இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Snoring: குறட்டை விடாம தூங்கணுமா..? இத பண்ணுங்க குறட்டை வராது..!

Snoring: குறட்டை விடாம தூங்கணுமா..? இத பண்ணுங்க குறட்டை வராது..!

குறட்டை ஒரு பொதுவான பிரச்சனை. சிலர் படுத்ததுமே குறட்டை விட்டு நிம்மதியாக தூங்கிவிடுவார்கள்.

இரவில் தூக்கமின்றி தவிப்பவர்கள் பலர் என்றால், அருகில் படுப்பவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடும் அளவுக்கு, சத்தமாக குறட்டை விட்டு தூங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.

சரி, குறட்டை(Heavy Snoring) எதனால் வருகிறது என்று தெரியுமா?

Heavy Snoring

குறட்டை வருவது, தொண்டையில் அதிகம் சதை வளர்ந்து சுவாச குழாய்க்கு செல்லும் ஆக்சிஜனில் தடை ஏற்படுவதாலும். தூங்கும்போது, மூளையால் சுவாசிப்பதைக் கட்டுபடுத்த முடியாமல் போவதாலும் நடக்கலாம்.

நாம் சுவாசிக்கும் போது காற்றானது மூக்கு, வாய் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. அப்படி செல்லும் போது அந்த பாதையில் ஏதேனும் தடை ஏற்படும் போது வரும் சப்தம் தான் குறட்டை.

பொதுவாக தூங்கும் போது தொண்டை சதைகள் தளர்ந்து ஓய்வெடுக்கும். அந்நேரம் மூச்சுப் பாதையின் அளவு குறுகி இருக்கும். இந்த குறுகலான பாதையில் சுவாசிக்கும் காற்று செல்லும் போது சப்தம் வரும்.

ஒருவருக்கு குறட்டை சளியுடனான மூக்கடைப்பு, சைனஸ் பிரச்சனை, தொண்டை சதை வளர்ச்சி, மூக்கு சுவர் வளைந்து இருப்பது, உடல் பருமன், தைராய்டு பிரச்சனை போன்ற பல காரணங்களால் வரலாம்.

அதோடு புகைப்பழக்கம் மற்றும் மது பழக்கம் உள்ளவர்களுக்கும் குறட்டை வரக்கூடும்.

Snoring

குறட்டை விட்டே அடுத்தவர் தூக்கத்தைக் கெடுப்பது தர்ம சங்கடமான விஷயம்தான். அதை எப்படி கட்டுப்படுத்துவது என்று இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

குறட்டை பிரச்சனையைத் தடுக்க பல வழிகள் உள்ளன. அதில் சளியை உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்கள் உண்பதைத் தவிர்ப்பதுடன், ஒருசில உணவுகளை உட்கொள்வதன் மூலம் குறட்டை பிரச்சனையைத் தடுக்கலாம்.

மேலும் இரவு நேரத்தில் ஒருசில உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பதாலும் குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

குறட்டையைத் தடுக்க சாப்பிடக்கூடாத உணவுகள்:

பால் பொருட்கள்

சாக்லேட்

வறுத்த உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

மாவு மற்றும் சர்க்கரை பொருட்கள்

அதிகப்படியான ஆல்கஹால்

Also Read: Poison Fruits இந்த பழங்களை ஒன்றாக சாப்பிட்டால் விஷமாக கூட மாறுமாம்..!

குறட்டையைத் தடுக்க வேறு சில வழிகளும் உள்ளன. அவற்றையும் தெரிந்துகொள்ளுங்கள் .

  • சற்று உயரமான தலையணையைப் பயன்படுத்தி தூங்க வேண்டும்.
  • மல்லாக்க படுத்து தலையை நேராக வைத்து தூங்க வேண்டாம். வேண்டுமெனில் தலையை ஒரு பக்கமாக சாய்த்து தூங்கலாம்.
  • முக்கியமாக இரவு தூங்கும் முன் வயிறு நிறைய உணவை உட்கொள்ளக்கூடாது.
  • தைராய்டு பிரச்சனையை சோதித்து பார்க்கவும். ஒருவேளை தைராய்டு இருந்தால், அதற்கான மருந்துகளை தவறாமல் சாப்பிட வேண்டும்.
  • உடல் பருமனைக் குறைக்க முயற்சி செய்யுங்கள்.
  • முக்கியமாக கெட்ட பழக்கங்களான சிகரெட் மற்றும் ஆல்கஹால் பழக்கத்தைக் கைவிடுங்கள்.