்களுக்கு ஆன்டாக்டிட்கள்(antacids), ஆல்ஜினேட்(alginate), ஃபமோடிடின்(famotidine) போன்ற மருந்துகள் பரிந்துரை செய்யப்படுகின்றது.
தடுக்கும் முறை :
இதை சரிசெய்வதற்கு நம்முடைய வாழ்க்கை முறையிலும் உணவு முறையிலும் சில மாற்றங்களைச் செய்தாலே இதைச் சரிசெய்ய முடியும்.
அவ்வாறு நாம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இதோ,
- காரமான உணவுகளை தவிர்த்தல்.
- தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
- இரவு சாப்பிட்டவுடன் தூங்கக் கூடாது, 2-3 மணி நேர இடைவெளி வேண்டும்.
- அஜீரணக் கோளாறு இருக்கும்போது கடினமான வயிற்று உடற்பயிற்சிகள் செய்ய கூடாது.
வெதுவெதுப்பான பால் குடிப்பது புளித்த ஏப்பத்தை கட்டுப்படுத்துகிறது.
Also Read: Delta Variant Symptoms: டெல்டா வைரஸ் பரவல் – ஆஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை!
தனியா மற்றும் இஞ்சி சேர்த்து சுக்குமல்லி காபி குடிக்க புளித்த ஏப்பம் நின்று விடும்.
மேலும் வயிற்றை இறுக்கும் ஆடைகளை அணிய வேண்டாம். அதிக அமிலத்தன்மையான உணவுகளையும், அதிக காபி, புகை மற்றும் மதுபானம் போன்றவற்றையும் தவிர்த்தால் கட்டாயம் இந்த நோயின் பாதிப்பை குறைக்க முடியும்.