Plasma therapy procedure: பிளாஸ்மா தெரபி எப்படி வேலை செய்கிறது தெரியுமா..?

Plasma therapy procedure: பிளாஸ்மா தெரபி எப்படி வேலை செய்கிறது தெரியுமா..?

இன்று உலகத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ்-கான மருந்தும், தடுப்பூசியும் கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.

plasma therapy procedure - newstamilonline

இந்த சூழலில் உலக சுகாதார நிறுவனம் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிப்பதன் மூலம் நோய் தாக்கத்தை குறைக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது.

குறிப்பிட்ட எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சில மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து கேரளா, குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் பிளாஸ்மா தெரபி சிகிச்சையை தொடங்கியுள்ளன. இந்த பிளாஸ்மா சிகிச்சை கொரோனா

தாக்கத்தில் இருந்து மீட்கப்பட்ட COVID-19 நோயாளியின் இரத்தத்திலிருந்து ஆன்டிபாடிகளைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

இதற்கு வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்த நபர்கள் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும். அதிலிருந்து தான் பிளாஸ்மாவை பிரித்தெடுக்க முடியும்.

இது 100 சதவீதம் உறுதியான சிகிச்சை இல்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் நல்ல பலன் கிடைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சிகிச்சை முறையில், முழுமையாக குணமடைந்த ஒரு COVID-19 நோயாளியிடமிருந்து, குணமடையாத COVID-19 நோயாளிக்கு பிளாஸ்மா மாற்றப்படுகிறது.

இதனால் COVID-19 நோயால் பாதிக்கப்பட்டவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, இரத்த அணுக்களும் அதிகரிக்கிறது. இதனால் அந்த COVID-19 வைரஸை எதிர்த்துப் போராட நோயாளியின் உடல் தயாராகிறது.

Plasma therapy procedure – பிளாஸ்மா சிகிச்சை:

பிளாஸ்மா என்பது குருதி அணுக்களை ஏந்திச் செல்லும் நிறம் அற்ற திரவமாகும். பிளாஸ்மா என்னும் திரவத்தில் தான் இரத்த அணுக்கள் மிதக்கின்றன.

பிளாஸ்மாவில் ஆல்புமின், பைபிரினோஜென், குளோபுலின் எனும் 3 முக்கிய புரதப்பொருட்கள் உள்ளன.


ஆன்டிபாடிகள் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தியின் முக்கிய கூறுகளையும் இந்த பிளாஸ்மா தன்னகத்தே வைத்துள்ளது.

அண்டிஜென்( பாக்டேரியா, வைரஸ்) நமது உடம்பிற்குள் படையெடுத்து வரும்போது, அதை தோற்கடிப்பதற்காக நமது பிளாஸ்மாவில் ஆன்டிபாடிகள் உருவாகுகின்றன. நோய்க்கிருமிகள் தோற்கடிக்கப்பட்டதும்,

சில இரத்த அணுக்கள் நினைவக உயிரணுக்களாக செயல்படுகின்றன. இதன் விளைவாக,

அதே வகையான நோய்க்கிருமிகள் பிற்காலத்தில் வரும் போது, நோய்க் கிருமிகள் அடையாளப்படுத்தப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்திகள் விரைவாக உருவாக்கப்பட்டுகின்றது.

ஆன்டிஜென்களுக்கு எதிராக தீவிரமாக நோய்த்தடுப்பு பெற்ற மனிதர்களிடம் இருந்து (அல்லது) சில விலங்குகளிடமிருந்து பெறப்பட்ட இரத்தத்தின் மூலமாக

செயல்படுத்தப்பட்ட ஆன்டிபாடிகளை உட்செலுத்தும் போது, ஒருவரது தற்காலிக நோய் எதிர்ப்பு சக்தியை அடைய முடியும்.

உட்செலுத்தப்பட்ட ஆன்டிபாடிகள் மூலம் குறைந்தது இரண்டு-மூன்று வாரங்களுக்கு நோய் கிருமியில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்.

அதே போன்று, மனிதர்களிடமிருந்து மாற்றப்பட்ட ஆன்டிபாடிகள் மூலம், ஒருவர் சில வாரங்கள் நோய்க் கிருமியில் இருந்து பாதுகாத்துக் கொள்ளல்லாம்.

விலங்குகளிடமிருந்து பெறப்பட்ட ஆன்டிபாடிகள் மூலம் சில மணிநேரங்கள் முதல் சில நாட்கள் வரை நோய்க் கிருமியில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

பிளாஸ்மா சிகிச்சையைப் பயன்படுத்துவதற்கான நிபந்தனைகள்..
பிளாஸ்மா சிகிச்சையைப் பயன்படுத்த, அமெரிக்க எஃப்.டி.ஏ வகுத்துள்ள குறிப்பிட்ட அளவுகோல்கள் உள்ளன,

Convalescent Plasma Theraphy:

இதில் நோயாளி கோவிட் -19 இன் உறுதிப்படுத்தப்பட்ட வழக்காக(case) இருக்க வேண்டும்., குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நோயாளி இந்த சிகிச்சைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

மருத்துவரீதியாக, பிளாஸ்மா சிகிச்சை பெறும் நோயாளிக்கு கடுமையான நோய் அல்லது உயிருக்கு ஆபத்தான பிரச்சினைகள் இருக்க வேண்டும்.

உயிருக்கு ஆபத்தான பிரச்சினைகளில் மூச்சுத் திணறல், ஆக்ஸிஜன் அளவைக் குறைதல், செயற்கை ஆக்சிஜன் தேவை, குறைந்த இரத்த அழுத்தம் அல்லது பல உறுப்பு செயலிழப்பு போன்ற பிரச்சினைகளாக இருக்கலாம்.

ஒரு நன்கொடையாளர் 400 மில்லி பிளாஸ்மாவை நன்கொடையாக அளிக்க முடியும், ஒரு நோயாளிக்கு சிகிச்சையளிக்க 200 மில்லி பிளாஸ்மா போதுமானது என்பதால், இது இரண்டு உயிர்களை காப்பாற்ற முடியும்.

பிளாஸ்மா சிகிச்சையின் முதல் 14 நாட்களுக்குள் அதைப் பயன்படுத்தும்போது சிறந்த முடிவுகளைப் பெற முடியும் என்று மருத்துவ ஆராய்ச்சி கூறுகிறது.

அதன் பிறகு இந்த சிகிச்சை செய்யும்போது குணப்படுத்தும் வாய்ப்பு மிகவும் குறைவு மற்றும் உடலின் சில உறுப்புகளுக்கு நிரந்தர சேதம் ஏற்படக்கூடும் என்பதால் மீட்கும் வாய்ப்புகள் குறைகிறது.

பிளாஸ்மா சிகிச்சையில் கடுமையான பக்க விளைவுகள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. இரத்தத்தை மாற்றுவதோடு தொடர்புடைய சிறிய அபாயங்களும் இருக்கலாம்.

சில நோயாளிகளுக்கு சிகிச்சை தோல்வியடையக்கூடும் மற்றும் நோய்த்தொற்றின் மேம்பட்ட வடிவத்தை ஏற்படுத்தும். சிலருக்கு இது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

வைரஸ் தொற்றுநோய்களுக்கு பிளாஸ்மா தெரபியை சிகிச்சையாக பயன்படுத்துவது வரலாற்றில் இது முதல் முறையல்ல.

2014 ஆம் ஆண்டில், உலக சுகாதார நிறுவனம் (WHO) எபோலா வைரஸ் நோயிலிருந்து மீண்டவர்களின் ஆன்டிபாடி நிறைந்த பிளாஸ்மா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பிளாஸ்மா சிகிச்சையைப் பரிந்துரைத்தது.

தற்போது கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க, Convalescent Plasma Theraphy பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Convalescent Plasma Theraphy என்றழைக்கப்படும் இந்த சிகிச்சைமுறை, கடந்த காலங்களில் பல நோய்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. கடந்த காலங்களில், ஏற்பட்ட பல சிக்கலான நோய்களுக்கு இந்த சிகிச்சை முயற்சிக்கப்பட்டது.

1918 H1N1 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் (ஸ்பானிஷ் காய்ச்சல்) தொற்றுநோய்களின் போது, சிகிச்சை சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டது.

இறுதியாக பிளாஸ்மா சிகிச்சை 2009 இன் H1N1 நோய்த்தொற்றின் போது ஒரு சிகிச்சையாக பயன்படுத்தப்பட்டது.

வாரத்தில் 2 – 3 முறை:

COVID-19 பிளாஸ்மா சிகிச்சைக்கு பின்னர் உடனடியாக குணமாவதை எதிர்பார்ப்பது புத்திசாலித்தனமானது அல்ல. இந்த சிகிச்சைக்கு முடிவுகள் தெரிய குறைந்தது 72 மணி நேரமாகும். சில நோயாளிகளுக்கு 10 நாட்கள் கூட தேவைப்படலாம்.

நோயாளிக்கு சிகிச்சை பயனுள்ளதாக இருக்கிறதா என்பதை சில அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

நோயாளியின் ஆக்ஸிஜன் தேவை குறையும், எக்ஸ்ரேவில் நல்ல முன்னேற்ற தெரியும், நோயாளியின் சுவாசத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும், நோயாளிக்கு செயற்கை சுவாசம் தேவைப்படாது, வைரஸின் தாக்கம் குறையும்.

இதுவும் இரத்த தானம் செய்வது போன்றுதான் செய்யப்படுகிறது. இரத்த தானத்திற்கு ஆகும் நேரமே இதற்கும் ஆகும்.

Also Read: Space wars: விண்வெளியில் போர்கள் நடக்குமா..?

இதற்கும் ஒரு டியூப் போல் இருவரின் நரம்புகளிலும் செலுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர் உடலில் பிளாஸ்மா நீக்கப்பட்டு பின் இரத்த அணுக்கள் செலுத்தப்படுகிறது.

இது இரத்த தானம் போல் ஒரு முறை அல்லாமல் வாரத்தில் 2 – 3 முறை இந்த பிளாஸ்மா தெரபி செய்யப்படுகிறது. இதற்கு கொரோனாவில் இருந்து மீண்ட இரண்டு பேர் பாதிக்கப்பட்டவருக்கு உதவ வேண்டியிருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *