Can We Live on Mars? பூமியை தவிர மற்றொரு கிரகத்தில் பறக்கும் முதல் ஹெலிகாப்டரின் முக்கியத் தகவல்கள்..!

Can We Live on Mars? பூமியை தவிர மற்றொரு கிரகத்தில் பறக்கும் முதல் ஹெலிகாப்டரின் முக்கியத் தகவல்கள்..!

பூமி அல்லாத வேறொரு கிரகத்தில் பறக்க முயற்சிக்கும் முதல் ஹெலிகாப்டர். ஆம் அறிவியலின் அற்புதம்.

Can We Live on Mars

Can We Live on Mars?

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியிருக்க முடியுமா?

அங்கு எதாவது உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பது குறித்து பல்வேறு ஆய்வுப் பணிகள் உலகெங்கும் நடைபெற்று வருகிறது.

இது குறித்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, கடந்த ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தை அனுப்பியது.

அந்த விண்கலம் கடந்த மாதம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. அங்கு அது ஆய்வுப் பணிகளைச் செய்து வருகிறது.

இதுவே முதல்முறை

பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்துடன் ஒரு குட்டி ஹெலிகாப்டரையும் நாசா அனுப்பி வைத்திருந்தது.

இன்ஜெனியூட்டி (Ingenuity) எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த ஹெலிகாப்டர் செவ்வாயில் முதல் முறையாக பறக்கவிருக்கின்றது.

ஹெலிகாப்டர் 90 வினாடிகள் வரை பறக்கக்கூடும்.

ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 980 அடி (300 மீட்டர்) தூரமும், தரையில் இருந்து சுமார் 10 முதல் 15 அடி உயரம் வரையிலும் பறக்கும்.

சிறிய சாதனையல்ல :

ரைட் பிரதர்ஸ் விமானத்தின் முதல் முயற்சியாக 12 வினாடி பறந்த விமானத்துடன் ஒப்பிடும்போது இது சிறிய சாதனையல்ல.

மனித குல வரலாற்றில் பூமியை தவிர மற்றொரு கிரகத்தில் ஹெலிகாப்டர் பறப்பது இதுவே முதல்முறையாகும்.

சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நான்கு கார்பன்-ஃபைபர் பிளேட்களைக் கொண்டுள்ளது.

அவை இரண்டு ரோட்டர்களாக அமைக்கப்பட்டுள்ளன.

அவை எதிரெதிர் திசைகளில் 2400 rpm வேகத்தில் சுழல்கின்றன. ரோட்டர்களின் மொத்த நீளம்: 4 அடி (1.2 மீட்டர்).

This is the first time

பூமியில் பயணிகள் ஹெலிகாப்டரை விட பல மடங்கு இது வேகமானது.

இதில் புதுமையான சூரிய மின்கலங்கள், பேட்டரிகள் மற்றும் பிற கூறுகளையும் கொண்டுள்ளது.

இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டர் சுமார் 4 பவுண்டுகள் (1.8 கிலோகிராம்) மட்டுமே எடையுள்ளதாக இருக்கிறது.

பூமியில் 4 பவுண்டுகள் என்பது செவ்வாய் கிரகத்தில் 1.5 பவுண்டுகள்.

ஏன் தெரியுமா?

#MarsHelicopter செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டர் பறப்பது கடினம், ஏன் தெரியுமா?

செவ்வாய் கிரகத்தின் மெல்லிய வளிமண்டலம் காரணமாக காற்றில் பறப்பதற்கு கடினமாக உள்ளது.

இங்கு மெல்லிய வளிமண்டலம், பூமியின் அடர்த்தியை விட 1% க்கும் குறைவானது.

அதாவது செவ்வாய் வளிமண்டலம் பூமியின் வளிமண்டலத்தை விட 99% குறைவான அடர்த்தியாக இருக்கின்றது.

இதனால் இங்கு பறப்பதற்கு எடை குறைவானதாக இருக்க வேண்டும்.

அதிலுள்ள இறக்கைகள் மிகப் பெரியவை.

மேலும் பூமியில் உள்ள ஒரு ஹெலிகாப்டருக்குத் தேவையானதை விட மிக வேகமாக சுழல்கின்றன.

ஜாய்ஸ்டிக் மூலம் கட்டுப்படுத்துவது கடினம் :

கூடுதலாக, ஜேபிஎல் விமானக் கட்டுப்பாட்டாளர்கள் ஜாய்ஸ்டிக் மூலம் ஹெலிகாப்டரைக் கட்டுப்படுத்த முடியாது.

தகவல்தொடர்பு தாமதம் என்பது விண்வெளி சார்ந்த வேளையில் எதிர்கொள்வது இயல்பானது.

#MarsHelicopter இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டர் தன் வழிப்பாதையில் எவ்வாறு பறப்பது மற்றும் தன்னை சூடாக வைத்திருப்பது குறித்த முடிவுகளை சுயமாக எடுப்பதற்கு முடியும்.

Ingenuity என்ற பெயர்

அலபாமாவின் நார்த்போர்ட் உயர்நிலைப் பள்ளி மாணவி Vaneeza Rupani முதலில் செவ்வாய் கிரக ரோவருக்கு Ingenuity என்ற பெயரை சமர்ப்பித்தார்.

ஆனால் ரோவருக்கு, பெர்சவரன்ஸ் என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஆதலால், நாசா அதிகாரிகள் Ingenuity என்ற பெயரை ஹெலிகாப்டருக்கு ஏற்ற பெயராக அங்கீகரித்தனர்.

இந்த மாபெரும் சாதனை குறித்து நாசா JPL தனது ட்விட்டரில், செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டர் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.

சுமார் 421 மில்லியன் கிலோமீட்டர் பயணித்த அந்த விண்கலத்தின் பயணம் இதன் மூலம் முடிந்துள்ளது.

இரவு நேரங்களில் நிலவும் கடும் குளிரைச் சமாளிப்பதே அதன் அடுத்த மைல்கல்லாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

Also Read: NASA Perseverance Rover செவ்வாய் கிரகத்தில் வானவில்லை படம்பிடித்ததா..? வைரலாகும் புகைப்படம்..!

ஹெலிகாப்டர் சவால்கள்

ஹெலிகாப்டருக்கு பல்வேறு சவால்கள் உள்ளது. செவ்வாய் கிரகத்தில் இரவு நேரங்களில் -90 டிகிரி செல்சியல் வெப்பநிலை நிலவும்.

ஆனால் அந்த கடும் குளிரை சமாளித்து ஹெலிகாப்டர் தன்னை தானே சூடாக வைத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் செவ்வாய் இரவுகளின் தீவிரமான குளிரில் தன்னிச்சையாக சூடாக வைத்திருப்பது என்பது பெரும் சவாலாகும்.

ஹெலிகாப்டர் அதன் சோலார் பேனல் மூலமாக தன்னை சார்ஜ் செய்து கொள்கிறது.

இதுவரை தினசரி மின் நுகர்வு, சூரிய சக்தி மற்றும் பேட்டரி அளவை கண்காணித்ததில் ஹெலிகாப்டர் வெற்றிகரமாகவே உள்ளது.

இது பூமியிலிருந்து முன்கூட்டியே அனுப்பப்பட்ட குறைந்தபட்ச கட்டளைகளை ஏற்றுக்கொண்டு பறக்க வேண்டும், தரையிறங்க வேண்டும்.

எதிர்கால பயணம்

செவ்வாய் வளிமண்டலத்தில் பறக்கத் தேவையான தொழில்நுட்பங்களை இந்த ஹெலிகாப்டர் கொண்டுள்ளது.

மேலும் இது வெற்றிகரமாக இருந்தால், இந்த தொழில்நுட்பங்கள் செவ்வாய் கிரகத்திற்கான எதிர்கால ரோபோ மற்றும் மனித பயணங்களில் சேர்க்கப்படக்கூடிய பிற மேம்பட்ட ரோபோ பறக்கும் வாகனங்களை இயக்க முடியும்.

தற்போதைய சுற்றுப்பாதைகள் இதுவரை அங்கு தரையிறங்கிய ரோவர்கள் வழங்காத ஒரு தனித்துவமான பார்வையை அவை வழங்கலாம்.

ரோவர்கள் அடைய கடினமாக இருக்கும் நிலப்பரப்புக்களை இவற்றால் அணுக முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *