Sleep Disorders: தூக்கத்தை இழப்பதால் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகள்..!
Sleep Disorders: தூக்கத்தை இழப்பதால் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகள்..!
உலகில் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் தூக்கம் என்பது அவசியமான ஒன்று.

Sleep Disorders:
ஒரு நபர் தொடர்ச்சியான போதுமான தூக்கத்தை பெறவில்லை என்றால் அதனால் அவரது மன ஆரோக்கியத்தை இழக்க நேரிடும்.
ஒவ்வொரு நாளையும் புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியமாகவும் துவக்க இன்றியமையாததாக இருப்பது தூக்கம் தான்.
ஒருநபர் தினமும் இரவில் 6 முதல் 8 மணிநேரம் இடைவிடாமல் தூங்குவது அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் தற்போது பலரும் இரவு நேரத்தில் நிம்மதியான அல்லது தொடர்ச்சியான தூக்கம் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
தூக்கமின்மையால் ஏற்படும் பிரச்சனைகள்:
தூக்கமின்மை, தலைச்சுற்றல் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமடைதல், இன்சுலின் எதிர்ப்பு, நரம்பியல் பிரச்சினைகள், எடை அதிகரிப்பு, மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற முக்கிய உடல்நலப் பிரச்சனைகளுக்கு காரணமாகிறது.
சரியாக தூங்காத நபர்களிடையே பொதுவாக மனநிலை மாறுதல்கள் காணப்படும்.
மேலும் நாம் எரிச்சல் மற்றும் மன அமைதியின்மையின் காரணமாக சுற்றியுள்ளவர்களிடம் மோசமாக நடந்துகொள்வோம்.
சோர்வு, முன்கோபம் மற்றும் கவன சிதறல் ஆகியவை போதுமான தூக்கமின்மையால் ஏற்படும் விளைவுகள் ஆகும்.
ஒருவர் தரமான தூக்கத்தை பெறும் போது அவரது நோயெதிர்ப்பு அமைப்பு, ஆன்டிபாடிகள் மற்றும் சைட்டோகைன்கள் தொற்றுஎதிர்ப்புகளை உற்பத்தி செய்கிறது.
ஆனால் தூக்கமின்மை கோளாறு நோயெதிர்ப்பு சக்தி உருவாவதை தடுக்கிறது. இதனால் தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்களின் உடலில் பல நோய்கள் உருவாகின்றன.
நல்ல தூக்கத்திற்கு கடைபிடிக்க வேண்டியவை:
தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் டீ-காபி குடிக்க வேண்டாம், இரவில் அதிக உணவை உட்கொள்ளவேண்டாம்.
தூங்குவதற்கு முன் புகைபிடிப்பதை தவிர்க்கவும்.
தூங்க போவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் டிவி, கணினி, போன்றவற்றை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
சிலருக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை இருப்பின் அவர்கள் துக்கத்தில் இருந்து எழுந்திருக்கவேண்டிய நிலை ஏற்படும். அத்தகைய பிரச்சனையுள்ளவர்கள் சரியான மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும்.
உங்களுக்கு சர்க்கரை நோய் அல்லது இரத்த அழுத்தம் இருந்தால், மருந்துகளை சரியான நேரத்தில் கட்டாயம் எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் பிரச்சனையை பெருமளவு சமாளிக்க முடியும்.
தூக்கமின்மை ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தம் மற்றும் இதயம் மற்றும் ரத்த நாளங்கள் போன்றவற்றை பாதிக்கிறது.
தினசரி போதுமான அளவு தூங்காதவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்கள் வர வாய்ப்பும் உள்ளது.
தூக்கம் என்பது ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் தேவைப்படும் ஒன்று.
ஆனால், போதுமான அளவு உறங்க அவர்களுக்கு நேரமில்லாமலும், சரியான உறக்கம் கிடைக்காமலும் பலர் அவதிப்படுகிறார்கள்.
தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிற பெண்களை இரண்டாம் நிலை நீரிழிவு நோய், இதய நோய்கள், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் தாக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இக்கால கட்டத்தில் வேலைக்கு செல்லும் பெண்களை இது அதிக அளவு பாதிக்கிறது.
நேரம் தவறி தாமதமாக சாப்பிடுவதும், சாப்பிட்டவுடன் படுக்கச் செல்வதும் உடலுக்கு தீங்குவிளைவிப்பது ஆகும்.
பொதுவாக, பகலில் உறங்குவதும் இரவில் பணிகளில் ஈடுபடுவதையும் நம் மனம் ஏற்றுக் கொண்டாலும் உடல் அதற்கு ஒத்துழைக்காது.
மேலும், நம்மைத் தூங்க வைக்கும் ‘மெலட்டோனின்’ என்கிற ஹார்மோன் இரவில் அதிகமாகவும், பகலில் குறைவாகவும் சுரக்கும்.
எனவே, தூக்க நேரத்தை தலைகீழாக மாற்றினால் உடல்நல மற்றும் மனநல பாதிப்பை ஏற்படுத்தும்.
Also Read: Goji Berries Benefits: பார்வை திறனை அதிகரிக்கும் கோஜி பெர்ரி..!
ஆகையால், நம் அன்றாடவாழ்வில் ஒரு நிலையான வழக்கத்தைப் பின்பற்றுங்கள். அதில் தூக்கம், எழுதல், உடற்பயிற்சி(Exercise) நேரம் போன்றவற்றை நிர்ணயித்துக்கொள்ளுங்கள்.