Pranayama: கொரோனாவை துரத்த நமக்கு உள்ளேயே இருக்கும் ஆற்றல் மிக்க Power..!
Pranayama: கொரோனாவை துரத்த நமக்கு உள்ளேயே இருக்கும் ஆற்றல் மிக்க Power..!
கொரோனாவை விரட்ட நாம் வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை. நம் சித்தர்கள் சொல்லி தந்த ஒரு அற்புத யுக்தியை கடைபிடித்தால் போதும்.

உலகில் உள்ள அனைவரும் இந்த கண்ணுக்கு தெரியாத கிருமியால், ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறலாம்.
இது போன்ற நிலையில் நம்மை கொரோனாவிலிருந்து பாதுகாத்து கொள்ள சித்தர்கள் கடைபிடிக்கும் யுத்தியை கடை பிடித்தால் போதும்.
அது தான் மூச்சு பயிற்சி(Pranayama). நம் முன்னோர்கள் சொல்லித் தந்த யுக்தி.
சரியான மூச்சுப்பயிற்சி நம் உயிரை காப்பாற்றுவதற்கும், கோவிட்-19 என்னும் பெரும் தொற்றிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கும் மிகச் சிறந்த ஆற்றல் கேடயமாக விளங்குகிறது.
இன்று, இந்தியாவைப் பார்த்து பல வகையில் உலகமே வியந்து கொண்டிருக்கிறது.
மேற்கத்திய கலாச்சாரம்தான் மேன்மை மிக்கது என்று நினைத்தவர்கள் கூட, இன்று நம் இந்திய பாரம்பரியத்தின் அருமையை உணர்ந்து பின்பற்ற தொடங்கியிருக்கின்றனர்.
நம் முன்னோர்கள் கடைப்பிடித்த ஏராளமான விஷயங்கள் தான் கொரோனாவை கட்டுப்படுத்த இன்று உதவி வருகிறது.
ஒரு பக்கம் மூலிகை மருத்துவம் அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டு இருக்க, யோகா கொரோனாவில் இருந்து விடுபடவும், பரவலை தடுப்பதிலும் முக்கிய பங்காற்றி வருகிறது என்பது அறிவியல் பூர்வமான நிரூபணம் ஆகி வருகிறது.
நாம் சாதாரணமான முறையில் சுவாசிக்கும் போது குறைந்த அளவிலான ஆக்ஸிஜன் தான் நுரையீரலை அடைகிறது.
முறையான பயிற்சி மேற்கொள்வதால் நுரையீரலுக்கு அதிக அளவில் ஆக்ஸிஜன், அதாவது பிராணவாயு கிடைக்கும்.
இதனால் நுரையீரல் பலம் அடைகிறது. கொரோனா என்பது, நமது நுரையீரலை தாக்கும் போது தான் அதிக பாதிப்பு ஏற்படுகிறது.
நமது நுரையீரல் வலுவாக இருந்தால் கொரோனாவை எளிதாக வென்று விடலாம்.
இடது மூக்குத் துவாரத்தின் வழியாக மூச்சை உள்ளிழுத்து, வலது மூக்குத் துவாரத்தின் வழியாக வெளிவிடுவது எளிய மூச்சு பயிற்சி ஆகும்.
யோகாவில், நமது இடது மூக்குத் துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து, பின்னர் அதனை வெளிவிடுவது இடகலை என்று கூறப்படுகிறது.
வலது மூக்குத்துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவது பிங்கலை என்று கூறப்படுகிறது.
Also Read: சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா..? ஆயுர்வேதம் கூறுவது என்ன..?
மூச்சு பயிற்சி செய்யும் போது, வெறும் வயிற்றில் இருக்க வேண்டும் என்பது முக்கியம். தினமும் ஒரே நேரத்தில் மூச்சு பயிற்சி செய்வது சிறந்த பலனைத் தரும்.
இந்த மூச்சு பயிற்சியினால், நுரையீரல் வலுவடையும் என்பதோடு, கூடுதல் பலனாக, நமது மூளையும் புத்துணர்ச்சி பெறுகிறது.
இதனால், நமது ஞாபக சக்தியும் அதிகரிக்கும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். கோவிட்-19 தொற்று நோயை எளிதாக விரட்டலாம்.