இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Health Care: குதிகால் வெடிப்பு மறைய எளிய வீட்டு வைத்தியங்கள்..!

Health Care: குதிகால் வெடிப்பு மறைய எளிய வீட்டு வைத்தியங்கள்..!

அளவுக்கு அதிகமான குளிர்ச்சி, வறட்சியான சருமம், அதிப்படியான உடல் எடை, நீரில் நீண்ட நேரம் நின்று கொண்டு இருத்தல், அசுத்தமான வாழ்க்கை முறை மற்றும் செருப்பு அணியாமல் வெறும் காலோடு நடத்தல் உள்ளிட்ட காரணங்களால், நமக்கு குதிகால் வெடிப்பு ஏற்படக் கூடும்.

patha vedippu tips - newstamilonline

Health Care:

இந்த பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு, அப்பகுதிகளில் வலி மற்றும் வெடிப்புகளிலிருந்து ரத்தம் கசிதல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்.

குதிகால் வெடிப்பிலிருந்து மிகவும் விரைவாக நிவாரணம் பெற சில எளிய வீட்டு வைத்திய முறைகளை இந்த பதிவில் காணலாம்.

ஆப்பிள் வினிகர் மற்றும் எலுமிச்சை:

வெடிப்பு வந்த மற்றும் உலர்ந்த கணுக்கால் பிரச்சினையை சரி செய்ய ஆப்பிள் வினிகர் உதவியாக இருக்கும். அதில் எலுமிச்சை சாற்றையும் சேர்த்தால், இன்னும் சிறந்த முடிவுகளைப் பெறலாம்.

இவை இரண்டும் அழற்சி எதிர்ப்பு மற்றும் அமிலக் கூறுகளைக் கொண்டிருக்கின்றன. இவை உலர்ந்த செல்களை வெளியேற்றி புதிய செல்களை ஊகுவித்து சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கின்றன.

முதலில், ஒரு எலுமிச்சையின் மேற்பரப்பை ஒரு கிரேட்டரின் உதவியுடன் கிரேட் செய்துகொள்ளுங்கள் (துருவிக்கொள்ளுங்கள்).

ஒரு பாத்திரத்தில் 3 லிட்டர் தண்ணீரை சேர்த்து இந்த கலவையை வேகவைக்கவும்.

கேஸை அணைத்து விட்டு, இந்த தண்ணீர் மிதமான சூட்டிற்கு வந்தவுடன், இதில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் வினிகரைச் சேர்க்கவும்.

இப்போது இந்த தண்ணீரில் உங்கள் கால்களை சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருங்கள்.

Patha vedippu tips-தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெயை தவறாமல் பயன்படுத்தி வந்தால் குதிகால் வெடிப்பு பிரச்சினை நீங்கும்.

இதற்கு, நீங்கள் இரவில் தூங்குவதற்கு முன் பாதிக்கப்பட்ட பகுதியில் தேங்காய் எண்ணெயை தடவ வேண்டும்.

தேங்காய் எண்ணெயை சிறிது சூடாக்கியும் குதிகால் வெடிப்பில் தடவலாம். தேங்காய் எண்ணெய் கொண்டு நன்றாக மசாஜ் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

தூங்கும் போது சாக்ஸ் அணிய மறக்காதீர்கள். காலையில் எழுதவுடன் முதலில் உங்கள் கால்களை தண்ணீரால் கழுவ வேண்டும்.

கற்றாழை மற்றும் கிளிசரின்:

கற்றாழை நீரேற்றம் மற்றும் குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டிருப்பதாக தோல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இது வறண்ட சருமத்தின் சிக்கலை நீக்குகிறது. இதில் கிளிசரின் சேர்ப்பதன் மூலம், பாதங்கள் நல்ல ஈரப்பதத்தைப் பெறுகின்றன.

வறண்ட மற்றும் வெடித்த சருமத்திற்கு இதன் பயன்பாடு பயனுள்ளதாக இருப்பதற்கான காரணம் இதுதான்.

2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லையும் ஒரு ஸ்பூன் கிளிசரினையும் கலக்க வேண்டும்.
உங்கள் கால்களை வெதுவெதுப்பான நீரில் கழுவிய பின் இந்த கலவையைக் கொண்டு கால்களை மசாஜ் செய்யவும்.

இப்படி அடிக்கடி செய்துவந்தால், பாதங்களில் உள்ள வெடிப்பு, சொரசொரப்பு அனைத்தும் போய், பாதங்கள் பொலிவுடன் இருக்கும்.

​மவுத்வாஷ்:

நாம் நமது வாய் பராமரிப்பிற்காக, தினமும் பயன்படுத்தும் மவுத்வாஷ், குதிகால் வெடிப்பு பாதிப்பிற்கும் சிறந்த தீர்வாக அமைகிறது.

மவுத்வாஷில் உள்ள வேதிப் பொருட்கள், குதிகால் வெடிப்புக்கு காரணமான பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிரிகளை கொல்வதோடு மட்டுமல்லாது, வறண்ட சருமத்தை மாய்ஸ்சுரைஸ் செய்கிறது.

Also Read: Health medication mistakes: மாத்திரைகள் சாப்பிடும்போது நீங்கள் செய்யும் தவறுகள் என்ன தெரியுமா..?

2 பங்கு தண்ணீரில் ஒரு பங்கு மவுத்வாஷ் சேர்த்து அந்த கலவையில், கால்களை 15 நிமிடங்கள் ஊறவைத்தால், குதிகால் வெடிப்பு பிரச்சினையில் இருந்து நிவாரணம் பெறலாம்.