Sprouts Benefits: முளைவிட்ட வெந்தயத்தை சாப்பிட்டால்..
Sprouts Benefits: முளைவிட்ட வெந்தயத்தை சாப்பிட்டால்..
முளைகட்டிய வெந்தயத்தில் வைட்டமின் சி, புரோட்டீன், நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்றவை இருக்கின்றன.

Benefits of Eating Sprouts:
வெந்தயத்தில் உள்ள மூலக்கூறுகளால் உடலில் இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும். அதனால் இது, சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்.
கொலஸ்ட்ரால் சேராமல் பார்த்துகொள்ளும்.
தொப்பை மற்றும் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் முளைகட்டிய வெந்தயத்தைச் சாப்பிடுவது பயனை அளிக்கும்.. வயிற்றுப்புண், பெண்களின் கர்ப்பப்பை தொடர்பான நோய்கள், வெள்ளைப்படுதல் மற்றும் அல்சர் போன்ற நோய்களையும் குணப்படுத்தும்.
வெந்தயமானது அன்றாட சமையலுக்கு பயன்படும் ஒரு பொருளே ஆகும். அவ்வகையில் இது பல்வேறு சத்துக்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது.
பழங்கால மருத்துவ முறையிலும் வெந்தயம் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனுடைய விதைகள்,இலை எல்லாமே மிகவும் பயனுள்ளதாகும்.
சாதரண விதைகளை உண்ணுவதை விட அவற்றை முளைகட்டிச் சாப்பிட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.
வெந்தயத்தை முளைகட்டி உண்பதால் எவ்வித பலன்கள் ஏற்படுகின்றன என்பதை விரிவாக காண்போம்;
சத்துக்கள் :
முளைகட்டிய வெந்தயத்தில் அதிகப்படியான “விட்டமின்சி,ப்ரோட்டீன், நியாசின்,பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் ஆல்கலாய்ட்ஸ்“ போன்றவை நிறைந்திருக்கின்றன.
அதோடு ஈஸ்ட்ரோஜனாக கருதப்படும் டயோஸ்ஜெனினும் அதிகமாக இதில் காணப்படுகிறது.
இதயத்திற்கு ஆரோக்கியம் தரும் :
முளைகட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் தொடர்பான பிரச்சனைகளை நீங்கிவிடும்.
இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நம் உடலில் கொலஸ்ட்ரால் சேராமல் இருக்கும். இதனால் இதயத்தின் செயல்பாட்டில் எவ்வித இடர்பாடும் ஏற்படாமல் இருக்கும்.
மேலும், இதிலுள்ள பொட்டாசியம் உடலில் இருக்கும் சோடியத்தின் அளவை சீராக்கும். இதனால் இதயத்தில் ரத்த ஓட்டம் சீராக நடக்கும்.
ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் :
இதில் அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடன் நிறைந்திருக்கிறது. இவற்றை அடிக்கடி நாம் எடுத்துக் கொள்வதால் உடலிலுள்ள செல்களின் வளர்ச்சிக்கு செழிப்பாக நடைபெறுகிறது.
செரிமானம் :
பொதுவாக வெந்தயத்தை செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை போக்குவதற்கு மருந்தாக பயன்படுத்துவது வழக்கமான ஓன்று தான்.
அதுவே, இதனை முளைகட்டி சாப்பிட்டால் பலன்கள் இரட்டிப்பாக கிடைக்கின்றன. ‘வயிறு பெருமியிருத்தல், அஜீரணம்,வயிற்று வலி, வயிற்றுப் போக்கு‘ போன்ற பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு இது உடனடித் தீர்வு அளிக்கிறது.
மாதவிடாய் :
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் ‘வயிற்று வலி,தலைவலி,எரிச்சல்,கோபம்‘ போன்ற உணர்வுகளையும் குறைக்க இவ் வெந்தயம் நற்பலனை தரும்.
மெனோபாஸ் பிரச்சனையில் இருப்பவர்களுக்கு இது சிறந்த மருந்தாக அமையும்.
தாய்ப்பால் சுரக்க:
முளைக்கட்டிய வெந்தயத்தில் கேலக்டாகோகோவ்(galactagogou) என்னும் சத்து நிறைந்துள்ளது.
இது பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்துகிறது. தாய்ப்பால் கொடுக்கிற பெண்கள் தினமும் ஒரு ஸ்பூன் அளவில் இதனை உட்க்கொண்டால் நல்லது.
உடற் சூடு தனிய:
இயற்கையாகவே வெந்தயம் குளிர்ச்சி நிறைந்த ஒன்றாகும், அதிக உடல் சூடு இருப்பவர்கள் தினமம் காலையில் வெறும் வயிற்றில் இந்த வெந்தயத்தை உண்டால் உடல் சூடு தணியும்.
சாப்பிடும் முறை:
எத்தகைய உடல்வாக்கு கொண்டவராக இருந்தாலும் ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூனுக்கு வெந்தயத்தை சாப்பிடுவது நல்லது அல்ல.
முளைகட்டிய வெந்தயத்தை காலை உணவுக்கு முன்பாக சாப்பிடுவது மிகவும் நல்லது.
முளைகட்டிய வெந்தயத்தில் அவ்வளவாக கசப்புத் தெரியாது. குறைந்தது ஒரு மாதம் வரை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் மட்டுமே முழு பலனை அடைய முடியும்.
குறிப்பு:
உணவுகளில் ஏதேனும் ஒவ்வாமை இருப்பவர்கள், மற்றும் வேறு நோய்க்கு மருந்து எடுத்துக் கொண்டிருப்பவர்கள் மருத்துவ ஆலோசனையினை கேட்டு உண்ணுவது நல்லது.
Also Read: Open pores skin இயற்கையான முறையில் சரி செய்ய டிப்ஸ்..!
மேலும், வெந்தயம் அதிக குளிர்ச்சி தன்மை கொண்டது என்பதால் சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள், அதை எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்.