பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் கொண்ட 52 சீன Apps-ஐ அடையாளம் கண்ட National Security Agency..!

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் கொண்ட 52 சீன Apps-ஐ அடையாளம் கண்ட National Security Agency..!

டிக்டோக் (TikTok), யுசி பிரவுசர் (UC browser) மற்றும் ஷேர்இட் (ShareIT) போன்ற பிரபலமான 52 சீன பயன்பாடுகளை, இந்திய மக்கள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என இந்திய உளவுத்துறை (Indian Intelligence) மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

National Security Agency-newstamilonline

பாதுகாப்பு அமைப்பு அறிக்கையின்படி, இந்த பயன்பாடுகள் மூலம் நாட்டின் முக்கியமான பாதுகாப்பு தரவு இந்தியாவுக்கு வெளியே அனுப்பப்படுகிறது.

டிக்டாக், ஹலோ, யுசி பிரவுசர் போன்ற மொபைல் பயன்பாடுகள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுகின்றன.

இவை தவிர வால்ட்-ஹைடு, வீகோ வீடியோ, பிகோ லைவ், வெய்போ, வீசாட், ஷேர் இட், லைக், எம்ஐ கம்யூனிட்டி,

யுகேம் மேக்கப், கிளீன் மாஸ்டர், கிளாஷ் ஆஃப் கிங்ஸ் போன்ற முன்னணி செயலிகள் National Security Agency வெளியிட்ட அறிக்கையில் இடம்பிடித்து இருக்கின்றன.

ஆனால் பயனர் தரவை நாட்டிற்கு வெளியே அனுப்பும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் இந்த நிறுவனங்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளன.பாதுகாப்பு காரணங்களுக்காக ஜூம் பயன்பாடு குறித்து ஏற்கனவே பல செய்திகளில் வந்துள்ளது.

Also Read: Toll plaza வாகன நெரிசல் குறித்து முன்னரே அறிய FASTag App..!

இவற்றில், இந்திய சைபர் செக்யூரிட்டி ஏஜென்சி – கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் ஆஃப் இந்தியாவின் (சிஇஆர்டி-இன் – CERT-in) பரிந்துரையின் பேரில் ஜூம் பயன்படுத்துவது குறித்து அரசாங்கம் ஒரு ஆலோசனையை வெளியிட்டது.

உள்துறை அமைச்சக ஆலோசனைக்கு நிறுவனம் பதிலளித்திருந்தது, இது பயனர் பாதுகாப்பு குறித்து தீவிரமாக இருப்பதாக வலியுறுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *