Side Effects of Aloe Vera: கற்றாழை நல்லதுதான்..! ஆனாலும் அதிகமாக பயன்படுத்துவதால் இந்த பக்க விளைவுகள் கூட வரலாம்..!

Side Effects of Aloe Vera: கற்றாழை நல்லதுதான்..! ஆனாலும் அதிகமாக பயன்படுத்துவதால் இந்த பக்க விளைவுகள் கூட வரலாம்..!

பொதுவாக ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் அதிகமாக காணப்படும் இந்த கற்றாழையில் ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.

Side Effects of Aloe Vera

Side Effects of Aloe Vera:

கற்றாழை உடல், சருமம், தலைமுடி ஆகிய அத்தனைக்கும் மிகச்சிறந்த அருமையான மருந்து.

ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல கற்றாழையையும் நாம் அதிகமாக எடுத்துக் கொண்டால் சில பக்க விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

அவை என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள், தலைமுடி உதிர்தல், உடல் சூடு, நீர்ச்சத்து குறைபாடு என அடிப்படையாக நம்மில் பலருக்கு இருக்கும் பிரச்சினைகளை சரிசெய்ய காலங்காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் மூலிகை தான் கற்றாழை.

ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவதத்தில் கற்றாழைக்கு என்றே தனியிடம் உண்டு.

இந்த கற்றாழையை வெளிப்பூச்சாகவும் பயன்படுத்தலாம். உள்ளுக்கும் சாப்பிடலாம்.

ஆனால் இதையே அதிகமாக சாப்பிட்டால் சில உடல் உபாதைகளும் உண்டாகும்.

கற்றாழைக்கு குமரி என்றும் பெயர் உண்டு. சிறு கற்றாழை, பெருங்கற்றாழை, வரிக்கற்றாழை, செங்கற்றாழை, வரிக்கற்றாழை, பேய்க்கற்றாழை என கற்றாழையில் பல வகைகள் உண்டு.

ஆனால் நாம் உள்ளுக்கு எடுத்துக் கொள்வது தொடங்கி, வெளிப்பூச்சு வரைக்கும் எல்லாவற்றிக்கும் சோற்றுக் கற்றாழையைத் தான் பயன்படுத்துகிறோம்.

Nutrients:

கற்றாழையில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும் நுண்ணூட்டச்சத்துக்களும் காணப்படுகின்றன.

அமினோ அமிலங்கள் மொத்தம் 22. அதில் 20 வகை அமினோ அமிலங்கள் கற்றாழையில் இருக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, பொட்டாசியம், தாமிரம், கால்சியம் போன்றவையும்,

குரோமியம், செலீனியம் முதலான தாதுக்களும் கற்றாழையில் அடங்கியிருக்கின்றன.

கற்றாழை உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடியது தான். ஆனால் கற்றாழை சாறை அதிகமாக எடுத்துக் கொண்டால் நம்முடைய உடலில் இயற்கையாக இருக்கும் பொட்டாசியத்தின் அளவு குறைநந்து விடும்.

நாம் உண்ணும் உணவில் உள்ள பொட்டாசியம் சத்துக்களை உடல் உறிஞ்சுவதில் சிக்கல் ஏற்படும்.

ஆயுர்வேதத்தில் மலச்சிக்கலைக் கட்டுப்படுத்த கற்றாழை பரிந்துரைக்கப்படுகிறது.

அதேசமயம் கற்றாழையை அதிகமாக எடுத்துக் கொண்டால் வயிற்றுப் போக்கு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

கற்றாழையில் ஆந்த்தோ குயினோன் என்னும் வேதிப்பொருள் இருக்கிறது. இது தான் மலமிளக்கியாகச் செயல்படுகிறது.

அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது இந்த ஆந்த்தோ குயினோன் அதிக அமிலங்களைச் சுரந்து வயிற்று வலி, டயேரியா, வாந்தி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.

கற்றாழையில் அனைவர்க்கும் ஒத்துக்கொள்ளாத சில அழற்சியை ஏற்படுத்தும் பண்புகள் இருக்கின்றன. 

அதனால் கர்ப்பிணிப் பெண்களும், குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களும் கற்றாழை ஜூஸ் கண்டிப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

கற்றாழை கருப்பை சுருக்கங்களை அதிகப்படுத்தும் தன்மை கொண்டது. கர்ப்ப காலத்தில் கருப்பை சுருக்கங்கள் ஏற்பட்டால் பிரசவ நேரத்தில் பல சிக்கல்கள் உண்டாகும்.

கற்றாழை ஜூஸில் லேடெக்ஸ் என்னும் வேதிப்பொருள் இருக்கிறது.

இது வயிற்றுத் தசைப்பிடிப்புகள் போன்றவற்றை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.

ஏற்கனவே வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை இருக்கிறவர்கள் கற்றாழை சாறு எடுத்துக் கொள்வதைத் தவிர்த்து விடுங்கள்.

சருமப் பிரச்சினைகள் பலவற்றுக்கும் தீர்வாக காணப்படும் இந்த கற்றாழையை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் சருமத்தில் அழற்சி, அரிப்பு, எரிச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தி விடுகின்றன.

கற்றாழை ஜெல் தோல் பிரச்சனைகளுக்கு நன்மை பயக்கும் எனினும் ஆரம்பத்தில் கற்றாழையை பயன்படுத்தும் சிலருக்கும் எரியும் உணர்வு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

Also Read: Goji Berries Benefits: பார்வை திறனை அதிகரிக்கும் கோஜி பெர்ரி..!

உங்கள் சருமத்தில் கற்றாழை ஜெல்லை(Jelly) நீண்ட நேரம் வைத்திருந்தால் அது சருமத்தை வறட்சியாக்க வாய்ப்புகள் உள்ளது.

எனவே, ஜெல்லை பயன்படுத்திய சில நிமிடங்களுக்குப் பிறகு சருமத்தில் உலர விடாமல் தண்ணீரில் கழுவி விடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *