Papaya Leaf Juice and Benefits: பப்பாளி இலைச்சாறின் நன்மைகள்..!
Papaya Leaf Juice and Benefits: பப்பாளி இலைச்சாறின் நன்மைகள்..!
பப்பாளியில் எண்ணற்ற நன்மைகள் இருப்பதை அனைவரும் அறிந்ததே. அதேசமயம் பப்பாளி மட்டுமன்றி அதன் முழு மரமே மருத்துவ குணங்கள் அடங்கியதுதான்.

Papaya Leaf Juice and Benefits:
பலரின் வீடுகளிலும் சாதாரணமாக காணப்படும் பப்பாளி இலையில் இவ்வளவு நன்மைகளா என்று வியக்கும் வகையில் பப்பாளி இலை எண்ணற்ற இயற்கை வைத்தியங்களை உள்ளடக்கியது.
மாத்திரைகளால் கூட சரி செய்ய முடியாத பிரச்சினைகளை பப்பாளி இலை சரி செய்துவிடுகிறது.
குறிப்பாக டெங்கு, டைஃபாய்டு போன்ற நோய்களுக்கு ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பப்பாளி இலையின் சாறு முக்கிய பங்கு வகிக்கிறது.
ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவு ஏற்பட்டால், அவருக்கு பப்பாளி இலை ஜூஸ் கொடுத்து ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.
இதன் மூலம் நோயின் தீவிரத்தில் இருந்து மீட்கலாம்.
பப்பாளி பழத்தில் கரோட்டின் சத்து அதிகமாக உள்ளது. கரோட்டின் மஞ்சள் நிறமான பழங்களில் அதிக அளவு காணப்படுகிறது.
இந்த கரோட்டின் என்னும் நிறச்சத்து நம் உடலில் விட்டமின் A ஆக மாற்றப்படுகிறது.
இதுவரை டெங்கு, சிக்கன் குனியா, டைஃபாய்டு போன்ற நோய்களுக்கான பிரதியேக ஊசி, மாத்திரைகள் இல்லை என்பதால் பப்பாளி இலைகள்தான் இதற்கு முதன்மை மருத்துவமாக உள்ளது.
இரத்ததில் குளுக்கோஸ் அளவை சீராக பராமரிக்க பப்பாளி இலை உதவுகிறது.
வாயு தொல்லை, வயிறு மந்தம், நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கு பப்பாளி இலை சிறந்தது.
இதில் நார்ச்சத்து இருப்பதால் வயிறு பிரச்னை, செரிமானப் பிரச்சினைகளுக்கு உதவும்.
பப்பாளி ஜூஸ் குடிப்பதால் சருமப் பொலிவு அதிகரிக்கும். பப்பைன் என்னும் வேதிப்பொருள் பப்பாளி இலையில் இருப்பதால் அது இயற்கையாகவே இறந்த செல்களை நீக்கி சருமத்தை பழுதுபார்க்கும்.
வயதான தோற்றத்தை தவிர்க்கவும் பப்பாளி ஜூஸ் உதவுகிறது.
பப்பாளி சாறை தலை முடியின் வேரில் படும்படி தேய்த்துவிட்டால் முடியின் வளர்ச்சி சீராக இருக்கும்.
Also Read: Patha vedippu tips: குதிகால் வெடிப்பு மறைய எளிய வீட்டு வைத்தியங்கள்..!
அதோடு இதில் பூஞ்சைகளை எதிர்த்துப் போராடும் ஆற்றல் இருப்பதால் பொடுகுத் தொல்லைக்கு பப்பாளி இலை உதவும்.
பப்பாளி இலை புற்றுநோயை தவிர்க்க பாரம்பரிய மருத்துவமாக கடைபிடிக்கப்படுகிறது.
அதனால் பப்பாளி இலை சாப்பிட்டு வருவதால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.