OnePlus Smartwatch Latest News: ஸ்மார்ட் வாட்ச் விரைவில்..!

OnePlus Smartwatch Latest News: ஸ்மார்ட் வாட்ச் விரைவில்..!

OnePlus நிறுவனம் விரைவில் ஒரு புதிய ஸ்மார்ட்வாட்சை அதன் போர்ட்ஃபோலியோவில் சேர்க்க தயாராகி வருவதாகத் தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

OnePlus Smartwatch Latest News

OnePlus Smartwatch Latest News:

ஸ்மார்ட்போன்களின் வழியாக மாபெரும் பிரபலத்தன்மையை அடைந்த ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஆண்டு முதல் பல வகையான தாயரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது.

தற்பொழுது ஸ்மார்ட்வாட்ச் பிரிவில் நுழையத் தயாராகிவிட்டது.

ஒன்பிளஸ் தனது சொந்த ஸ்மார்ட்வாட்ச் என்கிற யோசனையை நீண்ட காலமாகவே கொண்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டில், ஒன்பிளஸ் நிறுவனம் ஒரு ஸ்மார்ட்வாட்சில் வேலை செய்வதாகக் கூறியதுடன், வடிவமைப்பு சார்ந்த பணிகளையும் முடித்து விட்டதாக கூறி இருந்தது.

இருப்பினும், தொழில்நுட்ப தடைகள் காரணமாக ஒன்பிளஸ் நிறுவனம் அந்த நேரத்தில் பின்வாங்கியது.

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கான வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் நீர் எதிர்ப்பு அம்சங்களுக்கும் இதே நிலைதான்.

ஆனால் இது 2020 ஆம் ஆண்டு, எல்லாமே மாறிவிட்ட ஒரு காலம். எனவே ஒரு ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் உருவாக்கம் பெறுவதில் இந்நிறுவனத்திற்கு எந்தவொரு சிக்கலும் இருக்காது.

ஒன்பிளஸ் வாட்ச்

இதைத் தொடர்ந்து புதிய ஒன்பிளஸ் வாட்ச் பற்றிய விவரங்கள் ஐஎம்டிஏ (இன்போகாம் மீடியா டெவலப்மென்ட் அத்தாரிட்டி) வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது.

அதில் புதிய ஒன்பிளஸ் வாட்ச் டபிள்யூ301ஜிபி எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனம் தனது வாட்ச் மாடலை எப்போது வெளியிடும், அதன் விலை எவ்வாறு நிர்ணயம் செய்யப்படும் என்பது குறித்து இதுவரை எவ்வித தவலும் இல்லை.

Also Read: Interesting Facts About Animals: கல் கருவிகளை சுத்தியல் மற்றும் கத்திகளாக உருவாக்க முயலும் ஒராங்குட்டான்..!

எனினும், ஒரு வருடத்திற்கும் மேலாக உருவாக்கப்படுவதால், விரைவில் அது அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *