இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Radish Benefits: இதயத்தின் நண்பன் – சிவப்பு முள்ளங்கி சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்..!

Radish Benefits: இதயத்தின் நண்பன் – சிவப்பு முள்ளங்கி சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்..!

வேர் விட்டு வளரும் காய்கறிகளில் ஒன்றான சிவப்பு முள்ளங்கிக்கு பல்வேறு சிறந்த குணங்கள் உள்ளன. இது சமைத்து உண்ணக் கூடிய கிழங்கு இனமாகும்.

Radish Benefits for Health - newstamilonline

Radish Benefits for Health:

அதன் ஆரோக்கிய பலன்கள் பல்வேறு வகையிலும் உடலுக்கு நன்மை தருகின்றன.

மாரடைப்பை தடுக்கவும், இதயம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகவும் மற்றும் புற்று நோய் வராமல் தடுக்கவும் என இதில் எண்ணற்ற பலன்கள் காணப்படுகின்றன.

நோய் எதிர்ப்பு சக்தியும், கண் பார்வைக்கு உதவியும், எலும்புகள் மற்றும் தோலை நலமுடன் வைத்திருக்கவும் இந்த சிவப்பு முள்ளங்கி உதவுகிறது.

சிவப்பு முள்ளங்கி-இதயத்தின் நண்பன்:

இதயத்தை நலமாக, ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்புபவர்கள் சிவப்பு முள்ளங்கியை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

இதில் உள்ள எரிச்சலுக்கு எதிரான தன்மை இதயம் தொடர்பான நோய்களை எல்லாம் விரட்டுகிறது.

ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி ஆகியவைகளையும் கொண்டிருப்பதால் இதய மண்டலத்தை பாதுகாக்கும் அரணாக சிவப்பு முள்ளங்கி உள்ளது.

மேலும் ஆஸ்டியோபோரோஸிஸ் மற்றும் ரியூமடாய்டு ஆர்த்ரிடிஸ் போன்ற நோய்கள் வராமல் தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உணவில் போதுமான அளவிற்கு சிவப்பு முள்ளங்கியை சேர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த சிவப்பு முள்ளங்கியில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் உடலுக்கு தேவையான ஊட்டசத்து தாதுக்கள் ஆகியவை நிரம்பி உள்ளதால் எலும்புகளை எஃகு போல் உறுதியாக வைத்திருக்க உதவுகின்றன.

Radish Benefits for Health – எடை குறைப்பு:

உங்கள் எடையைக் குறைக்க முயற்சி செய்தால் சிவப்பு முள்ளங்கியை அதற்காக தேர்ந்தெடுக்கலாம்.

குறைவான கலோரிகளை கொண்டுள்ள இந்த தாவரத்தை உண்டு பசியை நிறைவடையச் செய்யவும் மற்றும் எடையைக் குறைக்கவும் முடியும். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலமைப்பை கட்டுப்படுத்துகின்றன.

ஆஸ்துமா நோயாளிகளும் உணவில் சிவப்பு முள்ளங்கி முள்ளங்கியை தினமும் சேர்த்துக் கொள்ளலாம்.

இதில் உள்ள எரிச்சலைத் தடுக்கும் குணமும், ஆக்ஸிஜன் எதிர்ப்பு பொருட்களும் ஆஸ்துமா நோய்க்கு நிவாரணம் தருகின்றன. தொடர்ச்சியாக சிவப்பு முள்ளங்கியை சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆஸ்துமா பறந்து போய் விடும்.

தோலுக்கு நண்பன்:

பிற நோய்கள் மட்டுமல்லாமல் தோல் சார்ந்த பிரச்னைகளையும் தீர்க்கவும் சிவப்பு முள்ளங்கி உதவுகிறது.

சிவப்பு முள்ளங்கியை சாறாக பிழிந்து தினமும் குடித்து வந்தால் வறண்ட சருமம் மற்றும் தழும்புகள் போன்றவற்றை தோலிலிருந்து விரட்ட முடியும்.

அதன் சுவையைக் கூட்ட சிவப்பு முள்ளங்கி சாறுடன் கேரட் சாறை கலந்து சாப்பிடலாம்.

மேலும் சிவப்பு முள்ளங்கியில் உள்ள உள்ள மக்னீசியம் மற்றும் வைட்டமின் பி ஆகியவை இரத்த அழுத்தத்தை நிலைப்படுத்த மிகவும் உதவுகின்றன.

நார்ச்சத்துக்கள் நிரம்பிய சிவப்பு முள்ளங்கி, குடல் மற்றும் செரிமானத்திற்கு உதவுகிறது.

Also Read: Best Food for Diabetes Control: சர்க்கரை நோயை வெண்டைக்காய் எவ்வாறு கட்டுப்படுத்தும்..?

இந்த ஆரோக்கிய பலன்களை பெற விரும்பினால் நாம் உணவில் சிவப்பு முள்ளங்கியை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

காய்கறி சூப்களிலும், சலாட்களிலும் அல்லது ரெய்தா தயாரிக்கவும் சிவப்பு முள்ளங்கி பயன்படுகிறது. இதன் சுவை சற்றே உவர்ப்பாக இருப்பதால், ரைய்தாவாக பயன்படுத்துவது சிறந்த தேர்வாக இருக்கும்.