தூரத்தில் இருந்தே இதயத்துடிப்பை கேட்க வழி செய்யும் Smart stethoscope..!

தூரத்தில் இருந்தே இதயத்துடிப்பை கேட்க வழி செய்யும் Smart stethoscope..!

நோயாளிகளின் இதயதுடிப்பை தூரத்தில் இருந்தபடி கேட்க வழி செய்யும் ஸ்மார்ட் ஸ்டெத்தோஸ்கோப் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Smart stethoscope-newstamilonline

Smart stethoscope:

ஐஐடி மும்பையை சேர்ந்த குழு ஒன்று ஸ்மார்ட் ஸ்டெத்தோஸ்கோப் சாதனத்தை கண்டுபிடித்துள்ளது.

இந்த சாதனம் கொண்டு தூரத்தில் இருந்து கொண்டே இதய துடிப்பை கேட்க முடியும்.

இதனால் கொரோனாவைரஸ் பாதிப்பு கொண்ட நோயாளிகளிடம் இருந்து நோய் தொற்று ஏற்படும் அபாயம் வெகுவாக குறையும்.

நோயாளிகளின் இதய துடிப்பு சத்தம் வயர்லெஸ் முறையில் மருத்துவருக்கு ப்ளூடூத் மூலம் அனுப்பப்படுகிறது.

இதன் காரணமாக மருத்துவர் நோயாளியின் அருகில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது.

ஐஐடி குழு உருவாக்கி இருக்கும் சாதனத்திற்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளது. இந்த சாதனம் மூலம் நோயாளியின் மருத்துவ குறிப்பு சேகரிக்கப்படுகிறது.

மேலும் இதனை மற்ற மருத்துவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

ஐஐடி-யின் தொழில்நுட்ப வியாபார தளம் சார்பில் உருவாக்கப்பட்டு இருக்கும் ஆயுடிவைஸ் எனும் ஸ்டார்ட்அப் துவங்கப்பட்டுள்ளது.

இந்த குழு சார்பில் இதுவரை 1000 ஸ்டெத்தோஸ்கோப்கள் நாடுமுழுக்க வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.

Also Read: Mars rover landing: சீனா தனது ஜுராங்(Zhurong) ரோவரை செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் தரையிறக்கியது..!

இந்த சாதனம் ரிலையன்ஸ் மருத்துவமனை மற்றும் பிடி இந்துஜா மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *