Thatstamil Newsஇயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Open Pores : இயற்கையான முறையில் சரி செய்ய டிப்ஸ்..!

Open Pores : இயற்கையான முறையில் சரி செய்ய டிப்ஸ்..!

அனைவரும் அழகாக, பொலிவான சருமத்தை பெற வேண்டும் என்றே விரும்புவார்கள்.

open pores skin - newstamilonline

ஆனால் சிலருக்கு முகத்தில் பெரிய துளைகள் அதாவது open pores காணப்படும்.

மூக்கு அல்லது கன்னம் பகுதியை சுற்றியுள்ள இந்த துளைகளை சரி செய்வது சற்று கடினம்.

Makeup செய்யும் ரும்பாலான க்ரீம்கள், லோஷன்கள் தயாரிப்புகள் இந்த துளைகளில் தங்கி பாதிப்பை ஏற்படுத்தும்.

Open pores skin சரி செய்ய வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே நீங்கள் ஃபேஸ் பேக்குகள் தயாரித்து பயன்படுத்தலாம்.

கடலை மாவு ஃபேஸ் பேக் :

இறந்த சரும செல்களை அகற்றுவதற்கும், சரும துளைகளை சரி செய்வதற்கும் கடலை மாவு சிறந்தது.

2 டீஸ்பூன் தயிர், 1 ஸ்பூன் கடலை மாவு, மஞ்சள் தூள் சிறிதளவு மற்றும் தேன் அரை ஸ்பூன் எடுத்து ஒரு பவுலில் நன்கு கலக்கி கொள்ளுங்கள்.

இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும்.

மேலும் வாரத்திற்கு இரண்டு முறை அப்ளை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

முல்தானி மிட்டி ஃபேஸ் பேக் :

முல்தானி மிட்டி சருமத்தில் உள்ள அழுக்களை நீக்கி , அதிகப்படியான எண்ணெய் பசையை ஈர்த்து சருமத்தை பொலிவாக்குகிறது.

இதற்கு 2 ஸ்பூன் முல்தானி மிட்டி, 1 டீஸ்பூன் தக்காளி சாறு, சிறிது மஞ்சள் தூள் எடுத்து நன்கு தண்ணீரில் கலந்து அப்ளை செய்ய வேண்டும்.

உலர்ந்தவுடன் தண்ணீரில் கழுவி விட்டு ரோஸ் வாட்டரைத் தொடர்ந்து மாய்ஸ்சரைசராக பயன்படுத்துங்கள். அடிக்கடி செய்து வந்தால் Open pores சரியாகிவிடும்.

தேன் ஃபேஸ் பேக் :

தேன் ஒரு சிறந்த வைட்டமின் சி ஆதாரமாகும். தேனை எலுமிச்சை பழத்துடன் கலக்கும்போது சருமம் அழகாகும்.

உங்கள் சருமத்தை தேன் உள்ளிருந்து ஈரப்பதமாக்கும்.

மேலும் இது உங்கள் சருமத்தை அதிகமாக உலர்த்தாமல் உங்கள் சரும துளைகளை குறைக்க உதவும்.

Also Read: Exercise Tips – தினமும் ஸ்கிப்பிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள்..!

1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 ஸ்பூன் தேன், சிறிது மஞ்சள் தூள் ஒரு பவுலில் கலந்து நன்கு பேஸ்ட் செய்து சருமத்தில் அப்ளை செய்யுங்கள்.

வாரம் ஒருமுறை இப்படி செய்து வந்தால் சரும துளைகள் சரியாகும்.

முட்டை ஃபேஸ் பேக் :

முட்டை வெள்ளை சருமத்தை பெரிய திறந்த துளைகளிலிருந்து விடுபடவும் உங்கள் சருமத்திலிருந்து அதிகப்படியான எண்ணெயை நீக்குகிறது.

கிண்ணத்தை எடுத்து சிறிது முட்டை வெள்ளை சேர்த்து, நன்றாக கலக்கவும்.

உங்கள் முகத்தில் இதை திசு காகிதம் மூலம் தடவவும். அது முழுவதுமாக உலர்ந்த பின்னர் திசு காகிதத்தை மெதுவாக உரிக்கவும். இது பிளாக்ஹெட்ஸ் மற்றும் வைட்ஹெட்ஸிலிருந்து விடுபட உதவும்.