News Tamil OnlineTamil NewsTamil Technology Newsஇயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Pasalai Keerai : உடல் உஷ்ணத்தை போக்கும் பசலை..! பித்தத்திற்கு சிறந்த தீர்வு அளிக்குமா….?

Pasalai Keerai : உடல் உஷ்ணத்தை போக்கும் பசலை..! பித்தத்திற்கு சிறந்த தீர்வு அளிக்குமா….?

குளிர்ச்சித் தரும் கீரைகளில் பசலைக்கீரை சிறப்பான ஒன்று. இதில் விட்டமின் A, B மற்றும் C என்ற உயிர்ச் சத்துகளுடன் புரதம், சுண்ணாம்பு மற்றும் இரும்புச் சத்துகளும் அதிகம் உள்ளன.

What Can Help With Spinach?

பசலைக் கீரையைச் சமைக்காமல் அதன் தளிரினை பச்சையாக கூட எடுத்து சாப்பிடலாம்.உஷ்ணத்தினால் நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு போன்ற நோய்கள் இருந்தாலும் அவை நீங்கிவிடும்.

பசலைக்கீரை வெற்றிலைபோல் கனத்த இலைகளும், சிவப்பு நிறத்
தண்டும் கொண்டது. இது கொடி வகையைச் சேர்ந்தது. இதனைக் கொடிப்பசலை என்றும் கூறுவார்கள்.

கொடி வகைக் கீரைகளில் மிகப் பெரியது பசலைக் கீரைதான். இது எங்கும் எளிதில் வளரக்கூடியது.

இந்தக் கீரையைக் கடையல், பொரியல் செய்து உணவில் சேர்த்துக் கொள்வார்கள். இது உண்பதற்குச் சுவையாக இருக்கும், உடல் நலத்திற்கும் ஏற்றது.

கர்ப்பமான பெண்களுக்கு பயன்தரும் பசலைக்கீரை:

கர்ப்பமான பெண்களுக்குப் பசலைக் கீரை பலவிதத்தில் பலனை அளிப்பதாகும். ஆதலின் இப்பெண்கள் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கற்பிணிப் பெண்கள் இந்தக் கீரையினை சாப்பிட்டால், கருவில் இருக்கும் குழந்தைக்கு கால்ஷியம், இரும்பு சத்துகள் நேரடியாக கிடைக்கும்.

கர்ப்பிணிப் பெண்கள் உஷ்ணம் மற்றும் மலச்சிக்கல்
காரணத்தினால் நீர்ப்பிரியாமல் சிரமப்படுவார்கள். அவர்கள் இக்கீரையை சாப்பிட்டால் இதுபோன்ற தொல்லைகள் வராது, ஆரோக்கியத்துடன் குழந்தையினை பெற்றெடுப்பார்கள்.

Pasalai Keerai:


தீராத தலைவலிக்கு:

தீராத தலைவலியால் கஷ்டப்படுபவர்கள் பசலைக் கீரையிலிருந்து சாறு பிழிந்து, அந்தச் சாறை தலை மற்றும் நெற்றியில் தடவிக் கொண்டால் தீராத தலைவலி குணமாகும்.

கிரந்தி நோய்களுக்கு:

V. D என்று சொல்லுகின்ற கிரந்தி நோயாளிகளுக்கு பசலை ஒரு சிறந்த நோய் தீர்க்கும் நிவாரணியாக செயல்படுகிறது.

பசலைக் கீரையை எடுத்து நன்றாக இடித்து, அதன் சாறை பிரித்து எடுத்துக் கொள்ளவும்.

தினசரி காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். இதுபோன்று தொடர்ந்து 30 நாட்கள் குடித்துவந்தால் கிரந்தி நோய்குணமாகும்.

வெள்ளை, வெட்டை, மூத்திர தாரையில் புண் போன்ற நோய்களை உள்ளவர்களும் இம்முறையில் கீரையினை உட்க்கொள்ளலாம்.

சீழ்பிடித்த இரணங்கள், உடையாத கட்டிகள்:

சீழ்பிடித்த இரணங்கள் ஆறாமல் இருந்தாலோ,தேவையற்ற கட்டிகள் உடையாமல் சீழ் உள்ளிருந்து எரிச்சலை ஏற்படுத்தினாலோ இப் பசலைக் கீரையை வதக்கி அதன் மீது வைத்துக் கட்டினால் போதும் எளிதில் இரணங்கள் ஆறும்.

மேலும், உடையாத கட்டிகள் உடைந்து சீழ் சுத்தமாக வெளியேறும்.

Spinach Uses:


பித்த நோய்கள் குணமாகும்:

பசலைக் கீரையில் கஷாயம் போட்டு வடிகட்டி அதில் சர்க்கரை மற்றும் பால் சேர்த்து குடித்தால் பித்த நோய்கள் குணமாகும்.

ஆண்மைக் குறைவிற்கு தீர்வு

பசலையில் ஏராளமான சுண்ணாம்பு மற்றும் வைட்டமின்D சத்துக்கள் அடங்கியுள்ளன.

ஆண்மைக் குறைவு நீங்கி இந்தக் கீரையை அடிக்கடி சமைத்து உணவில் சேர்த்துக் கொண்டால் இக் குறைகள் நீங்கும்.

பசலை கீரையினை பருப்புடன் சேர்த்தும் சமைத்து உண்பார்கள். மேலும், வைட்டமின் சி C, இரும்பு, சுண்ணாம்பு, புரதம் ஆகிய சத்துகளும் இதில் அடங்கியுள்ளன.
what can help with spinach
கீரையின் இளந்தளிர்களைப் பச்சையாக மென்று உண்ணுவதன் மூலம், உடல் குளிர்ச்சி அடைகிறது.

நீர்க்கடுப்பு அகன்று விடுகிறது, இரத்தம் சுத்தமாகிறது. இது உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்துவதினால் உடல் எரிச்சல் நீக்குகிறது.

மேலும், இரத்த சோகையுள்ளவர்கள் இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர நோய்குணமாகும்.

ருசியின்மையைப் போக்கி, பசியை உண்டாக்கும். உணவை எளிதில் ஜீரணமடையச் செய்யும்.

பித்த சம்பந்தமான வாந்தி, கிறுகிறுப்பு போன்ற தொல்லைகளை அகற்றும்.

Also Read Benefits of Rubbing Ice on Face: உடனடியாக முகத்தை பொலிவாக்கும் ஒரு பொக்கிஷம்..!

சில பெண்கள் வெள்ளைப் படுதல் நோயால் அவதிப்படுவர். அவர்கள் இக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வரகுணமாகும்.

எந்த வயதினரும் இந்தக் கீரையைச் சாப்பிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *