Thatstamil Newsஇயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Pimples On Face: இதெல்லாம் கூட முகப்பரு வருவதற்கு காரணமாமே, என்னன்னு நீங்களும் தெரிஞ்சுக்கங்க..!

Pimples On Face: இதெல்லாம் கூட முகப்பரு வருவதற்கு காரணமாமே, என்னன்னு நீங்களும் தெரிஞ்சுக்கங்க..!

வயது பேதமில்லாமல் அனைவரது அழகையும் சற்று அசைத்து பார்ப்பது முகப்பருக்கள் தான்.

Pimple reason on face - newstamilonline

Pimples On Face:

முகத்தில் வரும் முகப்பருவுக்கு காரணங்களாக நாம் நினைத்துகொண்டிருப்பது எண்ணெய் பசை சருமம், சருமத்துவாரங்களில் அடைபட்டிருக்கும் அழுக்கு, அதிகப்படியான கொழுப்பு போன்றவைதான்.

ஆனால் அன்றாடம் செய்யும் சிறிய தவறுகள் கூட முகப்பருவை உண்டாக்க காரணங்கள் ஆகிவிடுகின்றன என்கிறார்கள் சரும பராமரிப்பு நிபுணர்கள்.

முகப்பராமரிப்புக்கு பயன்படுத்தும் எந்த பொருளாக இருந்தாலும் அதை சரும பராமரிப்பு நிபுணர்கள் அல்லது அழகுக்கலை நிபுணர்களின் ஆலோசனை பெறுவது நல்லது.

பருவ வயதில் முகத்துக்கு பயன்படுத்தும் பொருள்கள் நிறம் மங்காமல் இருக்கவும், முகப்பருவை தடுக்கவும் இருக்க வேண்டும்.

30 வயதுக்கு மேற்பட்டு பயன்படுத்தும் பொருள்கள் முகத்தில் வயதான தோற்றத்தை வராமல் தடுக்க உதவும் பொருளாகவும் இருக்க வேண்டும்.

இப்படியே சருமத்துக்கு பயன்படுத்தும் எல்லா அழகு பொருள்களையும் உங்கள் வயதுக்கேற்றதை தேர்வு செய்து பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் பருக்கள் வராமல் தவிர்க்க முடியும். அழகுக்கு பயன்படுத்தும் மேக் அப் சாதனங்கள் அழகை பாதிக்காமல் இருப்பதும் முக்கியம்.

Pimple reason on face - newstamilonline

சருமத்தின் பிஹெச் அளவு சீராக இருக்கும் வரை சருமத்தில் எந்த பிரச்சனைகளும் இருக்காது. ஆனால் சோப்புகள் பெரும்பாலும் சருமத்தை காட்டிலும் அதிக பிஹெச் அளவைகொண்டிருக்கின்றன.

மேலும் சோப்புகளில் கடுமையான இராசயனங்கள் உள்ளது. அவை முகத்தின் அழுக்கையோ சருமத்தை சுத்தம் செய்வதை காட்டிலும் பாதிப்பை உண்டாக்கவே செய்கிறது.

ஏனெனில் பெரும்பாலான சோப்புகளில் இருக்கும் பிஹெச் அளவானது 9 முதல் 11 வரை இருக்கும். சருமத்தின் பிஹெச் அளவை காட்டிலும் மிக மிக அதிகம்.

இவை சருமத்தின் ஈரப்பதத்தை போக்கி வறட்சியையும் உண்டாக்கும். இவை முகப்பருவை உண்டாக்க அதிகவே வாய்ப்புண்டு என்கிறார்கள் சரும பராமரிப்பு நிபுணர்கள்.

அப்படியெனில் சோப்பு பயன்படுத்த கூடாதா என்கிறீர்களா? சருமத்தில் பிஹெச் அளவை பாதிக்காத அளவு சோப்பை பயன்படுத்துங்கள் நறுமணத்துக்கும், கலருக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவ்வபோது சோப்பை மாற்றகூடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Pimple reason on face - newstamilonline

மேற்கண்ட காரணங்களை கூட ஒத்துகொள்ளலாம். ஆனால் ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்துவதால் முகப்பரு உண்டாகும் என்பது ஏற்கமுடியுமா என்று கேட்கலாம்.

ஆனால் அழகு கலை நிபுணர்கள் இதற்கு சொல்லும் காரணங்களை மறுக்கவும் முடியாது. அடிக்கடி பயன்படுத்தும் ஸ்மார்ட் ஃபோன்களின் திரையிலும், பின்புறத்திலும் பாக்டீரியாக்கள் உள்ளது.

Also Read: Knuckle cracking side effects: அடிக்கடி நெட்டி முறிப்பது சரியா..?

ஒவ்வொரு முறை ஃபோன் பயன்படுத்திய பிறகு உங்களையும் அறியாமல் உங்கள் கைகள் முகத்தை வருடுகின்றன. இதனால் கைவிரல்களில் ஒட்டியிருக்கும் அழுக்குகள் முகத்தில் படிகின்றது. இவை முகத்தில் இருக்கும் கிருமிகளோடு இணைந்து முகப்பருக்களை உண்டாக்குகின்றது.

முகப்பருக்கள் வருவது இயல்பானது. அதை தடுக்க முடியாது ஆனால் அறியாமல் நாம் செய்யும் அன்றாட பணிகளின் மூலம் அதிகமாக வருவதற்கு வாய்ப்பு உண்டு என்னும் போது அதை தடுக்க முயற்சிக்கலாமே.