News Tamil OnlineTamil Newsஇயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Pumpkin Leaves Benefits: பூசணி இலையின் மருத்துவப் பயன்கள்..!

Pumpkin Leaves Benefits: பூசணி இலையின் மருத்துவப் பயன்கள்..!

பூசணி இது கொடி வகை மற்றும் காய் வகையினை சேர்ந்தது. இதுவரை நாம் எல்லோரும் பூசணிக்காயைத் தான் உணவில் சேர்த்து வருகிறோம்,

ஆனால், பூசணிக்காயின் இலைகள் கூட நமக்கு ஏராளமான நன்மைகளை அள்ளித் தரக்கூடியது.

Pumpkin leaves benefits

Pumpkin Leaves Benefits:

இந்த பூசணிக்காய் இலைகள் நம் கண்ணின் பார்வைத்திறனை மேம்படுத்துகிறது. புற்று நோயை தடுக்கிறது, நோயெதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது, ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது,மேலும் கொலஸ்ட்ரால் அளவை குறைத்தல், கருவுறுதல் திறனை அதிகரித்தல் போன்ற எண்ணற்ற நன்மைகளை நமக்கு அளிக்கிறது.

ஊட்டச்சத்துகள்:

இதில் ஏராளமான ஊட்டச்சத்துகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய காலத்தில் யாரும் இதனை உணவாக பயன்படுத்துவதில்லை.

பூசணிக்காயின் இலை குறைந்த கலோரியை கொண்டிருப்பதோடு வயிற்று பசியையும் நீண்ட நேரம் போக்குகிறது.

இதில் பொட்டாசியம், கால்சியம், போலிக் அமிலம், இரும்புச் சத்து, விட்டமின் E, விட்டமின் B6, மக்னீசியம், பாஸ்பரஸ், தயமின், நியசின், நார்ச்சத்து, விட்டமின் A, விட்டமின் C புரோட்டீன் போன்ற பொருட்கள் அடங்கியுள்ளன.

How to reduce aging?

இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சீக்கிரம் வயதாகுவதை தடுத்து இளமையை தக்க வைக்க உதவுகிறது. எனவே, ரெம்ப காலம் இளமையாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள், இந்த பூசணிக்காய் இலைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆரோக்கியமான கண்கள்:

பூசணிக்காய் இலைகளில் விட்டமின் A, இருப்பதால், இது கண்பார்வையினை மிகவும் தெளிவாக வைக்க உதவுகிறது. சிலருக்கு வயதாகினால் கண்ணின் பார்வைத்திறன் குறைந்து போய்விடும், அத்தகைய கண் குறைபாட்டை தடுக்க பூசணியின் இலை பயன்படுகிறது. வலிப்பு நோய்கள்: இது வலிப்பு நோய்களை குணப்படுத்த பெரிதும் பயன்படுகிறது. நறுக்கிய பூசணிக்காய் இலைகளை தேங்காய் தண்ணீரில் கலந்து உப்பு சேர்த்து பயன்படுத்தினால் வலிப்பு நோய் நின்று விடுமாம்.

கொழுப்பைக் குறைக்க:

இன்றைய கால உணவுமுறைகளை மேற்கொண்டால் நம் உடலில் தேவையற்ற கொலஸ்ட்ரால்கள் ஏறிவிடுகிறது. இதற்கு ஓர் அருமருந்தாக, பூசணியில் உள்ள நார்ச்சத்து உதவுகிறது, இது கொலஸ்ட்ரால் உடலில் தங்குவதை தடுத்து நமது இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

கருவுறுதல் திறன்:

இந்த பூசணி இலை, ஆண்களின் விந்தணுக்களில் ஏற்படும் குறைபாட்டினை நீக்கி விந்தணுக்களின் வளத்தை அதிகரித்து குழந்தை பாக்கியத்தை அளிக்கும் திறன் உள்ளது.

சரும அழகு:

இந்த பூசணிக்காய் இலையில் ஏராளமான விட்டமின் C உள்ளது. இது சருமத்தில் ஏற்படும் காயங்கள், தழும்புகள், சரும பிரச்சனைகள் போன்றவற்றை நீக்கி ஆரோக்கியமான சருமம் மற்றும் எலும்பிற்கு உதவுகிறது.

புற்றுநோயை எதிர்த்து போரிடுதல்:

புற்று நோய் வராமல் இருக்க நார்ச்சத்து உணவுகளை அதிகமாக எடுத்துக் கொண்டால் போதும் என ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையில் பூசணி இலையிலுள்ள ஊட்டச்சத்துக்கள் புற்று நோய் வருவதை தடுக்கும் சக்தி உடையது.

எலும்பு வலிமைக்கு:

இதில் அதிகளவில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. இது குழந்தைக்கும் தாயுக்கும் மிகச் சிறந்த உணவாக பரிந்துரைக்கப்படுகிறது. கால்சியம் பற்றாக்குறையை போக்கி பற்களும் எலும்புகளும் வலிமையாக இருக்க உதவுகிறது.

ஜீரண சக்திக்கு உதவுதல்:

இதிலுள்ள நார்ச்சத்துகள் நமது குடலியக்கத்தை சுலபமாக்கி சீரண சக்தியை அதிகரிக்கிறது. இதனால் மலம் வெளியேறுவது சிரமம் இல்லாமல் நடக்கிறது. வயிற்றை சுத்தம் செய்வதால் நம் உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேறுகின்றன.

தாய்ப்பால் சுரக்க:

இதில் அதிகளவில் கால்சியம் சத்து இருப்பதால் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு கால்சியம் சத்தினை கொடுத்து அதிகப்படியான பாலினை சுரக்க உதவுகிறது.

How to cook pumpkin leaves?

இந்த இலைகள் மற்ற இலைகளைப் போல் கசப்பதில்லை. இதை சூப், சாலட் போன்றவற்றில் கூட சேர்த்து சாப்பிடலாம்.

ரெசிபி 1:

தேவையான பொருட்கள்:

பூசணிக்காய் இலைகள்
ஆலிவ் ஆயில்
உப்பு
பூண்டு

பயன்படுத்தும் முறை :

முதலில் ஒரு சூடான பாத்திரத்தில் எண்ணெயினை ஊற்றி அதில் பூசணிக்காய் இலைகள் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வதக்க வேண்டும். இதே மாதிரி காய்கறிகளையும் வதக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

பின் வதக்கி வைத்த பூசணிக்காய் இலைகளுடன் பூண்டு சேர்த்து சாப்பிடலாம், அது சுவையினை இன்னும் அள்ளித்தரும்.

ரெசிபி 2:

தேவையான பொருட்கள்:

ப்ரஷ்ஷான பூசணிக்காய் இலைகள்
தண்ணீர் 120 மில்லி லிட்டர்
நிலக்கடலை பொடி 1 கப்
நறுக்கிய தக்காளி – 2 கப்
நறுக்கிய வெங்காயம் – 1 கப்
பாம் ஆயில்

பயன்படுத்தும் முறை:

இலைகளை நன்றாக கழுவி சுத்தமாக நறுக்கி கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நீர், அதனுடன் சுத்தமாக்கிய இலைகள், தக்காளி மற்றும் வெங்காயம் போன்றவற்றை சேர்த்து வேக வைக்கவும். கடாயை ஒரு மூடிக் கொண்டு மூடி விடுங்கள்.

தண்ணீர் பாதியளவு வற்றியதும் அதில், 2 டேபிள் ஸ்பூன் பாம் ஆயில் சேர்த்து, கூடவே நிலக்கடலை பொடி சேர்த்து 10 நிமிடங்கள் மிதமான தீயில் சூடுபடுத்தவும். பூசணிக்காய் சூப் தயார். அது போல இந்த இலைகளை பச்சையாகக் கூட உண்ணலாம்.

Also Read: Papaya For Weight Loss : முக அழகிற்கு பயன்படும் பப்பாளி எடை குறைக்க கூட உதவுமா…!

Also Read: Papaya For Weight Loss : முக அழகிற்கு பயன்படும் பப்பாளி எடை குறைக்க கூட உதவுமா…!

குறிப்பு:

இதில் ஏராளமான ஊட்டச்சத்துகள் இருக்கிறது என்று எண்ணி அதிகஅளவு எடுத்துக்கொள்வது நல்லது அல்ல, சரியான அளவு எடுத்துக் கொள்ளுங்கள். எனவே இனி இந்த பூசணிக்காய் இலைகளையும் உணவில் சேர்த்து நோயின்றி வாழுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *