Pubg death india: முழு நேரமும் Pubg தான்..! மாரடைப்பில் உயிரிழப்பு..!
Pubg death india: முழு நேரமும் Pubg தான்..! மாரடைப்பில் உயிரிழப்பு..!
Pubg விளையாட்டில் தொடர்ந்து தனது நேரத்தை செலவிட்டு வந்த ஒருவர் வியர்த்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். சீனாவில் தோன்றி உலகம் முழுவதையும் உலுக்கிவரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் தாக்கியுள்ளது.

Pubg death india:
கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தொடர்ந்து ஊரடங்கை அறிவித்து வருகிறது.
இதையடுத்து வீட்டிலேயே இருக்கும் பெரும்பாலான மக்கள் பொழுதை எவ்வாறு செலவிடுவது என்று அறியாமல் தங்களது நேரத்தை கேமில் செலவிட்டு வருகின்றனர்.
அதேபோல் நண்பர்கள் ஒன்றுகூடி பேசி குழுவாக தங்களது நேரத்தை ஆன்லைனில் செலவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.
பப்ஜி, கால் ஆஃப் டூட்டி போன்ற விளையாட்டுகள் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது. இதில் நேரத்தை செலவிடும் நபர்கள் அதிகம்.
இந்நிலையில் ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமார்.
ஈரோட்டிலுள்ள பிரபல முட்டை நிறுவனத்தில் ஆபரேட்டராக பணிபுரிந்து வரும் இவரது மகன் சதீஷ்குமார், ஈரோட்டிலுள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்திருக்கிறார்.
மாணவன் சதீஷ்குமார் தனது முழு நேரத்தையும் பப்ஜி விளையாட்டில் செலவிட்டுள்ளார்.
சதீஷ்குமாரின் இந்த செயலை பார்த்து பல முறை வீட்டார்கள் கண்டித்துள்ளனர். அதுமட்டுமின்றி செல்போனை பிடுங்கி வைத்து கண்டித்துள்ளனர்.
ஆனால் இதற்கு எதிலும் அடிப்பணியாத சதீஷ்குமார் தொடர்ந்து விளையாட்டில் அடிமையாகி உள்ளார். மொபைல் விளையாட்டில் தொடர்ந்து வெற்றியை பெற்று வந்துள்ளார் சதீஷ்குமார்,
இந்நிலையில் மே 19-ம் தேதி மதியமும் வழக்கம் போல் வீட்டுக்கு வெளியே செல்போன் விளையாட்டியுள்ளார். விளையாட்டில் ஆர்வமாக ஈடுபட்டு வந்த சதீஷ்குமார் திடீரென மிகவும் வியர்த்துப் போன நிலையில் மயங்கி விழுந்துள்ளார்.
Also Read: Fish Bone Stuck: ஒரு பெண்ணின் கழுத்தில் சிக்கிய மீன் எலும்பு..!
இதை பார்த்த சதீஷ்குமார் குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல் அவர் அதிக மன அழுத்தம் காரணமாக திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்திருக்கின்றனர். இந்த சம்பவம் பெரும்பாலானோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.