News Tamil OnlineThatstamil Newsஇயற்கையோடு வாழ்வோம்செய்திகள்பழங்கள்

Musk Melon Benefits : கிர்ணி பழம் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!

Musk Melon Benefits : கிர்ணி பழம் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்.

ஜூஸ் நிறைந்த கிர்ணி பழம், எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க விரும்புவர்களிடையே புகழ் பெற்றிருக்கிறது.

muskmelon-newstamilonline

இதனால் உங்களுக்கு அழகான சருமமும் கிடைக்கும், பார்வைத்திறனுக்கும் உதவும்.

எல்லோருக்கும் பழக்கப்பட்ட மற்றும் ஏழை மக்களும் விரும்பி உண்ணக்கூடிய பழம்தான் கிர்ணி பழம்.

இதில் அதிகப்படியான வைட்டமின்கள் மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ளதால் இவற்றை “வைட்டமின்களின் சேமிப்புகலம்” என்றும் அழைக்கப்படுகிறது.

மேற்கத்திய நாடுகளில், கிர்ணி பழத்தை(Muskmelon) காண்டலூப்ஸ் என்று அழைக்கிறார்கள்.

இந்த பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்:

வெயில் காலங்களில் உங்கள் உடலை நீர்ச்சத்தோடு வைக்க உதவும் பழங்களில் கிர்ணி பழம் முக்கிய இடம் பிடிக்கிறது.

அதனால் கோடைக்கு ஏற்ற உணவாக இது கருதப்படுகிறது.

கிர்ணி பழங்களில், வைட்டமின் ஏ, ஈ, சி, பீட்டா கரோட்டின், பொட்டாசியம், மாங்கனீஸ் ஆகியவை நிறைந்துள்ளன.

உலக உடல்நல அமைப்பு, நுரையிலின் ஆரோக்கியத்துக்கு நன்மையளிக்கும், தலைசிறந்த உணவுகளில் கிர்ணி பழத்தை முதலாவதாக பட்டியலிட்டது.

பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளதால், கண்ணின் விழித்திரை சேதமடைவதை, அதாவது வயதாவதால் பார்வைக் குறைவு ஏற்படுவதைக் கட்டுப்படுத்தவும் கிர்ணி பழம் உதவுகிறது.

மிகமிகக் குறைவான கிளைசிமிக் இண்டெக்ஸ் இருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு நன்கு பலனளிக்கக் கூடியது.

இதன் ஜூஸ் நிறைந்த சதைப்பகுதியில், கரையக் கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது.

அதனால் தினசரி உணவில், கிர்ணி பழத்தை அதிகமாக சேர்த்துக் கொள்வதால், மலச்சிக்கலால் அவதிப்படும் நபர்களுக்கும் நல்லது.

நிக்கோட்டின் பாதிப்பிலிருந்து நுரையீரலை மிக விரைவாக பாதுகாத்து, புகைப்பழக்கத்தினை நிறுத்தக் கூடிய அரிய குணம் கொண்ட பழம்.

muskmelon benefits-newstamilonline

Musk Melon Benefits :

இது சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது அதோடு கொலஸ்டிரால்(cholesterol) இதில் துளிக்கூட இல்லை.

நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கிறது. அல்சர் நோயிற்க்கு மிகச் சிறந்த மருந்தாகவும் உள்ளது.

கிர்ணி பழம்(Muskmelon) சிறுநீரகத்தில் உள்ள கல்லையும் கரைக்கும் தன்மைக் கொண்டது.

Also Read: இந்த பழங்களை ஒன்றாக சாப்பிட்டால் விஷமாக கூட மாறுமாம்..!

தூக்கமின்மையால் அதிகப் பேர் பாதிக்கின்றனர் அவர்களுக்கான சிறந்த மருந்து தான் கிர்ணி பழம்.

இப்பழம் உடலில் உள்ள நரம்பு மற்றும் சதையை ரிலாக்ஸ் செய்து தூக்கத்தினை தருகிறது.

இதில் உள்ள அடினோசின் இதய நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

கிர்ணி பழத்தை தினமும் சாப்பிட்டுவர இம்மாதிரியான நோய்களிலிருந்து உடம்பைப் பாதுகாக்கலாம்.

எப்படி தேர்ந்தெடுப்பது?

கிர்ணி பழத்தை நன்றாகப் பார்த்து வாங்க வேண்டும். பழுத்த கிர்ணி பழத்தை எளிதாக காம்பிலிருந்து பிரித்தெடுக்க முடியும்.

காம்பின் முனையில் நுகர்ந்து பார்க்கும்போது, மஸ்க் வாசனை வராவிட்டால், அது பழுக்காத கிர்ணிபழமாக இருக்கக் கூடும்.

எச்சரிக்கை

கூடிய வரை, வெட்டிய உடனே கிர்ணி பழத்தை சாப்பிட்டுவிட வேண்டும்.

பழத்தை வெட்டி வைத்து, அப்படியே விட்டு விட்டீர்கள் என்றால், அதன் ஊட்டச்சத்துக்கள் ஆக்சிஜனிறக்கம் அடைந்து விடும். இதனால் பலன்கள் கிடைக்காமல் போகக்கூடும்.