பானி பூரி ATM..! புது முயற்சி..!

பானி பூரி ATM..! புது முயற்சி..!

கொரோனா ஊரடங்கால் மக்கள் தவறவிட்ட முதல் விஷயம் உணவு என்பதை யாராலும் மறுக்கவே முடியாது.

ரெஸ்டாரண்ட் உணவு, ரோட்டுக்கடை உணவு என வாய்க்கு ருசியாக சாப்பிட்டு வந்த நாம் இப்போது மூன்று வேளையும் வீட்டு உணவை சாப்பிட்டு வருகிறோம்.

ATM pani-puri

இந்நிலையில், கொரோனா பரவல் பயமின்றி பானி பூரி சாப்பிட, ‘பானி பூரி ஏடிஎம்’ தயாரித்த இந்தியரின் படைப்பு சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இன்று ஒரே நாளில் 24,879 பேர் கொரோனா தோற்றால் பாதிக்கபட்ட நிலையில், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 7.69 லட்சமாக உயர்ந்துள்ளது.

கொரோனா பயமின்றி பானிபூரி சாப்பிட, இந்தியர் ஒருவர் மிஷின் ஒன்றை தயாரித்துள்ளார்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்த இளைஞரான பாரத்பாய் விகாபாய் பிரஜாபதி, இந்த ‘பானி பூரி ATM’ ஒன்றை தயாரித்துள்ளார்.

ATM pani-puri

இந்த இயந்திரத்தில், ரூ.20 நோட்டை உள்ளே செலுத்தினால், கன்வேயர் பெல்டில், பூரியுடன் பானி, உருளைக்கிழங்கு சேர்த்த கலவை, ஒன்றன் பின் ஒன்றாக வருகிறது. இதனை அப்படியே எடுத்து சாப்பிடலாம்.

Also Read: COVID-19 தடுப்பூசி சான்றிதழை Download செய்வது எப்படி..?

கொரோனா பரவலைத் தடுக்கவும், மக்கள் பயமின்றி பானி பூரி சாப்பிடவும் இந்த இயந்திரத்தை, பிரஜாபதி கண்டுபிடித்துள்ளார்.

பிரஜாபதியின் இந்த கண்டுபிடிப்பும், அவரது இயந்திரம் எவ்வாறு செயல்படுகிறது என்ற வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *