Pills Side Effects: மாத்திரைகள் சாப்பிடும்போது நீங்கள் செய்யும் தவறுகள் என்ன தெரியுமா..?
Pills Side Effects: மாத்திரைகள் சாப்பிடும்போது நீங்கள் செய்யும் தவறுகள் என்ன தெரியுமா..?
நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 1.5 மில்லியன் மக்கள் தவறான முறையில் மாத்திரைகளை உட்கொள்வதால் பாதிக்கப்படுகிறார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Health medication mistakes:
மருந்து, மாத்திரைகளை உட்கொள்வதில் இன்றளவும் மக்களுக்கு விழிப்புணர்வு தேவைப்படுகிறது.
சிகிச்சைக்கான சரியான மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையில் கேட்டு அதை பின்பற்றி வந்தாலே மாத்திரைகளால் உண்டாகும் பாதிப்பை தவிர்க்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
நாம் மாத்திரைகள் உட்கொள்வதில் அப்படி என்னென்ன தவறுகளை செய்கின்றோம் என்று பார்க்கலாம்.
உங்களுக்கு இரு வெவ்வேறு நோய்கள் இருந்தால் அதன் மாத்திரைகளை தனித்தனியாக சிறிது நேரம் கழித்து போட வேண்டும்.
ஆனால் இதனை சிலர் பின்பற்றமாட்டார், இரண்டு மாத்திரைகளையும் ஒன்றாக விழுங்கிவிடுவார்கள்.
இதனால் அந்த மாத்திரையின் பலனால் அந்த நோயினை முழுமையாக சரி செய்ய இயலாமல் போய்விடும். அதற்கு மாறாக சில பக்கவிளைவுகளை தான் சந்திக்க நேரிடும்.
சிலர் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் அந்த மாத்திரைகள் பற்றிய முழுமையாக அறியாமல் தாங்களாகவே மருந்தகங்களிலிருந்து மாத்திரைகளை வாங்கி உட்கொள்வார்கள். இது மிகவும் ஆபத்தான செயல்.
அதேபோல் மருத்துவர் உங்களுக்கு என்னென்ன மாத்திரைகளை எழுதி கொடுத்துள்ளார், அது நோய்க்கான சரியான மாத்திரைதான என்பதையும் அது சார்ந்த கற்றல் உள்ளவர்களை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.
இல்லையெனில் அதனால் நடக்கும் மருத்துவ தவறுகளை நீங்கள்தான் சந்திக்க நேரிடும்.
Health medication mistakes – அதிக டோஸ் கொண்ட மாத்திரைகள் :
மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
வலியின் தீவிரத்தை குறைக்க அதை விட அதிக டோஸ் கொண்ட மாத்திரைகளை உட்கொள்வதால், அது உங்களை அதிக சோர்வடையச் செய்யும்.
மேலும் தலை சுற்றல் , கல்லீரல் பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படும் .
சிலர் அடிக்கடி வரும் தலைவலி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கு மருத்துவர் பரிந்துரையின்றி மருந்தகங்களில் மாத்திரை வாங்கி உண்கின்றனர்.
இது அவர்களுக்கு எதிர்காலத்தில் தேவையற்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
அதோடு அவற்றை அடிக்கடி உட்கொள்ளுதல் இறப்பு வரை கொண்டு செல்லலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகள்தான் உங்களை உயிரை பாதுகாக்கிறது என்றாலும் அதை முறையாக உட்கொள்வதும் அவசியம்.
சரியான நேரத்தில், தவறாமல் முறையாக எடுத்துக்கொள்ளுங்கள். மாறாக அவற்றை தவிர்த்து வருவது உங்கள் உயிருக்கே ஆபத்தாகலாம்.
மாத்திரை உட்கொள்ளும் முறை :
சாப்பிட்ட உடனேயே மாத்திரை உட்கொள்ளுதல் தவறு. ஏனெனில் நீங்கள் சாப்பிட்ட உணவும், மாத்திரைகளும் தவறான பொருத்தமாக இருந்தால் அது நம் உடலுக்கு பதிப்பை ஏற்படுத்தலாம் .
இல்லையெனில் மாத்திரையின் ஊட்டச்சத்தை நம் உடல் ஏற்றுக்கொள்வதற்கு சிரமப்படலாம். எனவே சாப்பிடும் உணவில் கவனமாக இருங்கள்.
இந்த சிரமத்தை தவிர்க்க சிலர் வெறும் வயிற்றில் மாத்திரை சாப்பிட்ட பின்னர், சிறிது நேரம் கழித்து உணவு உட்கொள்ளலாம் என்கின்றனர். எனவே இதை உங்கள் மருத்துவரிடம் உறுதி செய்துகொண்டு பின்பற்றுங்கள்.
மற்றவர்களின் மாத்திரையை உட்கொள்ளுதல் :
ஒருவருக்கு இருக்கும் அதே உடல் நல பாதிப்பு மற்றவர்களுக்கும் இருந்தால் அதை மருத்துவரின் பரிந்துரை என்று அவருடைய மாத்திரையை உட்கொள்வார்கள்.
இப்படி அவர்களுக்காக மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரையை நீங்கள் உட்கொள்வது பாதிப்பை அதிகமாக்கலாம்.
அதோடு அவருக்காக எழுதப்பட்ட மாத்திரை அவருடைய நோய் பாதிப்பு, உடல் பலவீனம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதிக் கொடுத்திருக்கலாம்.
உங்களுக்கு அதன் தீவிரம் குறைவாக இருந்தால் அல்லது உங்களுக்கு வேறு ஏதேனும் நோய் இருந்தால் இந்த பரிந்துரையற்ற மாத்திரை உங்களை ஆபத்தில் சிக்க வைக்கலாம்.
எனவே அசாதாரணமாக இருக்காதீர்கள். மாத்திரைகளை சரியான முறையில் எடுத்து கொண்டு பலன் பெறுங்கள்.