Latest Robot Technology: பீட்சா தயாரிப்பதில் உள்ள சவால்களை தீர்க்கும் ரோபோ..!

Latest Robot Technology: பீட்சா தயாரிப்பதில் உள்ள சவால்களை தீர்க்கும் ரோபோ..!

ஒரு புதிய நுட்பமானது ரோபோக்களை, மாவு போன்ற மெல்லிய பொருட்களை கையாள செயல்படுத்த முடியும் என்று கூறியுள்ளது.

Latest Robot Technology

Also Read: Robotics technology: பார்ப்பதற்கு வித்தியாசமான ரோபோ பல்லிகள் அவற்றை வேட்டையாடலில் இருந்து பாதுகாக்கிறது..!

Latest Robot Technology:

உங்களுக்குப் பிடித்த pizza crust, சமையல்காரரின் (chef’s)முடிவின் தொடக்கமாக இது இருக்குமா? ஒருவேளை இருக்காது.

ஆனால் அமெரிக்க விஞ்ஞானிகள் பீட்சா மாவை போன்ற மெலிதான பொருட்களை எவ்வாறு கையாள்வது என்பதை ரோபோக்களுக்கு கற்பிக்க ஒரு வழியை உருவாக்கியுள்ளனர்.

ரோபோக்கள்  மாவு போன்ற பொருட்களினை கையாளுவது கடினம். மாவின் வடிவம் தொடர்ந்து மாறும், இதனை ஒரு சமன்பாட்டில் [formula] குறிப்பிடுவது கடினம், அதே சமயம் வெவ்வேறு கருவிகள் அவ்வாறு செய்யத் தேவைப்படும்.

ரோபோக்கள் ஒரு நீண்டசெயல்முறைகளை கொண்ட ஒரு கையாளுதல் பணியைக் கற்றுக்கொள்வது கடினம்

அங்கு பல கடினமான செயல்கள் உள்ளன – ஏனெனில் அதன் கற்கும் திறன் பெரும்பாலும் சோதனை மற்றும் பிழைகள் மூலமே நிகழ்கிறது.

இப்போது, இரண்டு கட்ட கற்றல் செயல்முறையைப் பயன்படுத்தும் புதிய கட்டமைப்பை உருவாக்கி, பீஸ்ஸா மாவை எவ்வாறு தயாரிப்பது என்பதை ரோபோக்களுக்குக் கற்பிக்க ஆராய்ச்சியாளர்கள் சிறந்த வழியைக் கொண்டு வந்துள்ளனர்.

Also Read: Facts About The Black Sea: கருங்கடலில் மூழ்கிய கப்பல்களின் கல்லறையை கண்டறிந்த விஞ்ஞானிகள்..! சுவாரஸ்யமான உண்மைகள்..!

இந்த முறை – அவர்கள் DiffSkill என்று அழைக்கிறார்கள், பீட்சா தளங்களை உருவாக்குவது போன்ற சிக்கலான கையாளுதல் பணிகளை நீண்ட காலத்திற்கு செய்ய ரோபோவை இயக்க முடியும்.

மனிதர்களாகிய நாம் நமது செயல்களை எவ்வாறு திட்டமிடுகிறோம் என்பதற்கு இந்த முறை ஒரு சான்றாக உள்ளது.

ஒரு மனிதன் ஒரு நீண்ட  பணியைச் செய்யும்போது, எல்லா விவரங்களையும் எழுதுவதில்லை.

ஆனால், இந்த ஆய்வில் அவர்கள்  செயல்களின்  மாவினை செய்யத்  தேவையான உயர்நிலைகளை  திட்டமிட்டு, அதன் மூலம் அது என்ன நிலைகள் மற்றும் சில இடைநிலை இலக்குகளை அடைய வேண்டும் என்று தோராயமாகத் தெரிந்து செயல்படுத்துகிறார்கள்.

இந்த பணியை முடிக்க ரோபோ எடுக்கும் ஒவ்வொரு அடியையும் முதலில்  அல்காரிதம் மூலம் டிஃப்ஸ்கில்(Tiffs) வேலை செய்கிறது.

அல்காரிதம் என்றால் என்ன?

“ஒரு பொருளின் ஆரம்ப நிலை மற்றும் இலக்கின் இருப்பிடம் நெருக்கமாக இருக்கும் குறுகிய அடிவான பணிகளை தீர்க்கும் பாதை தேர்வுமுறை” அல்காரிதம் என அழைக்கப்படுகிறது.

அல்காரிதம், சிமுலேட்டரில் உள்ள தகவலைப் பயன்படுத்தி, செயல்பாட்டின் ஒவ்வொரு கட்டத்திலும், ஒரு நேரத்தில் மாவை எவ்வாறு நகர்த்த வேண்டும் என்பதை அறிந்து, பின்னர் அந்தப் பாதைகளை வெளியிடுகிறது.

இது ஒவ்வொரு செயலுக்கும் குறிப்பிட்ட, குறுகிய அடிவானப் பாதைகளை உருவாக்குகிறது மற்றும் கருவிகளுக்கு நேரடியாக கட்டளைகளை அனுப்புகிறது.

முதலில், விஞ்ஞானிகள் இந்த நுட்பத்தை மூன்று வெவ்வேறு உருவகப்படுத்தப்பட்ட மாவை கையாளுதல் பணிகளுடன் சோதித்தனர்.

இந்த சோதனை மற்றும் பிழை மூலம் ரோபோ கற்றலை நம்பியிருக்கும் பிற பிரபலமான இயந்திர கற்றல் நுட்பங்களை டிஃப்ஸ்கில் மாற்றி அமைத்தனர்.

டிஃப்ஸ்கில்(DiffSkill) மட்டுமே மூன்று மாவை கையாளுதல் பணிகளையும் வெற்றிகரமாக முடிக்க முடிந்தது என்று தெரிவித்துள்ளனர்.

படங்களுக்குப் பதிலாக 3D தரவை உள்ளீடுகளாகப் பயன்படுத்துவதன் மூலம் DiffSkill இன் செயல்திறனை மேம்படுத்த ஆராய்ச்சியாளர்கள் எண்ணியுள்ளனர்.

அது உருவகப்படுத்துதலில் இருந்து நிஜ உலகிற்கு மாற்றுவது கடினம், மேலும் துணி கையாளுதல் போன்ற பல்வேறு பணிகளுக்கு இந்த முறையைப் பயன்படுத்துவார்கள் என்று நம்புகிறார்கள்.

Also Read: Latest Water Purifier Technology: சூரிய ஒளி மற்றும் நானோ தொழில்நுட்பம் மூலம் தண்ணீரை சுத்தம் செய்யும் புதிய தொழில்நுட்பம்..!

எதிர்காலத்தில், வயதானவர்கள் அல்லது குறைபாடுகள் உள்ள ஒருவருக்கு உணவளிக்கும், குளிக்கும் அல்லது ஆடை அணியும் பராமரிப்பு ரோபோகளுக்கு இந்த முறை பயன்படுத்தப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *