South Africa India ODI: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி!

South Africa India ODI: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி!

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் ஃபில்டிங்(fielding) செய்வதாக அறிவித்தது.

South Africa vs India ODI

South Africa India ODI:

நேற்றைய ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ், பிரசித் கிருஷ்ணா, ஜெயந்த் யாதவ், தீபக் சாஹர் ஆகியோர் புதியதாக சேர்க்கப்பட்டனர்.

தொடக்க வீரர் மாலன் 1 ரன்னில் ஆட்டமிழக்க, கேப்டன் பெவுமா 8 ரன்களில் ரன் அவுட்டானார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த டி காக் மற்றும் வெண்டர்டுசன் தங்கள் ஆட்டத்தால் ரன்களை சேர்த்தனர்.

இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்தது.

பும்ரா பந்துவீச்சால் டி காக் 124 ரன்கள்எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் அதிரடியை காட்டிய வெண்டர்டுசன் 52 ரன்கள் எடுத்திருந்த போது சாஹல் பெவிலியன் அவரை வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து டேவிட் மில்லர் தன் பங்கிற்கு 39 ரன்கள் சேர்க்க, இறுதியில் டுவைன் பிரிட்டோரியஸ் 20 ரன்கள் எடுத்தார்,

கடைசி ஓவரில் பிரஷித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் இதனால் தென்னாப்பிரிக்க அணி 49.5வது ஓவரில் 287 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

களமிறங்கிய இந்திய அணி:

இந்திய அணியில் கேப்டன் ராகுல் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஷிகர் தவான், விராட் கோலி இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர்.

தவான் 61 ரன்களிலும், கோலி 65 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, ரிஷப் பண்ட் அவுட்டாகி வெளியேறினார்.

பெரிதும் ரன்கள் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் கடைசியில் 26 ரன்களிலே ஆட்டமிழந்தார். சூரியகுமார் யாதவ் 39 ரன்களில் வெளியேறினார்.

223 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்த நிலையில் களத்துக்குள் இறங்கிய தீபக் சாஹர் அதிரடியாக விளையாடி ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தார்.

தீபக் சாஹர் ஆட்டம்:

தீபக் சாஹர் 5 பவுண்டரிகள், 2 சிக்சர் என 31 பந்துகளில் அரைசதம் கடந்தார். அவருக்கு பும்ரா துணை நிற்க இந்திய அணி வெற்றியின் அருகில் வந்தது.

ஆனார் தீபக் சாஹர் 54 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் இந்திய ரசிகர்களின் நம்பிக்கையும் உடைந்தது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பும்ரா 12 ரன்கள் மட்டும் அடித்தார்.

கடைசி விக்கெட்டின் போது, இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய அணி தொடரை முழுமையாக இழந்தது.

Also Read: JIO 5G plans in India: இந்தியா முழுக்க 1000 நகரங்களில் JIO 5G சேவை – விரைவில் அறிமுகம்!

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக வென்ற தென்னாப்பிரிக்க(South Africa vs India) அணி இந்தியாவை ஓயிட்வாஷ் செய்தது

ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது டி காக்கிற்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *