Kuzhithurai Diocese youth movement: குழித்துறை மறைமாவட்டம், முளகுமூடு மறைவட்ட இளைஞர் இயக்க நற்பணிகள்..!
Kuzhithurai Diocese youth movement: குழித்துறை மறைமாவட்டம், முளகுமூடு மறைவட்ட இளைஞர் இயக்க நற்பணிகள்..!
குழித்துறை மறைமாவட்டம், முளகுமூடு மறைவட்ட இளைஞர் இயக்கம் கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு உதவும் விதமாக ஒவ்வொரு நாளும் பல நற்பணிகளைச் செய்துவருகிறது.

Kuzhithurai Diocese youth movement:
அந்த வகையில் குழித்துறை மறைமாவட்டம், முளகுமூடு மறைவட்ட இளைஞர் இயக்கம் சார்பாக சாலையோரம் வசிக்கும் ஏழைகள் 100 பேருக்கு உணவு அளிக்கப்பட்டது.
இந்த உணவை அன்பளிப்பாக வழங்கியது கோழிப்போர்விளை பங்கு சமுகத்தை சார்ந்த திரு அருள்ராஜ் குடும்பம், மேலும் இந்த நன்கொடையை முளகுமூடு மறைவட்ட இளைஞர் இயக்க இயக்குனர் பணி ஆல்பின் ஜோஸ் பெற்று தந்தார்.
மேலும் இதே முளகுமூடு மறைவட்ட இளைஞர் இயக்கம் சார்பாக மலவிளை பகுதியில் கொரானாவால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வாழும் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களைச் சந்தித்து அவர்களுக்கு காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இதற்கான உதவியினை குழித்துறை மறைமாவட்டம் இளைஞர் இயக்க இயக்குனர் சுந்தர்சிங் அவர்களும், இந்த நன்கொடையினை அஸ்ரப் (மணலிக்கரை) மற்றும் அனீஸ் (முகிலன்கரை) அவர்களும் பெற்று தந்தனர்.
மேலும் இந்த இன்னலான காலகட்டங்களில் அயராது பணிபுரிந்து வரும் காவலர்களை ஊக்குவிக்கும் விதமாக தக்கலை காவல் நிலையத்தில் பணிபுரியும் 25 காவலர்களுக்கும் உணவு அளிக்கப்பட்டது.
இந்த உணவை அன்பளிப்பாக வழங்கியது முகமாத்தூர் பங்கு சமுகத்தை சார்ந்த திரு சிபி மற்றும் திரு பெஞ்சமின் ஆகியோரின் குடும்பம், மேலும் இந்த நன்கொடையை முளகுமூடு மறைவட்ட இளைஞர் இயக்க இயக்குனர் பணி ஆல்பின் ஜோஸ் பெற்று தந்தார்.
COME-TRUST:
மேலும் ஒரு நற்பணியாக குழித்துறை மறைமாவட்ட அருட்பணி பேரவையின் கொரோனா, பணிகளில் ஒரு பகுதியாக, இறந்தவரின் நல்லடக்கமானது, இலந்தவிளை பங்கில் நடைபெற்றது.


இதற்கு உதவி புரிந்தவர் திரு. M.மெர்லின் ஜோஸ், மறைமாவட்ட, பங்கு அருட்பணி பேரவை துணை தலைவர் மற்றும் திரு.R.லாறன்ஸ், அஞ்சாலி அன்பியம் ஆகியோர் ஆவர்.
01-06-2021 அன்று COME-TRUST சார்பாக தயார் செய்த உணவுப் பொருட்களை குழித்துறை மறைமாவட்டம் புத்தன் கடை வட்டார இளைஞர்கள் சார்பாக சாலையோரம் வசிக்கும் ஏழைகளுக்கு வழங்கப்பட்டது.
மேலும் 03-06-2021 அன்று குழித்துறை மறைமாவட்டம், திரித்துவபுரம் வட்டார இளைஞர் இயக்கம் சார்பாக 60 உணவு பார்சல்கள் சாலையோர மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த உணவை மேல்புறம் பங்கு குடும்பங்கள் அன்பளிப்பாக வழங்கினர். மேலும் COME-TRUST வட்டார செயற்குழு இந்த உணவை மக்களுக்கு பகிர உதவியது.

குழித்துறை மறைமாவட்ட இளைஞர் இயக்கம் முயற்சியால், கன மழையால் சேதமடைந்த மருதன்கோட்டை சார்ந்த திரு. ராஜன் அவர்களின் இல்லமானது மறைமாவட்ட சமூக சேவை சங்கம்(KIDSS) உதவியுடன் சீரமைக்கப்பட்டது.
புனித தொன்போஸ்கோ இளைஞர் இயக்கம் கோணங்காடு சார்பாக இந்த ஊர் பொதுமுடக்கம் சமயத்தில் வருமானம் இன்றி தவித்த 70 ஏழை, எளிய குடும்பங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.
குழித்துறை மறைமாவட்ட இளையோர் பணிக்குழு சார்பாக பங்கு தளங்களில் COVID-19 பரிசோதனை முகாம்கள் நடத்த திருவாளர். Edwin அவர்களை தொடர்பு கொள்ள 9488489311 என்ற எண்ணை அழைக்கலாம்.
குழித்துறை மறைமாவட்ட இளையோர் பணிக்குழு இந்த கொரோனா பேரிடர் சமயத்தில் மக்களுக்கு செய்யும் சேவைகள்:
கொரோனா சிகிச்சை படுக்கை வசதி தகவல்
தனிமைப்படுத்தலில் இருப்போருக்கு உணவு வசதி
மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகள் வாங்க உதவி
கபசுரக் குடிநீர் வசதி
சாலையோர மக்களுக்கான உணவு வசதி
இன்னும் பிற உதவிகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்கி வருகிறது.
மேலும் இதனோடு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இலவச ஆம்புலன்ஸ் சேவையையும் செய்து வருகிறது. இந்த சேவை பெற தொடர்பு எண்: 8056000826.
இறந்தோரை நல்லடக்கம் செய்யவும் உதவி புரிகிறது இந்த இளையோர் பணிக்குழு. இந்த சேவை பெற தொடர்பு எண்: 8056000826(திரு. மெர்லின் ஜோஸ்)
Also Read:Mananvilai sports and service club சார்பாக ₹ 7 லட்சத்தில் ஏழை விதவைக்கு வீடு
மேலும் இந்த கொரோனா பேரிடர் காலத்தில் COVID-19 நோய்க்கான அறிகுறிகள் மற்றும் சந்தேகங்களை தெரிந்து கொள்ளவும் குழித்துறை மறைமாவட்ட இளையோர் பணிக்குழு, குழித்துறை மறைமாவட்டம் சமூக சேவை சங்கம் தூய சவேரியார் தாதியர் கல்லூரியுடன் இணைந்து மருத்துவர்களை தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்துள்ளது.
தனித்திருப்போம்..! விழித்திருப்போம்..! கொரோனாவை வெல்வோம்..!