இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Sabja seeds benefits: சப்ஜா விதைகளை தினமும் சாப்பிட்டால் உடல் எடை கணிசமாகக் குறையும்..!

Sabja seeds benefits: சப்ஜா விதைகளை தினமும் சாப்பிட்டால் உடல் எடை கணிசமாகக் குறையும்..!

உடல் எடையை குறைக்க பல உணவுகளை நாம் பரிந்துரைத்தாலும், சப்ஜா விதை மூலம் மிக சுலபமாக உடல் எடையைக் குறைக்கலாம்.

sabja seeds benefits - newstamilonline

sabja seeds benefits:

புதினா குடும்பத்தைச் சேர்ந்த இந்த அதிசய விதையான சப்ஜா விதை பல ஆரோக்கிய நன்மைகளையும், பல நோய்களுக்கும் மருந்தாகி குணப்படுத்த உதவுகிறது.

இந்த விதைகள் உங்களுக்கு ஏற்படும் நெஞ்செரிச்சல், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். அதுமட்டுமின்றி, நமது உடல் வெப்பத்தைக் குறைக்கவும் இவை உதவுகின்றன.

இதிலுள்ள புரதம், அத்தியாவசிய கொழுப்புகள், கார்போ ஹைட்ரேட்டுகள், நார்ச் சத்துக்கள் மற்றும் குறைந்த அளவிலான கலோரிகள் எடை இழப்புக்கு உதவுகிறது.

சப்ஜா விதைகளில் உள்ள ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் உடல் எடையை குறைக்கும் அத்தியாவசியமான கொழுப்புகளை உருவாக்கும்.

சப்ஜாவில் அதிக அளவில் நார்ச் சத்து நிறைந்துள்ளன. நார்ச்சத்து எப்போதுமே உடல் எடை குறைப்புக்கு உதவி புரியும்.

அதுமட்டுமின்றி சப்ஜா விதையில் உள்ள பைபர் உங்களின் தேவையற்ற பசியைக் குறைத்து, உங்களை குறைந்த உணவையே உண்ண வைக்கும்.

பைபர் என்று கூறப்படும் நார்ச்சத்து உடலில் உள்ள கொழுப்புகள் மற்றும் கார்போ ஹைட்ரேட்டுகளை உறிஞ்சுகிறது.

இதன் மூலம் அதிக அளவிலான கொழுப்பு கரைவதொடு தேவையற்ற கொழுப்பால் உண்டாகும், உடல் எடையும் குறையும்.

உடல் பருமனுக்கு மற்றுமொரு காரணம் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பது.

சப்ஜா விதைகள் உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், உடல் பருமனைத் தடுக்கவும் உதவும். இதிலுள்ள அதிக அளவிலான நார்ச்சத்து, இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பை தடுக்கிறது.

​பசியைக் கட்டுப்படுத்தும்

சப்ஜா விதைகளை நீரில் ஊற வைக்கும் போது, அவை செரிமான நொதிகளை உருவாக்கும். இந்த நொதிகள் உங்களின் செரிமானத்தை பலப்படுத்தும்.

அத்துடன் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கும், பசியைக் குறைப்பதோடு, பசிப்பது போன்ற உணர்வினையும் இது தடுக்கும்.

ஊற வைத்த சப்ஜா விதையை சாப்பிடுவதால் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காமல் இருக்கும். இதனால் அடிக்கடி நொறுக்குத்தீனி சாப்பிடுவது கட்டுக்குள் வைக்கப்படும்.

சப்ஜா விதையில் குறைந்த அளவு எரிசக்திகளே (calories) உள்ளது. ஒரு ஸ்பூன் சப்ஜா விதையில் இரண்டில் இருந்து நான்கு சதவிகித எரிசக்திகள் மட்டுமே உள்ளது.

இதனால் தினமும் காலை வெறும் வயிற்றில் சப்ஜா விதைகளை சாப்பிட்டு வந்தால் உடல் எடை weight loss) கட்டுக்குள் வைப்பதோடு தொப்பையும் குறையும்.

சப்ஜா விதைகளில் கலோரிகள் குறைவாகவும், ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளன.

இந்த விதைகள் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் இரும்புச் சத்து உள்ளிட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை. இவை அனைத்தும் எடை இழப்புக்கு அவசியமான தாதுக்கள் ஆகும்.

​எவ்வாறு உட்கொள்வது?

சப்ஜா விதையை நீரில் ஊற வைத்து பயன்படுத்த வேண்டும் முதல் நாள் இரவில் ஊற வைத்து பின்னர் அடுத்த நாள் பயன்படுத்தலாம்.

சுமார் 6 மணி நேரம் வரை ஊற வைத்தால் நல்லது. அல்லது வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் ஊற வைத்தால் போதுமானது. இதில் அதிகளவு பைபர் காணப்படுகிறது.

இந்த பைபர் தண்ணீரை அதிகமாக உறிஞ்சும் தன்மை கொண்டது. தண்ணீரை உறிஞ்சி ஜெல் போன்று காணப்படும். வழவழப்பாக காணப்படுவதை வெறுதாக விதையை மட்டும் சாப்பிட சிலருக்கு பிடிக்காது.

அதனால் ஊறிய விதையை லெமன் ஜூஸ், பலூடா மற்றும் நன்னாரி சர்பத்தில் கலந்து குடிக்கலாம்.

Also read: Black fungus symptoms: கருப்பு பூஞ்சை நோயின் அறிகுறிகள், பாதிப்புகள் என்ன..?

வெறும் சப்ஜா விதையை உட்கொண்டால் மட்டும் உடல் எடை குறைந்து ஸ்லிம் ஆகி விட முடியும் என்று கற்பனை செய்ய வேண்டாம்.

இதனை உட்கொள்வதொடு, எப்போதும் முறையான உணவு முறை கையாள்வது, தவறாமல் உடற்பயிற்சி செய்வதால் மட்டுமே உடல் எடை இழப்புக்கு சாத்தியமாகும்.