New discovered species: பாலின-நடுநிலை அறிவியல் பெயரைப் பெறும் புதிய எறும்பு இனங்கள்..!
New discovered species: பாலின-நடுநிலை அறிவியல் பெயரைப் பெறும் புதிய எறும்பு இனங்கள்..!
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட எறும்பு இனத்திற்கு முதன்முறையாக பாலின நடுநிலை என்ற அறிவியல் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

New discovered species:
இந்த எறும்பு இனம் ஈக்வடாரின் பசுமையான வெப்பமண்டல காடுகளிலிருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் பாலின வேறுபாட்டைக் சிறப்பிக்கும் விதமாக அதற்கு பாரம்பரிய பாலின லத்தீன் சொல்லுக்கு பதிலாக “-அது”(-they), என்ற சொல்லுடன் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த எறும்பை 2018 இல் ஜெர்மனியின் டார்ம்ஸ்டாட் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பிலிப் ஹோயன்லே(Philipp Hoenle) என்ற ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்தார்.
அவர் அந்த எறும்பின் புகைப்படத்தை யேல் பல்கலைக்கழகத்தின் வகைபிரித்தல் நிபுணர் டக்ளஸ் பூஹருக்கு(Douglas Booher) அனுப்பினார். Douglas அதை ஸ்ட்ரூமிஜெனிஸ்(Strumigenys) இனத்தில் ஒரு புதிய இனமாக அங்கீகரித்தார்.
வழக்கமாக பெயரிடுதலின் போது இந்த இனங்களின் பெண்களை அடையாளம் காண அவற்றின் பெயருடன் -ae என்ற சொல்லும், ஆண்களை அடையாளம் காண அவற்றின் பெயருடன் -i என்ற சொல்லும் சேர்த்து பெயரிடப்படும்.
ஆனால் இந்த புதிய எறும்பு இனகளுக்கு Douglas Booher பாலினம் அல்லாத இனத்தின் அடையாளங்காட்டியாக -they என்ற சொல்லை பயன்படுத்த பரிந்துரைத்தார்.
பின்னர் கலைஞரும் மனித உரிமை ஆர்வலருமான Jeremy Ayers என்பவரின் நினைவாக அதற்கு Strumigenys ayersthey எறும்புஎன்று பெயரிட்டார்.
Jeremy Ayers 1970 களில் Silva Thinn என்ற புனைப்பெயர் கொண்ட Andy Warhol-லின் பாதுகாவலராக இருந்தார். அவர் 2016 இல் இறந்தார். அவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளராக அடையாளம் காணப்பட்டார்.
ஆர்.இ.எம் குழுவின் முன்னணி பாடகர் மற்றும் Ayers -ன் ஒரு பரஸ்பர நண்பரான மைக்கேல் ஸ்டைப்-இடமும் (Michael Stipe) பூஹர் ஆலோசித்தார்.
பூஹரின் கூற்றுப்படி, ஸ்ட்ரூமிஜெனிஸ் இனத்தில் 853 இனங்கள் உள்ளன. ஆனால் இந்த புதிய எறும்பு உடனடியாக தனித்துவமானது என்று அடையாளம் காணப்பட்டது.
இது எறும்பு இனத்திலிருந்து மிகவும் வித்தியாசமானது. ஆனால் ஒன்றிணைந்த பரிணாம வளர்ச்சி நிறைய உள்ளது.
பல்வேறு நாடுகளில் நிறைய இனங்கள் ஒரே மாதிரியாகத் தோன்றினாலும் அவை தொடர்புடையவை அல்ல. எனவே இது ஒரு சிறப்பு எறும்பு மற்றும் பாலின வேறுபாடு மற்றும் உயிரியல் பன்முகத்தன்மையைக் குறிக்க இதுபோன்ற ஒன்றுக்காக தான் நான் காத்திருந்தேன் என்று பூஹர் கூறுகிறார்.
அவரிடம் எதிர்கால புதிய உயிரினங்களுக்கு பெயரிட அவர் -they என்ற சொல்லை பயன்படுத்துவாரா என்று கேட்கப்பட்டதற்கு, பூஹர் கூறியது “பெயரிடப்பட்ட நபரின் விருப்பங்களைப் பொறுத்து அதற்கு பெண், ஆண் அல்லது பாலின வேறுபாடு அல்லாத சொல்லை பயன்படுத்துவதாகக் கூறினார்.