இயற்கையோடு வாழ்வோம்சமையல் குறிப்புகள்செய்திகள்

Kitchen Tips: இல்லத்தரசிகளுக்கு உதவும் விதமாக அமையும் சமையல் குறிப்புகள்:

Kitchen Tips: இல்லத்தரசிகளுக்கு உதவும் விதமாக அமையும் சமையல் குறிப்புகள்:

பெரும்பாலான வீடுகளில் இல்லத்தரசிகள் சமையல்கட்டில் தான் தங்கள் பொழுதை கழிக்கின்றனர்.

Kitchen Tips and Tricks

Kitchen Tips and Tricks:

அவர்களுக்கு சந்தோஷம் என்பது சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டு பார்த்தவர்கள் கூறும் பாராட்டே ஆகும்.

அத்தகைய பாராட்டினை மென்மேலும் பெற சில குறிப்புகளை அறிவோம் வாருங்கள்.

பூரி:

பொதுவாக பூரி சுடும் போது அது மென்மையாகவும், பெரியதாக ஊதியும் வரவேண்டும் என்பதை தான் அதிகம் விரும்புவோம்.

அவ்வாறு வர வைப்பதற்க்கு  பூரி மாவுடன் கொஞ்சம் நெய்யை கலந்து பிசைந்தால் போதும்.

மீண்டும், பூரி மாவினை, சப்பாத்திக்கு மாவை ஊற வைப்பது போல அதிக நேரம் ஊற வைக்க வேண்டாம். அதை உருட்டும் போது கொஞ்சம் தடியாக உருட்டி கொள்ள வேண்டும்.

அவ்வாறு செய்தால் பூரி நீங்கள் விரும்பிய மாதிரி கிடைக்கும்.

உருளைக்கிழங்கு:

நாம் உருளைக் கிழங்குகளை உரித்த பிறகு, அதன் நிறம் அதிக நேரம் கழிந்ததும் மாறிவிடும்.

நிறம் மாறாமல் இருக்க சிறிதளவு குளிர்ந்த நீரில் எலுமிச்சை சாற்றை பிழிந்து அதில் போட்டு பாருங்கள், உருளைக்கிழங்கு புதிதாக அப்படியே இருக்கும்.

பால்:

சில நேரங்களில் பாலை காய்ச்சும் போது அது பாத்திரத்தின் அடியில் ஒட்டிவிடும்.

அவ்வாறு அது ஒட்டுவதை தடுக்க முதலில் பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி விட்டு பின்பு பாலை ஊற்றவும்.

fruits

சப்போட்டா, அன்னாசி:

சப்போட்டா, அன்னாசி போன்ற பழங்களை வாங்கி அதை வெளியில் கொஞ்சம் வெப்பமான இடத்தில் வைக்க வேண்டும்.

உடனே கொண்டு போய் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

சாப்பாடு உதிரி உதிரியாக வர:

சாப்பாடு உதிரி உதிரியாக வர, நல்ல வெண்மை நிறத்தில் இருக்க வேண்டும் என்றால் சாதம் வடிக்கும் போது கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்த்தால் போதும்.

நீங்கள் நினைத்த மாதிரி சாதம் உதிரியாக வரும்.

பன்னீர்:

பன்னீரை அதிக நாட்கள் fridge-ல் வைத்திருந்தால் அது மென்மையாக இல்லாமல் ரொம்பவே கடினமாக மாறிவிடும்.

அது மீண்டும் பழைய நிலையை அடைய  கொஞ்ச நேரம் வெந்நீரில் வைத்து எடுத்தால் போதும்.

காய்கறிகள்:

பொதுவாக காய்கறிகள் சமைக்கும் போது மூடி வைத்து சமைக்கக் கூடாது.

மூடி வைத்து சமைத்தால் அதன் நிறமும், மணமும் வேறு மாதிரியாக மாறிவிடும்.

இயற்கையான நிறமும், மணமும் இருக்க திறந்து வைத்து சமைத்துப் பாருங்கள்.

எலுமிச்சை, சாத்துக்குடி:

எலுமிச்சை சாத்துக்குடி பிழிவதற்கு முன்னர் கொஞ்சம் வெந்நீரில் வைத்து எடுத்து பிழிந்து பாருங்கள், பழங்களிலிருந்து நிறையச் சாறு கிடைக்கும்.

பருப்பு:

பருப்பு சீக்கிரம் வேகுவதற்கு கொஞ்சம் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள், இதனால் அதன் சுவையும், புரதமும் வெளியேறாமல் முழுமையாக கிடைக்கும்.

இட்லி:

இட்லி மாவு அரைக்கும் பொழுது சரியாக அரை படாமல் இட்லி கெட்டியாக வந்தால் பச்சையாக இருக்கும் அப்பளங்களை 4 எடுத்து தண்ணீரில் முக்கி நனைய விட்டு மிக்ஸியில் நைசாக அரைத்து மாவுடன் கலந்தால் போதும், இட்லி குஷ்பூ இட்லி போல மெத்தென்று வரும்.

குலாப் ஜாமுன் (gulab jamun) செய்பவர்களுக்கு:

குலாப்ஜாமுன் உடையாமல் இருக்க,சர்க்கரையை பாகுவை காய்ச்சிய பின்பு, அதை நன்கு ஆற விட வேண்டும்.

Also Read:How to increase platelets: ஆன்டி-ஆக்சிடண்டுகள் நிறைந்த எளிமையான உணவுகள் என்னென்ன?

ஆறிய பாகில் ஜாமூன்களை போடும் பொழுது விரிசல் விழாமல், குலாப்ஜாமுன்( gulab jamun)உடையாமல் அப்படியே கிடைக்கும்.

இவ்வாறு சிறு சிறு குறிப்புகளை நாம் தெரிந்து வைத்திருந்தால் அது சமையலுக்கு பயனுள்ளதாகவும் ருசியை மேலும் அதிகரிக்கும்.