Ponnanganni keerai benefits: பொன்னாங்கண்ணி கீரையின் மகத்தான மருத்துவப் பயன்கள்..!
Ponnanganni keerai benefits: பொன்னாங்கண்ணி கீரையின் மகத்தான மருத்துவப் பயன்கள்..!
கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங்கண்ணிக் கீரை பலவித நோய்களை குணப்படுத்த உதவும் அற்புத உணவாகவும் மூலிகையாகவும் திகழ்கிறது.

பொண்ணாங்கண்ணி பல நூற்றாண்டுகளாகவே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் தாவரம். உணவுக்காகவும் மருத்துவ பயன்பாட்டிற்கும் உகந்தது பொன்னாங்கண்ணி.
உலகில் பல்வேறு நாடுகளில் உணவுக்குப் பயன்படுத்தப்படும் பொன்னாங்கண்ணியின் இளம் தளிர்ப் பாகங்கள் உணவுக்குப் பயன்படும். மருத்துவத் தேவைகளுக்காக அதிக அளவில் பொன்னாங்கண்ணி பயிரிடப்படுகிறது.
பொன்னாங்கண்ணியில் சீமைப்பொன்னாங்கண்ணி, நாட்டுப் பொன்னாங்கண்ணி என இரு வகை உண்டு. சிவப்பு பொன்னாங்காணி என்ற இனமும் உண்டு.
Ponnanganni keerai benefits:
பொன்னாங்கண்ணிக் கீரையை பச்சையாகவோ அல்லது சமையல் செய்தோ தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பகலில் கூட நட்சத்திரங்களைப் பார்க்கலாம் என்பார்கள்.
அந்த அளவுக்கு கண்ணொளிக் கொடுக்கும் சத்துக்கள் அதில் உள்ளன. இதை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் கண்ணாடி அணிய வேண்டிய தேவையே இருக்காது.
சித்த மருத்துவத்தில், உடலுக்கு பலம் தரும் காயசித்தியாகவும் பயன்படுகிறது பொன்னாங்கண்ணி கீரை. பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிட்டால், உடல் பொன்நிறமாக மாறும் என்று சித்தர்கள் சொல்லியிருக்கின்றனர்.
பொன்னாங்கண்ணி கீரை இருக்கும் விட்டமின் ஏ, கண்ணில் உள்ள குறைபாடுகளை நீக்கி, கண்ணுக்கு ஒளி தருகிறது.
பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து உண்டு வந்தால், விழித்திரை நோய், கண் எரிச்சல், கண் மங்குதல், கண் வலி ஒற்றை தலைவலி போன்றவை நீங்கும்.
உடல் சூடு உள்ளவர்கள், வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் பொன்னாங்கண்ணிக் கீரையை சூப்பாக வைத்து அருந்தினால் குணம் பெறலாம்.
இக்கீரையின் சாறு எடுத்து நல்லெண்ணையுடன் சேர்ந்து தைலம் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்து வர கண் எரிச்சல், உடல் உஷ்ணம்- போன்றவைகள் நீங்கி உடல் குளிர்ச்சிப் பெறும்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பொன்னாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டு வந்தால், பால் சுரப்பு நன்றாக இருக்கும். பொன்னாங்கண்ணிக் கீரை கல்லீரலை நன்கு பலப்படுத்தி காமாலை போன்ற தொற்றுக்கள் வராமல் பாதுகாக்கும் ஆற்றல் கொண்டது.
குடலில் ஏற்படும் ரணங்களை விரைந்து ஆற்றும் நோய் எதிர்ப்பு திறனை வலுப்புத்தும் இந்த அருமருந்து, செரிமாண மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.
செல்களின் வளர்ச்சிதை மாற்றத்தை சரி செய்து வயோதிகத்தினை தள்ளிப்போடும், மூலம், மலச்சிக்கல் போன்ற சிக்கல்களையும் சரி செய்கிறது பொன்னாங்கண்ணி.
சாப்பிடும் முறை:
துவையலாகச் செய்து தினமும் உண்டு வரலாம். கீரையாகக் கடைந்து சாப்பிடலாம்.
கண் சம்பந்தமான நோய்களுக்கு பொன்னாங்கண்ணி கீரையை நெய்விட்டு வதக்கி கண்ணில் ஒத்திவந்தால் சிறந்த தீர்வாகும்.
மேலும் பொன்னாங்கண்ணி க்கீரையை தொடர்ந்து ஒரு மண்டலம் உண்டு வந்தால் உடலில் மெருகு கூடும்.
பொன்னாங்கண்ணிக் கீரையில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ, பி, சி போன்றவை உள்ளன.
குளிர்ச்சியை தரவல்ல பொன்னாங்கண்ணிக்கீரையில் செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள், பல ஸ்டிரால்கள், அமிலங்கள் உள்ளன.
சிட்ரோஸ்டிரால், சிட்சுமோஸ்டிரால், கெஃம்பெஸ்டிரால், ஓலியனோலிக் அமிலம், லுபியால் போன்றவையும் இந்த அற்புதமானக் கீரையில் காணப்படுகின்றன.
பல அருங்குணங்கள் கொண்ட, உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய, பலவித நோய்களையும் தீர்க்கும் இந்தக் கீரையை பகலில் உண்பதுதான் நலன் தரும்.
Also Read: Nutmeg benefits: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் ஜாதிக்காயின் பங்கு..!
ஒன்று அல்லது இரண்டு நாட்கள் சாப்பிட்டு விட்டு பலன் இல்லையே என நினைக்கக் கூடாது. வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள், குறைந்தது 12 மாதம் முதல் 213 மாத காலம் வரை சாப்பிட வேண்டும்.
அப்போதுதான் அது உடல் சார்ந்த நோய் (Disease) நொடிகளை ஓட ஓட விரட்டும்.